Thursday 31 January 2013

DUAL FAMILY PENSION



இரண்டு குடுன்ப பென்சன் பெறுவது எப்படி ?

தகுதியுள்ள ஒவ்வொரு விதவைக்கும் பலவேறு கட்டங்களில் இந்த இரண்டாவது பென்சன் மறுக்கப்பட்டுள்ளது. அதை இப்போது பெறுவதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் விண்ணப்பங்களை தயார் செய்ய வேண்டும்.  குறிப்பாக 01.04.1985 க்கு முன்னர் ராணுவத்திலிருந்து வெளி வந்து மறு பணியில் சேர்ந்தவர்களுக்கு ராணுவ குடும்ப பென்சன் பற்றி எந்த குறிப்பும் இருக்காது.

மறு பணியில் இருப்பவர்கள் குடும்ப பென்சனுக்கு பதிவு செய்ய விண்ணப்பங்களை ராணுவ ரெகார்ட் ஆபீசுக்கு அனுப்பப்படும்போது அவை பெரும்பாலும் நிராகரிக்க பட்டன.  இந்த பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்போது இரண்டாவது பென்சனுக்கு விண்ணப்பத்தை அனுப்பும்போது  தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காரணம் குடும்ப பென்சனுக்கு இவர்கள் பெயரை பதிவு செய்வது மறுக்குபட்டிருக்கிறது.  எனவே இவர்கள் முதலில் குடும்ப பென்சனுக்கு தன் பெயரை முதலில் பதிவு செய்து அதன் பின்னர்தான் குடும்ப பென்சன் பெற முடியும். CDA  ஒரு பென்சன் ஆணை அனுப்ப ஆறு மாதம் வரை ஆகும்.

அடுத்து 01.04.1985 க்கு பின்னர் ராணுவ பணியிலிருந்து வெளி வந்தவர்களுடைய விதவைகள் பலதரப்பட்ட காரணங்களுக்காக குடும்ப பென்சன் பெறாமல் இருந்தால் இந்த அரசாணையின் மூலம் விரைவில் குடும்ப பென்சன் பெறலாம்.  அதாவது பாதிக்கபட்ட வர்களுடைய பெயர் ஏற்கனவே பதியபட்டிருந்து, சில காரணங்களுக்காக ராணுவ குடும்ப பென்சன் வாங்காமல் சிவில் குடும்ப பென்சன் வாங்கி கொண்டிருப்பவர்களுக்கு இந்த அரசாணையின் மூலம்  உடனே ராணுவ குடும்ப பென்சன் கிடைக்கும்.

சிலர் கையில் சிவில் குடும்ப பென்சன் ஆணை இருக்கும்.  ஆனால் பென்சன் வாங்காமல் இருப்பார்கள்.  இவர்கள் உடனே அந்த பென்சன் ஆணையின் நகலை சிவில் பென்சன் வழங்கும் அலுவலகத்துக்கு ஒரு விண்ணப்பத்துடன் அனுப்பவும்.  அதனுடன் இரண்டாவது பென்சன் வழங்கலாம் என்ற அரசு ஆணையையும் அனுப்பவேண்டும்.


விரைவில் இரண்டாவது குடும்ப பென்சன் பெற்று பேர குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ எங்கள் வாழ்த்துகள்.

இது சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவை எனில் எங்களை தொடர்பு கொள்ளவும்.





Tuesday 29 January 2013

பென்சன் பட்டியல் இணைப்பு



எமது பென்சன் வழிகாட்டி புத்தகத்துடன்
மேம்படுத்தப்பட்ட பென்சன் பட்டியல்களின் இணைப்பு.

24.09.2012  முதல் கிடைக்கவேண்டிய அனைத்து
கூடுதல் பென்சன் பட்டியல்
எமது பென்சன் வழிகாட்டி
 புத்தகத்துடன் கிடைக்கும். 
இரண்டு குடும்ப பென்சன் வழங்கும்
அரசாணையும் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இராணுவ பென்சனர்
வீட்டிலும் அவசியம்
இருக்கவேண்டிய பொக்கிஷம்.

ஒரு புத்தகத்தின் விலை ரூ.100 மட்டும்.
கொரியர் கட்டணம் ரூ.25 தனி.

உங்கள் தேவைக்கு தொடர்புகொள்ளவேண்டிய
தொலைபேசி எண்கள்.
9894152959, 9442801632
9894125019, 9786449036.

