Monday 19 January 2015

ராணுவ தீர்ப்பாயம் (Armed Forces Tribunal)



 
ஒவ்வொரு ராணுவ வீரனும் மறக்க முடியாத தளபதி.
ராணுவ தீர்ப்பாயம் (Armed Forces Tribunal)

மத்திய அரசின் ஒவ்வொரு துறைக்கும் தீர்ப்பாயங்கள் இருந்த போதிலும், ராணுவத்தினருக்கு மட்டும்  கடந்த 62 ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது.  கடைசியாக 08.08.2009 அன்றுதான் ராணுவத்தினருக்கான தனிப்பட்ட தீர்ப்பாயங்கள் தொடங்கப்பட்டன.

இதுநாள் வரை ராணுவத்தினருக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நிவாரணம் தேடி, ராணுவ அமைச்சகத்துக்கு எதிராக நாடெங்கிலும் உள்ள 15  தீர்ப்பயங்களில் வழக்குகள் மலைபோல் குவிந்தன.

அடிமைபோல் நடத்தப்பட்ட இந்த ராணுவத்தினர் முதல் முறையாக தனக்கென நியமிக்கப்பட்ட ஒரு நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் நீதி கேட்டு முறையிட்டனர்.  பல ஆயிரக்கணக்கான நல்ல தீர்ப்புகளை பெற்றனர்.  ஆனால் முடிவில் நடந்தது என்ன ?

அத்தனை தீர்ப்புக்களையும் அவமதித்த ராணுவ அமைச்சகம் பாதிக்கப்பட்டவர்களை உச்ச நீதிமன்றத்துக்கு இழுத்தது.  நல்ல நிர்வாகம் வேண்டும் என்று கோஷமிடும் இந்த அரசு (Good Governance) ஈவு இரக்கமின்றி ஆயிரகணக்கான போர் காயமுற்ற வீரர்களின் பென்சன் வழக்குகளை மேல் முறையீட்டுக்கு உச்ச நீதி மன்றத்துக்கு அனுப்பியது.  ராணுவ அமைச்சகத்தின் அராஜக போக்கை கண்ட உச்ச நீதிமன்றம் அனைத்து மேல் முறையீடுகளையும் கடந்த 10.12.2014 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பீல்ட் மார்ஷால் என்ற புகழ் பெற்ற பதவி வழங்கிய இந்திய அரசு அவருக்கு 30 ஆண்டுகளாக அந்த பதவிக்குரிய சம்பளம் வழங்கவில்லை.  உலகில் பீல்ட் மார்ஷால் பதவி பெற்றவருக்கு ஒய்வு என்பது கிடையாது.  (A Field Marshal never Retires) கடைசியில் நமது ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் தலையிட்டு அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக ரூ.1.6  கோடி அறியர் தொகைக்கான காசோலையை ஒரு செயாலாளர் அவசர அவசராமக மருத்துமனைக்கு டெல்லியிலிருந்து வெல்லிங்டன் சென்று கொடுத்தார்.  அவர் இறுதி சடங்கில் குறைந்த பட்சம் நமது முப்படை தளபதி கூட கலந்து கொள்ளவில்லை. சினிமா ஷூட்டிங்கில் காயமுற்ற அமிதாப் பச்சனை பார்க்க திருமதி இந்திரா காந்தி மும்பை மருத்துவ மனைக்கு சென்றார்.  கோடீஸ்வரர் அம்பானி அடக்கத்துக்கு திரு அத்வானி சென்றார்.  இந்திய அரசு மநேக்ஷாவுக்கு இந்த பதவி கொடுத்திருக்கவும் வேண்டாம் இப்படி அவமதிதிருக்கவும் வேண்டாம்.

“இருபதாம் நூற்றாண்டில்  பங்களா தேஷ் “ என்ற ஒரு புது நாட்டையே உருவாக்கியே ஒரு ராணுவ தளபதிக்கே இந்த நாட்டில் இந்த கதி என்றால் சாதாரண படை வீரனை யார் கண்டு கொள்வார்கள்.

“நாட்டை காத்த வீரர்களை நினைக்காத நாடு இனி யாரும் அதற்காக உயிர் விடும் தகுதியை இழந்து விடும் “ என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

“ வரும் காலங்களில் நாட்டை காக்க வேண்டும் என்ற புனிதமான எண்ணத்துடன் ராணுவத்துக்கு வருபவர்களைவிட ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று வருபவர்கள் அதிகமாகி நமது நாட்டின் பாதுகாப்பு ஒரு கேள்வி குறியாகிவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.  நல்ல சம்பளத்தில் சிறு சிறு வேலைகளுக்கு ஆள் கிடைக்காத இந்த காலகட்டத்தில், ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் மட்டும் ஏன் இத்தனை கூட்டம் என்றுதான் எமக்கு புரியவில்லை. 

