Monday 23 November 2015

ஜீவன் பிரமாண் எளிதாக்கப்பட்டுள்ளது





உயிர் சான்றிதழ் (LIFE CERTIFICATE)
வழங்குவது எளிதாக்கபட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்
1.  ஆதார் அடையாள அட்டை.
2.  பென்சன் ஆணை எண்.
3.  வங்கி கணக்கு எண்.
4.  உங்களுடைய கை பேசி.

ஜீவன் பிரமாண் என்னும் இணைய தளத்தில் உங்கள் ஆதார் எண், பென்சன் ஆணை எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து உங்களுடைய கை விரல் ரேகையை பதிவு செய்யும் பட்சத்தில் தங்களுடைய பெயர் பதிவு செய்யப்பட்டு ஒரு அடையாள எண் வழங்கப்படும்.  இந்த பதிவை நீங்கள் நவம்பர் மதத்தில் இணைய தள வசதியும், கை ரேகை பதிவு  செய்யும் வசதியுடைய எந்த ஒரு சேவை மையத்திலும் செய்யலாம்.  இப்படி செய்துவிட்டால் நீங்கள் வங்கிக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை.  இந்த பதிவு மூலம் அச்சிட்டு பெறப்பட்ட சீட்டை நீங்கள் வங்கியில் கொடுத்தால் போதும்.

எக்ஸ் வெல் அறக்கட்டளை, வங்கிக்கு நேரில் செல்லமுடியாத வயதான, நோய்வாய் பட்ட பென்சனர்களுக்கு அவர்கள் வீட்டிற்கு கணிப்பொறியுடன் சென்று இந்த உயிர் சான்றிதழ் பதிவை செய்து கொடுக்கிறது.

இந்த சேவை தேவைபடுவோர் எங்களை தொடர்பு கொள்ளவும்.

எக்ஸ் அறக்கட்டளை,
15G, மிலிடரி லைன்,
சமாதானபுரம், பாளையம்கோட்டை.
போன்: 0462-2575380, 9894152959, 9786449036

Tuesday 10 November 2015

ஒன் ரேங்க் ஒன் பென்சன் அறிவிப்பு





ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் அறிவிப்பு
 வெளி வந்துள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்.

1.      01.01.2013 இல் டிச்சார்ஜில் வருபவர்களுக்கு வழங்கப்படும் பென்சன் அதற்க்கு முன்னதாக வெளி வந்த அனைத்து பென்சனர்களுக்கும் 01.07.2014 முதல் வழங்கப்படும்.
2.      2013 இல் ஒய்வு பெரும் ராணுவ வீரருடைய ரேங்க் மற்றும் சர்விஸ் அடிப்படையில் வழங்கப்படும் பென்சன் மற்றவர்களுக்கு 2013 இல் ஒய்வு பெரும் ஒருவருடைய ரேங்க் மற்றும் சர்விஸ் அடிப்படையில் கிடைக்கும் குறைந்த பென்சன் – கூடுதல் பென்சன் ஆகியவற்றின் சராசரி (Average) அடிப்படையில் பழைய பென்சனர்களுக்கு பென்சன் 01.07.2014  முதல் மாற்றி அமைக்கப்படும்.
(இதன் முழு விபரம் அரசாணைகள் வந்த பின்னர்தான் தெரியும்)
3.      இந்த புதிய முறையில் யாருக்கேனும் பென்சன் குறைவாக வரும் பட்சத்தில் அவர் தற்போது வாங்கும் கூடுதல் பென்சன் பாதுகாக்கப்படும்.
4.      அரியர் தொகையானது நாலு தவணைகளில் அரையாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
5.      ஆனால் அனைத்து வகை குடும்ப பென்சனர்களுக்கும் ஒரே தவணையில் வழங்கப்படும்.
6.      வரும் காலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராணுவ பென்சனர்களுடைய பென்சன் மாற்றி அமைக்கப்படும்.  அடுத்த மாற்றம்  2019 இல் வரலாம்.
7.      சுய விருப்பத்தின் அடிப்படையில் ராணுவ பணியிலிருந்து விலகி வருபவர்களுக்கு (under Rule 13(3) 1(i) (b) 13 (3) 1 (iv) or Rule 16B of Army Rule 1954 or equivalent Navy & Air Force) ஒன் ரேங்க் ஒன் பென்சன் பயங்கள் கிடைக்காது.
8.      ஒன் ரேங்க் ஒன் பென்சனை அமுல் படுத்துவதில் உள்ள குறைபாடுகளை ஒரு நீதி மன்ற குழு விசாரித்து ஆறு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கவேண்டும்.
9.      அனைவருக்கும் உரிய புதிய பென்சன் அடங்கிய பட்டியல் விரைவில் தயாரிக்கப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

 நமது கோரிக்கையை ஏற்றுகொள்ள வில்லை இந்த அரசு.  நாம் 185 நாள் உண்ணாவிரதம் இருந்தும் எந்த பயனும் இல்லை.