Saturday 26 January 2013

இரண்டாவது குடும்ப பென்சன்



பாரத ஸ்டேட் வங்கியில் மறு பணியில் சேர்ந்து
ஒய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர்களுக்கு
ஓர் வேண்டுகோள்

உலகத்திலேயே பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கிதான் அதிமான அளவு முன்னாள் இராணுவத்தினரை காவலர் பணிக்கு நியமித்தது அன்று.  இன்று நிலைமை வேறு. ஸ்டேட் வங்கியில் இந்த காவலர்கள் மிடுக்கான உடையில் நிற்கும் அழகே தனி.  பாரத ரிசர்வ் வங்கிக்கும், ஸ்டேட் வங்கிக்கும் பெருமை சேர்ப்பதில் இந்த காவலர்களுக்கு பெரும் பங்கு உண்டு.  இவர்களுக்கு கல்வி அறிவு குறைவாக இருந்த காரணத்தால், கடைசி வரை காவலர்களாக இருந்து ஒய்வு பெற்றனர்.  பெரும்பாலானவர்களுக்கு இந்த வங்கி பென்சன் கொடுக்க வில்லை என்பது பலருக்கு தெரியாது.

பாரம்பரியம்மிக்க இந்த பெரிய வங்கியில் பென்சன் திட்டம், அதுவும் குடும்ப பென்சன் திட்டம், நீதிமன்றம் சென்றுதான் பெற முடிந்தது.  இந்த வங்கியில் பணிபுரியும் ஒரு முன்னாள் படை வீரர், பென்சன் பெரும் தகுதி பெறுவதற்கு பல வினோதமான நிபந்தனைகள் இருந்தன.  இதன் காரணமாக இந்த வங்கியில் பணிபுரிந்த பெரும்பாலான முன்னாள் படை வீரர்கள் பென்சன் கிடைக்காமல் ஒய்வு பெற்றனர்.

காலபோக்கில் பென்சன் விதிகளில் சில மாற்றங்கள் வந்த காரணத்தால் ஒரு சில பேருக்கு பென்சன் கிடைக்க வாய்ப்பு கிடைத்தது.  இருந்த போதிலும் ஸ்டேட் வங்கியின் குடும்ப பென்சன் ஒட்டுமொத்தமாக இந்த முன்னாள் படை வீரர்களின் விதவைகளுக்கு மறுக்கப்பட்டது.  சரியான காரணம் இல்லாமல் மத்திய அரசின் பென்சன் விதிகளை (CCS Pension Rules) மேற்கோள் காட்டி குடும்ப பென்சன் மறுக்கப்பட்டது.  இதன் காரணமாக எண்ணற்ற விதவைகள் இந்த வங்கியுடன் எந்த தொடர்பும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.  ஆனால் பெரும்பாலான விதவைகளிடம் ஸ்டேட் வங்கியின் குடும்ப பென்சன் பெறுவதற்கான ஆணைகள் இருந்தும் பென்சன் கிடைக்காமல் இருக்கின்றனர்.

இப்போது மத்திய அரசு இதே போன்ற விதவைகள் 24.09.2012 முதல் இரண்டு பென்சன் பெற்றுக்கொள்ளலாம் என அரசாணைகள் வெளியிட்டுள்ளது.  காலம் கடந்து வந்துள்ள இந்த அரசாணையின் பயன் பாதிக்கப்பட்ட  அனைவருக்கும் போய் சேர வேண்டுமென்றால் அவர்கள் அனைவருக்கும் இந்த செய்தி தெரிய வேண்டும்.  இந்த செய்தியை அவர்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது ? 

வங்கியே முன்வந்து சுற்றறிக்கை விடலாம்.  ஸ்டேட் வங்கி பென்சனர் சங்கம் வேண்டிய உதவிகள் செய்யலாம். இதை படிக்கும் வாசகர்கள் தனக்கு தெரிந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு சொல்லலாம்.  மிலிடரி கேண்டீன், ECHS  பாலி கிளினிக்குகளில் நோட்டிஸ் ஒட்டி தெரிய படுத்தலாம்.  இன்னும் எத்தனையோ வழிகளில் நம் இனத்தவர்களுக்கு உதவி செய்யலாம்.

இந்த வலைப்பூவை நிர்வகிக்கும் EXWEL TRUST, IESM  மற்றும் SBI PENSIONERS ASSOCIATION  ஆகிய மூவரும் சேர்ந்து இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முயற்சிகள் செய்து வருகிறோம்.

