Friday 15 January 2016

அரியர் தொகை குறைவாக கிடைப்பதேன் ?




முன்னாள் படை வீரர்களுக்கு மிகக்குறைவான ஓய்வூதிய நிலுவைத்தொகை கிடைப்பதன் காரணமென்ன?
   -லெப்டினன் கர்னல். பழனி சாமி (ஓய்வு)
            [ இது Brig C S Vidyasagar ஆங்கிலத்தில் Why Are You Getting So Low Pension Arrears?என்ற தலைப்பில்  ‘https://thetsewablog.wordpress.com ‘ என்றவலைப்பதிவில்  12 -11- 2015 வெளியிட்ட  கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது ]
                                                            
 அன்புள்ள JCOs, NCOs, OR மற்றும் குடும்ப ஓய்வூதியம் (பென்ஷன்) பெற்று வரும் நண்பர்களே,
கடந்த ஜனவரி 2006 லிருந்து  30 ஜூன் 2012 வரைக்கும் ஆன காலகட்டத்தில் ஏன் உங்களுக்கு மிகவும் குறைந்த அளவு ஓய்வூதிய நிலுவைத்தொகையே கிடைக்கவுள்ளது என்பதை கட்டாயம் நீங்கள்  அறிய வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சகம் ஜனவரி 2006 தேதிப்படிக்கான பென்சனை எப்படி கணக்க்கிட்டிருக்கிறது  என்பதை விவரித்து, பின்னர் ஏன் மிகக்குறைந்த ஓய்வூதிய உயர்வையே PCDA (P) அலஹாபாத் அண்மையில் வெளியிட்டுள்ள சர்குலர் 547 அளிக்கவிருக்கிறது என்பதை விளக்குகிறேன்.
பாதுகாப்பு அமைச்சகத்தைப் பொருத்தவரை ஜனவரி  2006 தேதிப்படிக்கான ஓய்வூதிய நிலுவைத்தொகை என்பது சர்குலர் எண்களின்  (Circulars 547 & 379) வித்தியாசமே ஒழிய வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை! 
 ஜனவரி 2006 க்கு முன்பு ஒரு ‘ Y ’ குரூப்பைச் சார்ந்த சிப்பாய் 15 ஆண்டு பணிகாலத்துகுப் பின்பு மாதம் ரூ  4,300.௦௦ அடிப்படை சம்பளமாகப் பெற்று வந்தார். ஐந்தாவது சம்பளக் கமிசனில் ரூ 32500 -700- 4300.௦௦ என்ற சம்பள அளவுப்படி இந்த ரூ 4,300 ஒரு ‘ Y ’ குரூப்பைச் சார்ந்த சிப்பாயின் உச்சநிலை சம்பளம் ஆகும். அதே ‘ Y’ குரூப் சிப்பாயின்  சம்பளம்  ஜனவரி 2006ல் ஆறாவது சம்பளக் கமிசனின் சம்பளவிகிதப்படி மாதம் ரூ 12,000. (Pay Band ரூ 8000 + Grade Pay ரூ 2000 + MSP ரூ 2000 ஆக மொத்தம் ரூ 12,000). அதாவது , ஜனவரி 2006ல் இவர் ஓய்வு பெறும்போது ஓய்வூதியமாக மாதம் ரூ 6,000/- பெறுவார் (கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் பாதி அளவு).
உச்ச நீதிமன்றம் மேஜர் ஜெனெரல்  எஸ் பி எஸ் வைய்ன்ஸ் Vs UOI - 2008 என்ற வழக்கில் 2006 ஆண்டுக்குப் பின் ஓய்வு பெற்ற பென்சனர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும்  பயன்கள் ( benefits ) அனைத்தையும் 2006 ஆண்டுக்கு முன்னர் ஒய்வு பெற்ற பென்சனர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின்படி’ Y’ குரூப் சிப்பாய்க்கு 15 ஆண்டு கால சேவைக்குப் பின் மாதம் ரூ 6,000/- பென்சன் கிடைக்க வேண்டும் என்பது நன்கு தெளிவாகிறது. ஆனால் இந்திய அரசு இதே சேவைக் கால சிப்பாய்க்கு சர்குலர் 547 ன்படி என்ன கொடுத்த்திருக்கிறது?
PCDA (Pension) அலஹாபாத் பென்சன் கணக்கீட்டு அதிகாரிகள் 15 வருடம் சேவை முடித்த ஒரு ‘Y’ குரூப் சிப்பாயை ஒரு வருட சேவை கூட முடிக்காத சிப்பாய்க்கு சமமாகக் கருதி  சம்பளப்ப் பட்டியலைத் தயாரித்திருக்கிறார்கள். அவரின் 2006 க்கு முந்தய அடிப்படை சம்பளமான ரூ 3,250 க்கு இணையாக, உத்தேச சம்பளத்தை ரூ 10,250 என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். இது ஜனவரி 2006 ல் சிப்பாயின் 15 வருட பணிக்காலத்தை பூஜ்ய கால சேவைக்கு சமமாகக் கருதி கணக்கிட்டதற்கு ஒப்பாகும். அது மட்டுமல்லாமல் இப்பட்டியல் Special Army Instructions (SAI) - 1/S/2008 இன் படிதான் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்றும் வாதிடுகிறார்கள்.
