Friday 22 January 2016

மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவும் முன்னாள் ராணுவத்தினரும்







ராணுவ தீர்ப்பாயங்களும் தேசிய சட்ட ஆணைக்குழுவும்

ராணுவ தீர்ப்பாயங்கள் நாடெங்கிலும் சில முக்கிய நகரங்களில் மட்டுமே உள்ளது.  எனவே கிராமங்களில் வசிக்கும் பல ஆயிரகணக்கான முன்னாள் ராணுவத்தினர் இந்த தீர்ப்பாயங்களை அணுக முடியாத நிலை உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, தேசிய, மாநில, மாவட்ட அளவில் நன்கு செயல்பட்டு வரும் சட்ட ஆணைக்குழுக்கள் மூலம் முன்னாள் ராணுவத்தினருக்கு இலவச சட்ட உதவி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ராணுவ தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளையும் அதாலத் மூலம்  (Lok Adalat) (மக்கள் நீதி மன்றம்) தீர்வு செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 19.01.2016 செவ்வாய் அன்று முன்னாள் ரானுவத்தினர்களுக்கு ஒரு இலவச சட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.  மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர்/மூத்த நீதிபதி திருமதி. J.தமிழரசி அவர்கள் தலைமை தாங்கி இலவச சட்ட உதவி மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
வரும்காலங்களில் ராணுவ தீர்ப்பாயங்களுக்கு இலவசமாக வழக்குகளை எடுத்துசெல்ல வசதிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்கள்.

சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் இந்த மையத்தின் சேவை பற்றி அழகாக எடுத்துரைத்தார்.  அநேக குடும்ப பிரச்சனைகளுக்கு எளிய, சமரச முறையில் தீர்வு கண்ட விதத்தை விளக்கினார்.

முன்னாள் ராணுவத்தினர் சந்திக்கும் நடைமுறை பிரச்சனைகள் பற்றி எக்ஸ் வெல் அறக்கட்டளையை சேர்ந்த சார்ஜன்ட்.திரு.செ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் விரிவாக பேசினார்கள்.  அனைவரும் நம்பிக்கையுடன் இந்த மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவை அணுகும்படி கேட்டுக்கொண்டார்.கிராமங்களில் பொதுவாக முன்னாள் ராணுவத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளை வன்னிக்கோ நேந்தல் கேப்டன்.திரு.ஆறுமுகம் அவர்கள் விரிவாக பேசினார்கள்.

முடிவில் மூத்த நிர்வாக உதவியானர் திரு.கோமதிநாயகம் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.


மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நீதிபதி.திருமதி. J.தமிழரசி அவர்கள் இன்முகத்துடன் அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்டு நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைவரும் பெரும் நம்பிக்கையுடன் விடைபெற்றனர்.

இந்த விழிப்புணர்வு முகாமுக்கு எக்ஸ் வெல் அறக்கட்டளை அனைத்து உதவிகளும் செய்தது.  

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...