Sunday, 26 October 2014

ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்ன ஆனது ?



தீபாவளி இனிப்பு வழங்கும் நமது பிரதமர்
ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்ன ஆனது ?

சமீபத்தில் சியாசின் பனி மலையில் நமது ராணுவ வீரகளுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி அவர்கள், ஒன் ரேங்க் ஒன் பென்சன் வழங்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். இதை நம்பாதவர்கள் கீழ் கண்ட இணைய தளத்தில் பார்க்கலாம்.
நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை பாராட்டிய பிரதமர் OROP யை பற்றிய உண்மையை கூற வில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பிரதமர் நமது வீரர்களுக்கு இதை அறிவித்த அதே நேரத்தில் இங்கு டெல்லியில் நமது நிதி அமைச்சரும் பாது காப்பு அமைச்சருமான திரு அருண் ஜெயிட்லி அவர்கள் OROP yயை ஒரு பிரச்னையாக வர்ணித்து அதை ஒரு தீர்பாயத்தின் முடிவுக்கு (Referring to a Tribunal) விடப்போவதாக Times Now  என்ற TV  க்கு 22.10.14 இல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.  பிரதமர் சொல்வதற்கும் பாது காப்பு அமைச்சர் கூறுவதற்கும் உள்ள முரண்பாடுகளை பார்த்தீர்களா ?

பிரதமரே பாதுகாப்பு அமைச்சரின் விருப்பபடி தீர்பாயத்தின் முடிவுக்கு விட சம்மதிக்கிறாரா ?  இந்த சூழ்நிலையில் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அமைத்த காபினெட் செக்ரட்டரி கமிட்டிக்கும் இந்த தீர்பாயத்துக்கும் என்ன வித்தியாசம் ?

OROP  யை அமுல்படுத்த தேவைப்படும் நிதி ரூ.4500 கோடி என்று முப்படைகளின் தலைமை அலுவலகம் கூறியுள்ளது.  இதே கணக்கை தன் வழியில் உருவாக்கிய CGDA  ரூ.9100  கோடி செலவாகும் என்று கூறியுள்ளது.  (செலவு கணக்கை தணிக்கை செய்யும் பணி மட்டுமே கொண்ட CGDA , எவ்வளவு செலவாகும் என்ற கணக்கை பரிந்துரைக்க அரசு கேட்டு கொண்டது விந்தையாக இருக்கிறது.)  ராணுவ அமைச்சகத்தின் நிதி பிரிவில் எல்லா விபரங்களும் (Finance Division of MOD) இருக்கும் பட்சத்தில் CGDA வுக்கு ஏன் பரிந்துரைக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

CGDA  கணக்கைவிட  முப்படைகளின் தலைமை அலுவலகம் குறைவாக கணக்கிட்டு கொடுத்த பட்டியலை அமுல் படுத்த ஏன் இந்த தயக்கம்?

சியாசின் பனிமலையில் ஒருநாள்மட்டும், ஒரு சில மணி நேரம் மட்டும் நமது வீரர்களுடன் இருந்து இனிப்பாக பேசி இனிப்பு வழங்கினால் மட்டும் போதாது.  சொல்லியதை செயலில்  காட்டவேண்டும் நமது பிரதமர்.  தான் கூறியதற்கும் அதே நேரத்தில் நிதி அமைச்சர் கூறியதற்கும் முரண்பாடு இருப்பதை தெரிந்த பிறகாவது நமது பிரதமர் விளக்கம் கூறியிருக்கவேண்டும்.  இதுவரை திரு அருண் ஜெயிட்லி கூறியதற்கு நமது பிரதமர் விளக்கம் கூற வில்லை.  அன்று நம் பிரதமர் ஆசையாக பேசி மோசம் செய்து விட்டார் என்றுதான் நேம் வீரர்களுக்கு நினைக்கதோன்றும்.

பொதுவாக ஒரு நாட்டின் நிதி அமைச்சர் ராணுவத்துக்கு செலவு செய்வதை விரும்பமாட்டார்.  துரதிர்ஷ்டவசமாக நமக்கு ஒருவரே நிதி அமைச்சராகவும் ராணுவ அமைச்சராகவும் வந்துவிட்டார்.  ஒரு பிரபல வழக்கறிஞர் ராணுவ அமைச்சராக வந்துவிட்டால் ராணுவ வீரர்கள் அனைவரும் நீதி கேட்டு உச்ச நீதிமன்றம் வரை செல்லவேண்டும்.  இதுதான் தற்போதைய நிலைமை.  எனவே OROP க்காக தீர்ப்பாயத்தை தேடுகிறார் நமது பாதுகாப்பு அமைச்சர்.