இந்த ஓய்வூதியமும்  33 வருடம் சேவைக் காலம் முடித்திருந்தால்தான் முழுமையாகக் கொடுக்கப்படும். சேவைக்காலம் அதற்கு குறைவாக இருந்தால் அதே விகிதத்தில் ஓய்வூதியமும் குறைத்து வழங்கப்படும். ஒரு சிப்பாயின் பணிக்காலம் 15 வரு டத்தில் (17 வருடமாக இப்போது உயர்த்தப்பட்டுள்ளது) முடிந்து விடுகிறது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும்கூட! இவ்விதம், 15 வருட காலம் பணிமுடித்த ‘ Y’ க்ரூப் சிப்பாயின் மாத ஓய்வூதியம் ரூ 3,883 {= 5120 x (15 +10)/33} ஆக அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் சிப்பாய், நாயக், ஹவில்தார் ஆகியவர்களின் ஓய்வூதியம் இவ்வளவு குறைவாக இருப்பதன் அடிப்படைக் காரணம்.  இதை விட அர்த்தமற்ற சம்பள விகித அமைப்பு இருக்க முடியுமா?
Pay Band – 1 ல் சம்பள விகிதம் ரூ 5200 - 22000 த்துடன் Grade Pay ரூ 2000 மும் ராணுவ சேவை படி(MSP) ரூ 2000௦௦௦ மும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிப்பாயின் 15 வருட சேவைகாலத்தைக் கருத்தில் கொண்டு அதற்குரிய உத்தேச அடிப்படைச் சம்பளமாக  ரூ 5200+ 3 % என்ற அடிப்படையில் வருடாந்திர உயர்வை கணக்கிட்டிருந்தால் அது S A I - 1/S/2008 இல்  கொடுத்துள்ளபடி ரூ 12,000/- ஆக இருந்திருக்கும்.
1 5  வருடம் சேவை முடித்த ‘ Y ’ குரூப்பைச் சார்ந்த சிப்பாய்களின் பென்சன் அவர்கள்  2006 க்கு முன்னரோ அல்லது பின்னரோ எப்போது ஓய்வு பெற்றிருப்பினும் மாதம் ரூ 6,000/- ஆக அமைக்கப்படிருக்க வேண்டும். ஆனால் அவ்விதம்  அமைக்கப்படவில்லை.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால் 1973 லிருந்து சிபாய் – ஹவில்தார் களுக்கு நஷ்டம் விளைத்த இந்த ‘ 33 வருட பணி’ என்ற விதி 2006 க்கு முதலில் ஒய்வு பெற்றவர்களுக்கும்   சேர்ந்து இப்போது ஒழிந்தது !
திரு எம். ஓ. இனாசு என்ற முன்னாள் படை வீரர் பணி ஓய்வு பெற்றபின் கேரளாவில் உதவி அலுவலக மேற்ப்பார்வையாளர் என்ற  மத்திய அரசின் பணியில் சேர்ந்தார். அதிலிருந்தும் ஓய்வு பெற்றபின்  அவர் 2006ஆம் வருடத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கான  இந்த ‘33 வருட பணி ’ என்ற விதியை எதிர்த்து எர்ணாக்குளம் C A T (Central Administrative Tribunal)   இல் வழக்குத் தொடர்ந்தார். CAT எர்ணாக்குளம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து  விட்டபோதிலும் மனம் தளராது  கேரளா உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். கேரளா உயர் நீதிமன்றம் CAT எர்ணாக்குளத்தின் தீர்ப்பு செல்லத் தக்கதல்ல என்று முடிவு செய்ததன் பேரில், CAT எர்ணாக்குளம் 2006 க்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கியதைப் போலவே 2006 க்கு முன்னர் ஓய்வுபெற்றவர்களுக்கும் (எஸ் பி எஸ் வைன்ஸ் Vs UOI வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைப் போல) பென்சன் வழங்க மத்திய அரசுக்கு உத்திரவிட்டது.
            மத்திய அரசு விட்டு விடுமா? CAT எர்ணாக்குளத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதி மன்றம் மத்திய அரசின் மேல்முறையீட்டைத்  தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. எனவே மத்திய அரசுக்கு  ஓய்வூதியம் அமைப்பதில் ‘33 வருட பணி விதியை 2006 க்கு முந்தைய எல்லா மத்திய அரசு ஊழியர்களுக்கும் நீக்குவதைத் தவிர்த்து வேறு வழி இல்லாமல் போனது. ஆகவே இப்பொழுது , Ministry of Personnel, Pensions and Public Grievances என்னும் மத்திய அமைச்சகம்  33 வருட பணி’ விதியை நீக்கவுள்ள அரசானைக் கடிதத்தை அனுப்ப இருக்கிறது .
சரி, இனி சிப்பாயிலிருந்து - மேஜர் ஜெனெரல் வரைக்குமான எல்லோர் ஓய்வூதியத்திலும்  இது என்ன விளைவை ஏற்ப்படுத்தப் போகிறது?  
