Thursday 13 September 2012

ராணுவ தீர்ப்பாயம்.



ராணுவ தீர்ப்பாயம் (Armed Forces Tribunal)

ராணுவ தீர்பாயங்கள் ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருவதால் நீதி வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள்
 இருந்து வந்ததை அறிந்த உச்ச நீதி மன்றம் இந்த நீதி மன்றங்கள் ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து நீக்கப்பட்டு
சட்ட அமைச்சகத்தின் மேற்பார்வையில் இயங்கவேண்டும்  என்ற பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே வழங்கியது.  இதை செயல் படுத்தும் நிலை இன்று உருவாகி 
உள்ளது என்று கூறலாம்.

தற்போது ராணுவ நீதிமன்றங்கள் அனைத்தும் ராணுவ அமைச்சகத்தின் ஆதரவுடன்தான் செயல்பட வேண்டிய 
சூழ்நிலை உள்ளது.
இந்த நீதி மன்றங்களுக்கு இடம் வழங்குவதிலும், 
நிர்வாக உறுப்பினர்களை நியமிப்பதிலும், முக்கிய புள்ளிகளுக்கு வெளி நாட்டு பயணத்துக்கு நிதி
ஒதுக்குவதிலும், ராணுவ கான்டீன் சலுகைகள் வழங்குவதிலும்
ராணுவ அமைச்சகம் பெரும் பங்கு வகிக்கிறது.  இதன் காரணமாக இந்த நீதிமன்றங்களின் செயல்பாடுகள் ராணுவ அமைச்சகத்துக்கு எதிராக அமையுமா என்பதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஒரு ராணுவ தீர்பாயமனது, ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்துக்கு சமமானது.  இதற்க்கு அடுத்தபடியாக உச்சநீதி மன்றம்தான் செல்லவேண்டும்.
சாதாரண படை வீரர்கள் இந்த தீர்பாயங்கள் மூலம் பெற்ற நல்ல தீர்ப்பை ராணுவ அமைச்சகம் அமுல்படுத்தாமல் இவர்களை உச்ச நீதி மன்றம் வரை இழுத்தடிக்கிறது.  நல்ல பல தீர்ப்புகள் இன்னும் அமுல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  ஒரு சாதாரண படை வீரன் இந்த நாட்டின் உச்ச நீதி மன்றம் வரை சென்று நீதி பெறுவது அத்தனை எளிதல்ல.  அதே நேரத்தில் நமது படைவீரர்களுக்கு எதிராக உச்ச நீதி மான்றத்தில் வாதாட ஏராளமான ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் வழக்கறிஞர்களாக (குறைந்த கட்டணத்தில்) முன்வருவது ஒரு மாபெரும் கொடுமை.

நீதி மன்ற கண்டெம்ட் பெடிசனும் போட முடியாதபடி ராணுவ தீர்பாயங்களின் சட்ட திட்டங்கள் அமைந்துள்ளது மற்றொரு கொடுமை.

காலம்தான் இதற்க்கு நல்ல பதில் சொல்லவேண்டும்.

ஜெய் ஹிந்த்.

1 comment:

  1. I AM REGULARLY VISITING THIS SITE. HATS OFF TO YOUR TEAM. GOD BLESS U ALL WITH HEALTH AND LONG LIFE FOR SERVICING THE HUMAN RACE.

    R SRINIVASAN
    MANAGER
    CANARA BANK

    ReplyDelete

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...