Friday 8 January 2016

எக்ஸ் வெல் அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டு விழா





அறக்கட்டளை நிர்வாகிகள்
 எக்ஸ் வெல்
அறக்கட்டளையின்
பத்தாவது ஆண்டு விழா
பாளையம்கோட்டை. சாந்திநகர், மணி மஹாலில் கடந்த
 03.01.2016 ஞாயிறு காலை 10.00 மணிக்கு தொடங்கியது.
முதற்கண் வெள்ளத்தில் மாண்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு R.செல்லப்பா அவர்கள் தலைமை தாங்க
சிறப்பு விருந்தினர்களாக 
திரு.Wg.Cdr.P.J.விக்டர்,அவர்கள்
திரு.Sgt.S.சண்முகம் அவர்கள், பேரளம்.
திரு.Cpl.மோகன ரங்கன் அவர்கள், சென்னை.
திரு.Sgt.டேவிட், அவர்கள். கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் . எண்பது வயதான திருமதி.பார்வதி அம்மாள், Hon.Capt.செல்லதுரை , Nk.துரைபாண்டியன், மற்றும் சௌரிய சக்கரா விருது பெற்ற திரு.c.ராமமூர்த்தி அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.  சிறப்பு விருந்தினர்களும், நன்கொடையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். கடந்த பத்தாண்டுகாளாக அறக்கட்டளையின் சேவையைபற்றியும், உடனிருந்து சிறப்பாக சேவை புரிந்த திரு.S.கந்தையா, திரு.நடராஜன், திரு.C.முத்துக்கிருஷ்ணன் அவர்களையும்  பாராட்டினார்.
திருநெல்வேலி ECHS மருத்துவ மனையில் அனைவருக்கும் இன்முகத்துடன் சிறந்த சேவை செய்துவரும்
திரு.Hav.V.சங்கரன், Nursing Asst./ECG  Tech.,
திரு.ஈஸ்வரன், Radiographer. 
திரு.S.ஈஸ்வரன், Radio Grapher, மற்றும் திரு.S.அரசகுமார், Physiotherapist, ஆகியோர் நிகழ்ச்சியில் பொன்னாடை போர்த்தி  கௌரவிக்கப்பட்டு, பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.
திரு.அரசகுமார்
திரு.சங்கரன்

 விழாவில் ஏழை, எழிய பொது மக்களுக்கு வேஷ்டி, சட்டை, சேலை, சுடிதார் வழங்கப்பட்டது.
மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறநாழி
செல்வி.M.அபர்ணாவுக்கு நவீன செயற்கை காலணிகளை வள்ளல் திரு.C.ராமமுர்த்தி அவர்கள் வழங்கினார்கள்.  மறு நாள் Rs.5000 க்கான காசோலையும் வழங்கினார்கள். 
செல்வி அபர்ணாவுக்கு காலணி வழங்கும் காட்சி.
 செல்வி.அபர்ணா மேடைக்கு அழைத்து வரும்போது அனைவரும் கருணையுடன் பார்த்தனர் .  பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.Sgt.C.முத்து கிருஷ்ணன் அவர்கள் மிகவும் உருக்கமாக அபர்ணாவின் ஏழ்மை நிலையை விவரிக்கும் போது, உணர்ச்சிவசப்பட்டு பலர் எழுந்துவந்து கண்ணீருடன் நிதியுதவி செய்தது  மறக்கமுடியாத மனித நேய காட்சி.
அபர்ணாவுக்கு கிடைத்த நிதியுதவியை கண்ட அவள் பெற்றோர் ஆனந்தகண்ணீர் விட்டு நன்றி சொல்ல கூட முடியாமல் திணறினர்.
நம் மக்களின் மனிதய நேயத்தை கண்டு  எக்ஸ் அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது.
திரு.வேலு நிதி உதவி

திரு.சுவாமிநாதன் நிதி உதவி

டாக்டர்.திருமதி.முத்து மீனாள் நிதி உதவி

திரு.சத்திய சீலன் நிதிஉதவி

கேப்டன் ஆறுமுகம் நிதி உதவி.

சுபேதார்.லாரன்ஸ் நிதி உதவி.