Thursday 15 January 2015

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்




 ஒளி பிறக்கட்டும்
இருள் விலகட்டும்
அருள் கிடைக்கட்டும்
பொருள் கிடைக்கட்டும்
புகழ் பரவட்டும்
நலம் வளரட்டும்
அனைவருக்கும்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Saturday 10 January 2015

ஒன் ரேங்க் ஒன் பென்சன் பற்றி கடைசியாக கிடைத்த தகவல்





ஒன் ரேங்க் ஒன் பென்சன் பற்றி
கடைசியாக கிடைத்த தகவல்

நமது பாதுகாப்பு இணை அமைச்சர் OROP சம்மந்தமாக ஒரு கூட்டத்தை நடத்த உள்ளார்.
முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை செயலர் (Secretary, DESW) தலைமை கணக்கு அதிகாரியை (CGDA) இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய கூறியிருக்கிறார்.
கூட்டம் 13.01.2015 செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது.
நமது முப்படைகளின் அலுவலகம் தயாரித்த வரைவு கடிதத்தை (Draft Government Letter) மறு பரிசீலனை செய்து அதில் உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்பப்படுகிறது.

இந்த DGL இல் உள்ள சுருக்கங்களை சீர் செய்து அனேகமாக ராணுவத்தினர் தினத்தில் (அதாவது 15.1.2015) OROP அறிவிப்பு வெளிவரலாம் என நம்பபடுகிறது.  பிப்ரவரி 28 க்கு  முன்னதாக ஆணைகள் வெளிவரலாம்.

01.02.2015 அன்று டெல்லி ஜந்தர் மாந்தரில்  நடைபெற உள்ள OROP கோரிக்கை போராட்டம் நடைபெறும் என IESM அறிவித்துள்ளது.  அனைவரும் கலந்து கொள்ளவும்.

நன்றி : Aerial View ஏர் மார்ஷால் S.Y.Savur. 

Wednesday 7 January 2015

இராணுவ அமைச்சகத்தின் வினோதமான போக்கு



 
அமைச்சரின் முடிவா அல்லது அதிகார வர்கத்தின் முடிவா?

எங்கள் மேல் ஏன் உங்களுக்கு இத்தனை கோபம் ? எல்லையை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.
 
இராணுவ அமைச்சகத்தின் வினோதமான போக்கு

முன்னாள் ராணுவத்தினர் நலன் காக்க 2004 தொடங்கப்பட்ட முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை (Department of Exservicemen Welfare DESW) கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து அதன் நோக்கத்திற்கு எதிராகவே செயல்படுகிறது என்பது கசப்பான உண்மை.

இதன் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக சமீபத்தில் ஜனவரி 2 இல் ஒரு முடிவு எடுத்துள்ளது.  அதன்படி ராணுவ அமைச்சகத்தை எதிர்த்து (MOD) நீதி மன்றம் செல்பவர்கள் (குறிப்பாக இயலாமை பென்சன் சம்பந்தமாக ) உச்ச நீதிமன்றம் வரை செல்லவேண்டும் என்பதுதான்.

DESW Memo No.MOD ID No.1(ii) 2013/D (Pension/Legal) dated 02.01.2015  ஆணையின்படி குறித்த ஆறு வகையான தாவாகளுக்கு  நேரடியாக உச்ச நீதிமன்றம் அப்பீல் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.  கடந்த 64 ஆண்டுகளில் நம் ராணுவ வீரர்களுக்கு இளைத்த அநீதிகளுக்கு நீதிமன்றங்கள் பல நல்ல தீர்ப்புகள் வழங்கியுள்ள சூழ்நிலையில் ராணுவ அமைச்சகம் கோபம் கொண்டு எதையும் அமுல் படுத்த முன் வராமல் அனைத்தையும் அப்பீல் செய்து காலம் தாழ்த்தி யாருக்கும் எதுவும் கிடைக்கவிடாமல் செய்து வருகிறது.  ராணுவ தீர்ப்பாயத்தை (AFT) வெறும் செல்லா காசாக்கி விட்டது நமது ராணுவ அமைச்சகம்.

