Thursday 26 December 2013

இராணுவ தீர்பாயங்கள் சாதித்தது என்ன ?





இராணுவ தீர்பாயங்கள் சாதித்தது என்ன ?

சண்டிகர் இராணுவ தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட சுமார் 3000  நல்ல தீர்ப்புகள் இன்னும் இராணுவ அமைச்சகத்தால் நடைமுறை படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இராணுவ தீர்ப்பாயங்களை தன் கைப்பாவையாக நடத்தும் இராணுவ அமைச்சகம், இந்த தீர்ப்பாயத்தை மத்திய சட்ட அமைச்சகத்தின் மேற்பார்வையில் கொண்டுவர மறுக்கிறது.

இந்த தீர்ப்பாயத்தின் பல நல்ல தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின்னரும், இராணுவ அமைச்சகம் அதை அமுல்படுத்த மறுக்கிறது.  நீதி மன்ற அவமதிப்பு வழக்கு கூட தொடுக்க முடியாதபடி இராணுவ தீர்ப்பாய சட்ட திட்டங்கள் இராணுவ அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு, நல்ல முறையில் செயல் பட விடாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.  பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தீர்ப்பாயங்கள் வெறும் கண் துடைப்பு என நிரூபணமாகி வருகிறது.

அமுல் படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தீர்ப்புகளை அமுல் படுத்த, இராணுவ அமைச்சகத்தின் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர ஆவன செய்யவேண்டும் என்று மேஜர் நவதீப் சிங் என்ற வழக்கறிஞர் பஞ்சாப் ஹரியானா உயர் நீதி மன்றத்தில் ஒரு போது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.  பொதுவாக வழக்கு தொடுத்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க சில தீர்ப்புகளில் வகை செய்யப்படும்.  ஆனால் இந்த நஷ்ட ஈட்டு தொகையை நீதி மன்ற பதிவாளருக்கு வழங்க இராணுவ அமைச்சகம் பரிந்துரைப்பது ஒரு மாபெரும் கொடுமை.  இதை எதிர்த்தும் மேஜர் நவதீப் சிங் ஒரு போது நல வழக்கு தொடுத்துள்ளார்.

ஆனால் இராணுவ அமைச்சகம் எதையும் கண்டு கொள்வதில்லை.  இந்த நிலை தொடர்ந்தால் முன்னாள் /இந்நாள் இராணுவ வீரர்கள்  இந்த நீதி மன்றங்களின் மீது  வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விடுவார்கள்.

Wednesday 20 November 2013

ஆறாவது ஊதிய கமிசன் இன்னும் முடியவில்லை.





ஆறாவது ஊதிய கமிசன் ௦அரியர்ஸ் 01.01.2006 முதல் கிடைக்குமா ?

அரசு தனது ஊழியர்களுக்கு 6வது ஊதிய கமிசன் அரியர் தொகையை 01.01.2006  முதல் வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது.

அரசின் மேல் முறையீடுகள்  அனைத்தையும் உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஊதிய கமிசனின் சிபாரிசுகளை சரியாக அமுல்படுத்தாத காரணத்தால் சில முரண்பாடுகளை நீக்கி அதன் பலன்களை 01.01.2006 முதல் வழங்காமல் அரசு தன்னிச்சையாக 24.09.2012 முதல் வழங்க ஆணையிட்டது.  இதை எதிர்த்து வழக்காடி வெற்றி பெற்றுள்ளனர்.  (இன்னமும் அரசு மனம் இறங்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.)

“நீதி நிச்சயம் வெல்லும் “ என்பது நிரூபணமாகி விட்டது.

Friday 1 November 2013

எமது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 

Friday 13 September 2013

இரங்கல் செய்தி





இரங்கல் செய்தி

நாகப்பட்டினம் மாவட்டம், கீளாவூரை சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரர் CPL S. சந்திர சேகர் 12.09.2013  வியாழக்கிழமை அன்று காலமானார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.  இறுதி சடங்கு 13.09.2013 வெள்ளிகிழமை நடைபெறும்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.  அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.
தொடர்புக்கு : K.ரவிச்சந்திரன் 
போன் :9443908103

Sunday 25 August 2013

ஒய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் சங்கம் தமிழ் நாடு கிளை கல்வி உதவி தொகை அறிவிப்பு 2013-14




ஒய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் சங்கம்
தமிழ் நாடு கிளை
விமானப்படை நிலையம், தாம்பரம்,
சென்னை 46.
தொலைபேசி: 044-22392546, 22396565

கல்வி உதவி தொகை அறிவிப்பு 2013-14

தமிழ் நாட்டிலுள்ள ஒய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் (உறுப்பினர்கள்) குழந்தைகளுக்கு இவ்வாண்டு கீழ் கண்ட கல்வி
உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

1. Sqn.Ldr. KV பிள்ளை மற்றும் சரஸ்வதி பிள்ளை கல்வி உதவி தொகை.(Rs.4,500 வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு)

2. HFO ஜாபாலி மற்றும் திருமதி பட்டம்மாள் ஜாபாலி கல்வி உதவி தொகை. (Rs.4500  வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு)

3. திரு ஜார்ஜ் மற்றும் திருமதி ஹெலன் கல்வி உதவி தொகை (Rs.4500 வீதம் இரண்டு குழந்தைகளுக்கு). Gp.Capt. Eslin D’Couto VM தனது பெற்றோரை கௌரவிக்கும் பொருட்டு வழங்குவது.

4.  Air Cmde.K. லக்ஷ்மணன் மற்றும் திருமதி மீனா லோசினி லக்ஷ்மணன் ஆகியோர் வழங்கும் நிதி உதவி. Rs.5000  வீதம் இருவருக்கு.

5. ஜெரல்டின் டிகொட்டா திருமண நிதி உதவி Rs.10,000/-  Gp.Capt.Eslin D’Couto மறைந்த தன் தங்கை நினைவாக வழங்குவது.

மேற்கண்ட நிதி உதவிகள் அனைத்தும் 21.09.2013 அன்று நடைபெறும் சங்கத்தின் ஆண்டுவிழாவில் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் 07.09.2013 இக்குள் அனுப்ப வேண்டும்.



இவண்
  குருப் கேப்டன் A. சாம்பசிவராவ்
செயலாளர் 
 


எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...