Sunday 16 September 2012

இயலாமை பென்சன் (Rounding up of Disability Pension)



வரையறுக்கப்பட்ட இயலாமை பென்ஷன்
(Rounding up of Disability Pension)
(PCDA(P) Circular No.429 dt.04.03.20100)

ஒரு படை வீரர் தனது பணிக்காலம் முடியும் முன்னதாக,  இயலாமை காரணமாக,  மேலும் பணி புரியும் தகுதி இழந்து உடனே பணியிலிருந்து வெளியே அனுப்பப்படும்போது (Only invalid cases) அவர்களுடைய இயலாமை பென்சன் (Disability Pension) மூன்று முக்கிய சதவீதத்தில் நிர்ணயிக்கபடுகிறது.  இந்த சலுகையானது முதலில் 01.01.1996 க்கு  பின்னர் பணி விலகி வந்தவர்களுக்குத்தான்  வழங்கப்பட்டது.  பின்னர் 01.01.1996 க்கு முன்னர் வெளி வந்தவர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது.  இதன்படி ஒருவருக்கு இயலாமை சதவீதத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த இயலாமை பென்சன் கீழ்க்கண்ட மூன்று முக்கிய சதவீதத்திர்க்குள் வரையறுக்கப்பட்டு வழங்கபடுகிறது.

50 சதவீதத்துக்கு குறைவாக இயலாமை உள்ளவர்களுக்கு 50% இயலாமை பென்சன் வழங்கப்படும்.(Rs/1755) (சிப்பாய்)

51 முதல் 75 சதவீதம் வரை உள்ளவர்களுக்கு 75% இயலாமை பென்சன் வழங்கப்படும்.(Rs.2633)(சிப்பாய்)

76 முதல் 100 சதவீதம் வரை உள்ளவர்களுக்கு 100% இயலாமை பென்சன் வழங்கப்படும்.(Rs.3510)(சிப்பாய்)

01.01.1996 க்கு  முன்னர் பணி விலகி வந்தவர்கள் இந்த பலனை பெற ஒரு குறிப்பிட்ட படிவத்தில் பென்சன் பெரும் வங்கி மூலம் ரெகார்ட் ஆபிசுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேல் கூறிய அரசு ஆணைக்கும், விண்ணப்ப படிவத்துக்கும்

இந்த அரசாணை வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த பலன் கிடைக்க வில்லை.

நம் படைவீரன்களின் அறியாமையும், CDA அலுவலகத்தின் மெத்தன போக்கும்தான் இதற்க்கு காரணம்.

காண்டீனில் தன் கோட்டாவை வாங்குவதில் உள்ள ஆர்வம்
இந்த பென்சன் விசயத்தில் இல்லை நம் படை வீரர்களிடம்.











No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...