1965 இல் நடந்த இந்திய பாக்கிஸ்தான் போரில் தனது கால் ஒன்றை இழந்த லெப்டினன்ட் ஜெனரல் ஓபராய் அவர்கள் தொடர்ந்து பணியில் இருந்து 2001 இல் இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக ஒய்வு பெற்றபின் 70 சதவீத இயலாமை பென்சன் வழங்கப்பட்டது.  5 வது ஊதிய கமிசன் இவரை போன்றவர்களுக்கு 75 சதவீதம் வழங்க பரிந்துரை செய்தது.  ஆனால் ராணுவ அமைச்சகம் 75 சதவீதம் வழங்க மறுத்ததின் பேரில் ராணுவ தீர்ப்பாயம் சென்று வெற்றி பெற்று பின்னர் உச்ச நீதிமன்றம் வரை சென்று 2012 இல் தான் பெற முடிந்தது.  ஒரு ராணுவ துணை தளபதிக்கே இந்த நிலை என்றால், சாதாரண சிப்பாய் நிலைமை என்ன ஆகும்?

திரு ஓபராய் சொல்வதென்னவென்றால் 70 சதவீதம் இயலாமை பென்சன் வழங்கப்பட்ட ஒருவருக்கு 75 சதவீதம் வழங்க மறுத்து இரண்டு ஆண்டுகள் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது MOD.  திரு ஓபராய் அவர்களுக்கு இந்த 5 சதவீத உயர்வு ஒரு பெரிய தொகையாக இல்லாவிட்டாலும் MOD யின் பிடிவாதத்தை முறியடிக்கவே உச்ச நீதிமன்றம் சென்றதாக கூறுகிறார்.  ஒரு சாதாரண சிப்பாய் இது போன்று அப்பீல் போக முடியுமா என்பதுதான் கேள்வி.?

கடந்த காலத்தில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட பல முன்னாள் ராணுவத்தினர், மக்களின் வரிப்பணத்தில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களை எதிர்கொள்ள முடியாமல் விலகி விட்டனர்.  பெரும்பாலான வழக்குகள் முடிவாகுமுன்னர் பலர் இறந்து விடுகின்றனர்.  இதுதான் நிலைமை.  இதை பயன்படுத்தி MOD இப்போது அப்பீல் செய்ய முழு மூச்சில் இறங்கி விட்டது.

முன்னாள் ராணுவத்தினர் சம்பத்தப்பட்ட பெரும்பாலான, பொதுவான ஆறு வகையான அநீதிகளுக்கு வெற்றி கண்ட (இயலாமை பயன்கள், பென்சன் பயன்கள் ) அனைத்து வழக்குகளையும் எந்த பரிசீலனையும் இன்றி உச்ச நீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்ய DESW  ஆணை பிறப்பித்துள்ளது ஒரு மாபெரும் கொடுமை.  இதை அறிந்த நமது ராணுவ தளபதி ஜெனரல் விக்ரம் சிங் நமது ராஜ்ய ரக் ஷா மந்திரி திரு ஜிதேந்திர சிங்கிடம் புகார் அளிக்க வுள்ளார்.

பல ஆயிரகணக்கான நல்ல தீர்ப்புகளை இன்னும் அமுல் படுத்தாமல் கிடப்பில் போட்டிருக்கும் ராணுவ அமைச்சகம் தற்போது மேலும் பல வழக்குகளை மேல் முறையீடு செய்கிறது.  இதையே தனது முழு நேர வேலையாக கொண்டுள்ளது DESW நமது நலன் காக்கும் இந்த துறை.

90 சதவீத வழக்குகளுக்கு எதிராக உச்ச நீதி மன்றம் சென்ற MOD  எல்லா வகையிலும் தோற்று போனபின் ஏழை படை வீரர்களுக்கு நீதி கிடைக்க காலம் தாழ்த்துகிறது.  இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் இப்போது அதிகரித்து விட்டது.  அதிகார வர்க்கம் நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிப்பது சாதாரணமாகிவிட்டது.

முன்னாள் இராணுவத்தினரின் நல் வாழ்வுக்காக 2004 இல் அமைக்கப்பட்ட இந்த துறை தற்போது ஒரு முழு நேர செயலாளரை கொண்டு முழுவதும் முன்னாள் ராணுவத்தினருக்கு எதிராக செயல்படுவதென்பது தான் உண்மை.  இதற்க்கு என்ன தீர்வு என்று தெரியவில்லை.  காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...