Tuesday 4 September 2012

பென்சன் கணக்கை இருவர் பெயரில் வைக்கலாம்



சேவை குறைபடினால் வங்கியில் கூட்டம் அலைமோதுகிறது
 வங்கி பென்சன் சேமிப்பு கணக்கை இருவர் பெயரில் வைத்து கொள்ளுங்கள்.

ஒரு பென்சனர் தன்னுடைய பென்சன் சேமிப்பு கணக்குடன் தன் மனைவி பெயரையும் சேர்த்து ஒரே கணக்காக வைத்து கொள்ளலாம்.  இருவரும் சேர்ந்த கணக்கு என்பது (Former or Survivor) அல்லது (Either or Survivor).
இந்த இரண்டில் எந்த அடிப்படையிலும் இருக்கலாம்.  தனக்குப்பின் தன் மனைவிக்கு பென்சன் வழங்கப்படும் என்ற ஆணையை நகல எடுத்து வங்கியில் கொடுக்கவேண்டும்.

இவ்வாறாக இருவரும் சேர்ந்து ஒரே கணக்காக வைக்கும் பட்சத்தில் இரண்டு பேரில் யார் வேண்டுமானாலும் பணம் எடுத்து கொள்ளலாம்.  இரண்டு பெரும் இணைந்து எடுத்த புகை படத்தையும் வங்கியில் கொடுத்து பாஸ் புத்தகத்தில் ஒட்டி வங்கியில் கையொப்பம் வாங்க வேண்டும்.  தேவைபட்டால் இரண்டு ATM  கார்டுகளும் வாங்கி கவனமாக கையாள வேண்டும்.

ஒவ்வொரும் ஆண்டும் நவம்பர் மாதத்தில் வங்கிக்கு நேரில் சென்று லைப் சர்டிபிகேட் கொடுக்க மறந்துவிடக்கூடாது.  இது முக்கியம்.  மறந்தால் பென்சன் நிறுத்தப்பட்டு விடும்.
                                             தொடரும் .............


No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...