Sunday 2 September 2012

குடும்ப பென்சன் யார் யாருக்கு?



கருணை உள்ளம கொண்ட கடவுள்

குடும்ப பென்சன் யார் யாருக்கு?

ஒரு ராணுவ வீரன் பணிபுரியும் காலத்தில் இறந்துவிட்டால், சட்டப்படி திருமணம் செய்து கொண்ட மனைவிக்கோ அன்னது வாரிசுகளுக்கோ (சில நிபந்தனைகளுக்குட்பட்டு ) குடும்ப பென்சன் வழங்க படுகிறது.  இதேபோல் பென்சன் பெற்று வந்த ஒரு படை வீரர் இறந்து விட்டாலும் சட்டப்படி திருமணம் செய்துகொண்ட மனைவிக்கோ அல்லது வாரிசிகளுக்கோ வழங்கப்படும்.

சட்டப்படி திருமணமான மனைவிக்குத்தான் குடும்ப பென்சனில் முதல் உரிமை.  திருமணமாகாத படை வீரர் இறந்துவிட்டால் அவர் நாமினேஷன் கொடுத்தவருக்கு பென்சன் வழங்கப்படும்.  சில சமயங்களில் தெளிவான, சட்டப்படியான மனைவி இல்லாத பட்சத்தில் உரிய குடிம்ப பென்ஷனை யார் யாருக்கு வழங்கலாம் என்பதில் பல புதிய அரசாணைகள் வந்துள்ளன.  அவற்றில் சில :-

1. திருமணமாகாத, வேலை வாய்ப்பில்லாத 25 வயதுக்கு குறைவான படைவீரர் குழந்தைக்கு வயது மூப்பின் அடிப்படையில் உரிமை உண்டு.

2. உடல் ஊனமுற்ற, மன வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு (வருமானம் இல்லாத ) வயது வரம்பின்றி வாழ்நாள் முழுவதும் பென்சன் பெற தகுதி உண்டு.

3. திருமணமாகாத மகள், விவாக ரத்து பெற்ற மகள், விதவையான மகள் இவர்களுக்கும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு குடும்ப பென்சன் உண்டு.

4. படை வீரரை சார்ந்த பெற்றோருக்கும் சில நிபந்தனைக்குட்பட்டு, தாய்க்கு முதலிலும், தந்தைக்கு அதன் பின்னரும் பென்சன் பெற தகுதி உண்டு.

குடும்ப சூழ்நிலைகேற்ப குடும்ப பென்சன் பெற தகுதி உடையோர் மாறுபட நேரிடும்.  இதை மனதில் கொள்ளவேண்டும். 

இதை படிப்பவர்கள் நம் இன மக்களுக்கு உதவ வேண்டும். தன் வீட்டில் ஒரு விதவை மகள் அல்லது விவாக ரத்தான மகள் இருக்கிறாள் என்று வெளியில் சொல்லவே பலர் கூச்சபடுகின்றனர நம்பிக்கையுடன்  முழு விவரங்களையும் கூறி உரிய பயன் பெற வேண்டும்.

“உயர்ந்த எண்ணங்கள் ஒருவர் உயர்வுக்கு உதவும்.”
“சாதனையாளன் ஆவதற்கும் ஆசைப்படவேண்டும்”

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...