நல்ல மதிப்பெண்கள் பெற்ற ராணுவத்தினர் குழந்தைகளுக்கும், மறைந்த ஒரு BSF வீரர் மகள்கள் இருவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
கல்வி உதவி

“தெரிந்து கொள்ளுங்கள்” என்ற
பென்சன் வழிகாட்டி புத்தகத்தின்
இரண்டாம் பதிப்பை Wg.Cdr.P.J.விக்டர் அவர்கள்  வெளியிட,  பேரளம், திரு.Sgt.S.சண்முகம் அவர்கள் பெற்றுகொண்டார்கள்.
ஒவ்வொரு பென்சனரும் படிக்கவேண்டிய புத்தகம்
 
திரு.விக்டர் வெளியிட திரு.சண்முகம் பெறுகிறார்.
பின்னர் திருமதி.லட்சுமி அவர்கள்
அனைவருக்கும் அரை மணி நேரம் தியான பயிற்சி அளித்து,  தியானத்தின் அவசியம் பற்றி விளக்கினார்.
“நங்கூரம்” என்ற முதியோர் மனமகிழ் மறு வாழ்வு மையம் பற்றிய ஒரு குறும் படம் திரையிடப்பட்டது. 
திரு.ராஜசேகர், நங்கூரம்

செந்தூர் கவிஞர் திரு இல.நாதன் அவர்கள் ராணுவ வீரர்கள் தியாகம் பற்றியும், நம் அறக்கட்டளையின் சேவை பற்றியும் ஒரு அருமையான கவிதையை அரங்கேற்றினார்.
திரு.இல.நாதன், கவிஞர்
திரு.நாரும்புனாதன், முக நூல் புகழ் எழுத்தாளர்
அரங்கத்தில் மக்கள் கூட்டம்

முக நூல் புகழ், எழுத்தாளர் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் திரு.நாறும்பூ நாதன் அவர்கள் நமது சேவையை பாராட்டி பேசினார்கள்.
முதியோர் சேவை பற்றியும், இறுதிகட்ட மருத்துவ சிகிச்சை (Terminal Care) பற்றியும், மறுவாழ்வு மையங்கள் பற்றியும் Sgt.டேவிட் அவர்கள் மிகவும் உருக்கமான உரையாற்றினார்கள்.
தமிழகம் முழுவதுமுள்ள ராணுவ பென்சனர்களுக்கு தான் ஆற்றி வரும் சேவை பற்றி Sgt.S.சண்முகம் விளக்கினார்கள்.
Cpl.மோகன ரங்கன் (TAFVA)அவர்களும், NEXCC திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு.ரவி அவர்களும், கோவையிலிருந்து திரு.சத்தியசீலன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
நண்பகல் 1.30 க்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவுக்குப்பின் திரு.Sgt.C.முத்து கிருஷ்ணன் அவர்கள் உருவாக்கிய, பல  இனிமையான பாடல்களுடன்  கூடிய பென்சன் மற்றும் நமது மருத்துவ திட்டம் பற்றிய  அருமையான படக்காட்சியும் தெளிவான விளக்கமும் கொடுக்கப்பட்டது. பென்சன் கேள்விகளுக்கு திரு S.சண்முகம் அவர்களும் திரு S.கந்தையா அவர்களும் பதில் அளித்தார்கள்.
ஜீவன் பிரமாண், மற்றும் டிஜிட்டல் லாக்கர் பற்றி Sgt.C.முத்து கிருஷ்ணன் விளக்கம் அளித்தார்கள்.  ஒரு சிலருக்கு டிஜிட்டல் லாக்கர் கணக்கும் திறந்து கொடுக்கப்பட்டது.
நிகழ்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார் திரு முத்து கிருஷ்ணன் அவர்கள்.
திரு.நடராஜன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.
இந்த ஆண்டுவிழா மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று அனைவரும் பாராட்டிய செய்தியை அனைத்து உள்ளூர் பத்திரிக்கைகளும் வெளியிட்டு பெருமை சேர்த்தது மறக்கமுடியாதது.
இந்த விழாவின் வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி.



No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...