ரேங்க் வெய்டேஜ் உடன் 33 வருடம் பணிக்காலம் முடித்திராதவர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்த பட்ச பணிக்காலம் முடித்திருந்தால் (அதாவது சிப்பாய்க்கு 15 வருடமும், அதிகாரிகளுக்கு 20 வருடமும் ) முழு ஓய்வூதியம் கிடைக்கபெறும். பதினைந்து வருடம் பணி காலம் முடித்த ’ Y ‘ குரூப் சிப்பாய் ஒருவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?  2006 க்குப்பின்னர் ஓய்வடைந்த அதே குரூப்பைச் சார்ந்த அதே அளவு பணி காலம் முடித்த சிப்பாய்க்கு எந்த அளவு கிடைக்குமோ அதே தொகை தான், அதாவது   ரூ 6,000௦௦௦ கிடைக்க வேண்டும்.
அப்படியானால் நிலுவைத்தொகை எவ்வளவு? உதாரணத்துக்கு, 15 வருடம் பணி முடித்த சிப்பாய்க்கு மாதம் ரூ 6000 – ரூ 3883 (சர்க்குலர் 547 படி ) = ரூ 2,117. இத்துடன் இதற்குரிய பஞ்சப்படி(DR) யும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்நிலையில் அரசு என்ன செய்யவிருக்கிறது? ஜனவரி 2006 லிருந்து 2015 வரைக்குமான நிலுவைத்தொகை வழங்குவதைத் தவிர்க்க முயற்ச்சிக்கலாம். இதற்காக  நிலுவைத் தொகை ஏதும் இல்லாதவாறு எல்லோரது ஓய்வூதியத்தையும் ஜனவரி 2006 இன்படி திருத்தி அமைக்கலாம். அவ்வாறு செய்யப்பட்டால் நிலுவைத் தொகை ஏதும் இராது.
அல்லது உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கிய தேதியிலிருந்து, அதாவது 2015இலிருந்து மட்டும் ஓய்வூதியத்தைத் திருத்தி அமைக்கலாம். அவ்வாறு செய்யப்பட்டால் ஓய்வூதியம் மிகக் குறைவாகவே இருக்கும்.
ஆனால் அரசு அவ்வாறு செய்வது நியாயமான செயலாகுமா? உச்ச நீதி மன்றம்  எஸ் பி எஸ் வைன்ஸ் Vs UOI  வழக்கில் வழங்கிய தீர்ப்புப்படி பார்த்தால் அது முற்றிலும் தவறான செயலாக முடியும்.
இது குறித்து TSEWA என்ன செய்யவிருக்கிறது? நாம் (TSEWA) நிலுவைத்தொகை 2006 இலிருந்து வழங்கப்பட வேண்டும் என்று நீதி மன்றத்தில் வலியுறுத்த இருக்கிறோம். அதற்காக நீங்கள் TSEWA வில் உறுப்பினர்களாகச் சேர்வீர்களானால் கணிசமான அளவு JCO, NCO, OR மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் சேர்ந்தவுடன், Armed  Forces Ttribunal (AFT) டெல்லியில் வழக்குத் தொடர்வோம். அவசியப்பட்டால் உச்சநீதி மன்றம் வரை வழக்கை எடுத்துச் செல்வோம்.
‘Y’ குரூப் சிப்பாய்க்கு மாதத்திற்கு ரூ 2,117 + DR என்ற விதத்தில், உங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகையை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.
நான் சொல்வது சரிதான்  என்று நீங்கள் உணர்ந்தால் TSEWA வில் நீங்கள் உருப்பினராகச் சேர்ந்து நமக்கு நேர்ந்துள்ள அநீதியை எதிர்த்து வழக்குத் தொடுத்துப் போரிடலாம்.
மற்ற விபரங்களுக்கு கீழ்க்கண்ட  கைபேசி எண்ணிலோ அல்லது  .......  என்ற இமெயில் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

[Note:  Brig C S வித்யாசாகர்   முன்னாள் முப்படை வீரர்கள் நல சங்க” (Triservices Veterans Welfare Association – TSEWA ) தலைவர். இவர் Bombay Engineering Ggroup ஐ சார்ந்த இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரி.  இவ்வமைப்பு முன்னாள் படை வீரர்களுக்கு இந்திய அரசு இழைத்து வரும் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறது   
  திரு. Lt.Col.பழனிச்சாமி அவர்கள் தற்போது ராஜஸ்தானில் வசித்து வருகிறார்கள்.
தொடர்பு கொள்ள கைபேசி எண் : 9968253110 and 8875448800.

இந்த கட்டுரையை நன்கு படித்து புரிந்துகொண்டு பின்னர் Brig.வித்யா சாகர் அல்லது Lt.Col.N பழனிச்சாமி அவர்களை தொடர்பு கொள்ளவும். 

உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.









No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...