புதிய பென்சன் எவ்வாறு நிர்ணயிப்பார்கள் என்று நம்மால் யூகிக்க முடிய வில்லை.  அறிவிப்பு வெளி வந்தும் நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

Monday 19 January 2015

ராணுவ தீர்ப்பாயம் (Armed Forces Tribunal)



 
ஒவ்வொரு ராணுவ வீரனும் மறக்க முடியாத தளபதி.
ராணுவ தீர்ப்பாயம் (Armed Forces Tribunal)

மத்திய அரசின் ஒவ்வொரு துறைக்கும் தீர்ப்பாயங்கள் இருந்த போதிலும், ராணுவத்தினருக்கு மட்டும்  கடந்த 62 ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது.  கடைசியாக 08.08.2009 அன்றுதான் ராணுவத்தினருக்கான தனிப்பட்ட தீர்ப்பாயங்கள் தொடங்கப்பட்டன.

இதுநாள் வரை ராணுவத்தினருக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நிவாரணம் தேடி, ராணுவ அமைச்சகத்துக்கு எதிராக நாடெங்கிலும் உள்ள 15  தீர்ப்பயங்களில் வழக்குகள் மலைபோல் குவிந்தன.

அடிமைபோல் நடத்தப்பட்ட இந்த ராணுவத்தினர் முதல் முறையாக தனக்கென நியமிக்கப்பட்ட ஒரு நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் நீதி கேட்டு முறையிட்டனர்.  பல ஆயிரக்கணக்கான நல்ல தீர்ப்புகளை பெற்றனர்.  ஆனால் முடிவில் நடந்தது என்ன ?

அத்தனை தீர்ப்புக்களையும் அவமதித்த ராணுவ அமைச்சகம் பாதிக்கப்பட்டவர்களை உச்ச நீதிமன்றத்துக்கு இழுத்தது.  நல்ல நிர்வாகம் வேண்டும் என்று கோஷமிடும் இந்த அரசு (Good Governance) ஈவு இரக்கமின்றி ஆயிரகணக்கான போர் காயமுற்ற வீரர்களின் பென்சன் வழக்குகளை மேல் முறையீட்டுக்கு உச்ச நீதி மன்றத்துக்கு அனுப்பியது.  ராணுவ அமைச்சகத்தின் அராஜக போக்கை கண்ட உச்ச நீதிமன்றம் அனைத்து மேல் முறையீடுகளையும் கடந்த 10.12.2014 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பீல்ட் மார்ஷால் என்ற புகழ் பெற்ற பதவி வழங்கிய இந்திய அரசு அவருக்கு 30 ஆண்டுகளாக அந்த பதவிக்குரிய சம்பளம் வழங்கவில்லை.  உலகில் பீல்ட் மார்ஷால் பதவி பெற்றவருக்கு ஒய்வு என்பது கிடையாது.  (A Field Marshal never Retires) கடைசியில் நமது ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் தலையிட்டு அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக ரூ.1.6  கோடி அறியர் தொகைக்கான காசோலையை ஒரு செயாலாளர் அவசர அவசராமக மருத்துமனைக்கு டெல்லியிலிருந்து வெல்லிங்டன் சென்று கொடுத்தார்.  அவர் இறுதி சடங்கில் குறைந்த பட்சம் நமது முப்படை தளபதி கூட கலந்து கொள்ளவில்லை. சினிமா ஷூட்டிங்கில் காயமுற்ற அமிதாப் பச்சனை பார்க்க திருமதி இந்திரா காந்தி மும்பை மருத்துவ மனைக்கு சென்றார்.  கோடீஸ்வரர் அம்பானி அடக்கத்துக்கு திரு அத்வானி சென்றார்.  இந்திய அரசு மநேக்ஷாவுக்கு இந்த பதவி கொடுத்திருக்கவும் வேண்டாம் இப்படி அவமதிதிருக்கவும் வேண்டாம்.

“இருபதாம் நூற்றாண்டில்  பங்களா தேஷ் “ என்ற ஒரு புது நாட்டையே உருவாக்கியே ஒரு ராணுவ தளபதிக்கே இந்த நாட்டில் இந்த கதி என்றால் சாதாரண படை வீரனை யார் கண்டு கொள்வார்கள்.

“நாட்டை காத்த வீரர்களை நினைக்காத நாடு இனி யாரும் அதற்காக உயிர் விடும் தகுதியை இழந்து விடும் “ என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

“ வரும் காலங்களில் நாட்டை காக்க வேண்டும் என்ற புனிதமான எண்ணத்துடன் ராணுவத்துக்கு வருபவர்களைவிட ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று வருபவர்கள் அதிகமாகி நமது நாட்டின் பாதுகாப்பு ஒரு கேள்வி குறியாகிவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.  நல்ல சம்பளத்தில் சிறு சிறு வேலைகளுக்கு ஆள் கிடைக்காத இந்த காலகட்டத்தில், ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் மட்டும் ஏன் இத்தனை கூட்டம் என்றுதான் எமக்கு புரியவில்லை. 

Thursday 15 January 2015

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்




 ஒளி பிறக்கட்டும்
இருள் விலகட்டும்
அருள் கிடைக்கட்டும்
பொருள் கிடைக்கட்டும்
புகழ் பரவட்டும்
நலம் வளரட்டும்
அனைவருக்கும்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...