இந்த பென்சன் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் உங்களுக்கு யாரேனும் தெரிந்தால், அவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எங்களுக்கு தெரிவிக்கவும்..

இந்த  செய்தி மற்ற அரசு நிறுவனங்களில் பணி புரிந்தவர்களுக்கும் பொருந்தும்.

எங்கள் தொலைபேசி எண் : 9894152959, 9786449036

நமது கூட்டு முயற்சியை ஒரு சமூக நலனுக்காக அர்ப்பணிப்போம்.

இரண்டு  குடும்ப பென்சன் அரசாணை பெற 
இங்கே கிளிக் செய்யவும்

Sunday 20 January 2013

இரண்டு குடும்ப பென்சன்.




இரண்டு குடும்ப பென்சன்
நமது நியாமான கோரிக்கைக்கு இணங்கியது அரசு.

இரண்டு குடும்ப பென்சன் மறுக்கப்பட்டது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.  இது போன்ற பென்சன் விதிகளை அரசியல்வாதிகள் உருவாக்கவில்லை.  அதிகார வர்க்கம்தான் உருவாக்கியது.  இதன் பாதிப்பு அவர்களுக்கு இல்லை.  ஆதி முதல் அந்தம் வரை அதிகார தோரணையில் கொடிகட்டி பறக்கும் இவர்களுக்கு அடிமட்ட மக்கள் படும் இன்னல்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.

இந்த நாட்டில் உள்ள தலை சிறந்த விஞ்ஞானிகள், புகழ்பெற்ற மருத்துவர்கள், சமூக சேவர்கள், தொழில் முனைவோர் போன்றவர்களுக்கு இல்லாத மரியாதை இந்த அதிகார வர்க்கத்துக்குத்தான் உள்ளது.   இது மாபெரும் துரதிர்ஷ்டம்.

அப்பாவி இராணுவ பென்சனர்களின் பென்சன் விதிகளில் ஒரு வரியை மட்டும் அமைதியாக சேர்த்துவிட்டு, பல்லாயிரகணக்கான விதவைகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள் இவர்கள்.  இரண்டு அரசு பணிகள் செய்த ஒரு இராணுவ வீரர் இரண்டு பென்சன் பெறவும் இரண்டு குடும்ப பென்சன் பெறவும் விதிகள் அனுமதிக்கும் போது விதவைகளுக்கு மட்டும் மறுப்பது என்ன நியாயம்.  இதனால் பெரிதும் பாதிக்க பட்டது குறைந்த பென்சன் வாங்கும் இராணுவ பென்சனர்கள்தான்.

காலம் மாறியது, நமது கல்வியறிவும் வளர்ந்தது.  நீதிக்காக குரல் எழுப்போனோம். இந்த அதிகார வர்க்கத்தின் ஏமாற்று வேலை வெட்ட வெளிச்சமாகியது.

இப்போது 24.09.2012  முதல் இரண்டு குடும்ப பென்சன் தடையில்லை என்று கூற, முன்பு சேர்த்த அந்த வரியை இப்போது நீக்கிவிட்டது.  நீதிமன்றங்களில் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் தேங்க காரணம் இந்த அதிகார வர்க்கம்தான் என்பதை அரசு உணர வேண்டும்.  நிர்வாக சீர்திருத்தம் போர்கால அடிப்படையில் நடக்கவேண்டும்.  காலம் தாழ்த்துவது நாட்டுக்கு நல்லதில்லை. நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.  நீதிக்காக போராடவேண்டும்.


Friday 18 January 2013

பென்சன் ஆணைகள் வந்துவிட்டது




நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பென்சன் ஆணைகள்
17.01.2013 இராணுவ அமைச்சகத்தால் வெளியிட பட்டுள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள்

இதன் பலன்கள் 24.9.2012 முதல் கிடைக்கும்.

இரண்டு குடும்ப பென்சன் 24.9.2012 முதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும்.
பென்சனிலும், குடும்ப பென்சனிலும் சில மாற்றங்கள்
பயன் தரும் வகையில் உள்ளன.

இயலாமை பென்சன், போர் காய பென்சனில்
சில மாற்றங்கள் உள்ளன.

மொத்தத்தில் நாம் மகிழ்ச்சியுடன்
வரவேற்கவேண்டிய ஒன்று.

முழு விபரங்களுக்கு

www.indianmilitary.info  என்ற தளத்தை பார்க்கவும்.



எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...