கடந்த தேர்தலில் நாடெங்கும் மோடி அலைவீசி ஜெயித்தது BJP.  ஆனால் அருண் ஜெயிட்லி மட்டும் அமிர்தசரஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஒரு ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் முன்னாள் பஞ்சாப் முதல்வருமான கேப்டன் அமரிந்தர் சிங்கிடம் தோல்வியுற்றார்.  தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்கு இரண்டு மாபெரும் அமைச்சு (Finance & Defence)  பணி கொடுப்பது ஜனநாயக விரோத செயலாகும்.  அதன் விளைவுதான் அவர் இன்று எல்லோரையும் நீதி மன்றத்துக்கு அழைக்கிறார்.

நமது பிரதமரோ இனிக்க இனிக்க பேசுகிறார்.  இந்தியில் மட்டுமே பேசுகிறார்.  இந்தி தெரிந்த மக்கள் அவர் பேச்சில் மயங்கி வாக்களித்துவிட்டு இன்று முழிக்கிறார்கள்.  125 கோடி மக்களுக்கும் இந்தி தெரியாது என்பது யாருக்கும் தெரியாதா ?  தகவல் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறியுள்ள இந்த யுஹத்தில் அவர் பேசுவதை  மொழி பெயர்த்து ஒலி, ஒளி பரப்புவதில் என்ன சிக்கல்.  இந்தி தெரியாத, புரியாத மக்கள் நமது பிரதமர் மிகவும் உருக்கமாக பேசுவதை வெறும் ஊமை படம் பார்பதுபோல் பார்த்து கொண்டிருக்கின்றனர் .

மொத்தத்தில் இந்த சர்கார் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக .........

எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் நம் வீரர்கள் பட்டும் நம் எல்லைகளை கண் கொட்டாமல் கண்காணிக்கவேண்டும்.  இங்கு நாட்டில்,  தன் வீட்டில் எது நடந்தாலும் யாருக்கும் கவலையில்லை,  அவன் மட்டும் தன் பணியை செய்யவேண்டும்.  ஏன் என்றால் இது நாம் தாய் நாட்டை காக்க மேற்கொண்ட சத்தியம்.  சத்தியம் தவறாத உத்தமர் போல் நாம் மட்டும் வாழ வேண்டும், நாட்டையும் காக்க வேண்டும்.

சத்திய மேவ ஜெயதே
ஜெய் ஹிந்த்


 

Wednesday, 22 October 2014

தீபாவளி நல் வாழ்த்துக்கள்


வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய
 தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Sunday, 12 October 2014

மேம்படுத்த பட்ட ECHS கார்டு கட்டாயம் பெற வேண்டுமா ?





மேம்படுத்த பட்ட ECHS கார்டு கட்டாயம் பெற வேண்டுமா ?
(Is it compulsory to get upgraded ECHS Card ?)

ECHS திட்டம் 01.04.2003  முதல் தொடங்கப்பட்டது.  அப்போதிருந்தே உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்பட்டது.  நாம் அனைவரும் இந்த கார்டை பெற்று பழகி வரும் நிலையில் வேறு ஒரு புதிய கார்ட் வாங்க வேண்டும் என்ற செய்தி வருகிறது.  எதற்காக இந்த புதிய கார்டு வாங்க வேண்டும் என்று தெளிவாக எங்கும் கூறப்படவில்லை.

புதிய கார்டு ஆல் இந்தியா கார்டு என்கிறார்கள்.  பழைய கார்டை யும் அப்படித்தான் சொன்னார்கள்.  ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வரும் ஒரு கார்டு  பெற்றுகொள்ளலாம் என்கிறது செய்தி.  ஆனால் ஒவ்வொருவரும் ரூ.135/- செலுத்த வேண்டும்.  கணவன், மனைவி இரு குழந்தைகள் இருந்தால் ரூ.540 செலுத்த வேண்டும். 

இது சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பும் போது, ECHS  நிர்வாகம், “புதிய கார்டு தற்போதைக்கு கட்டாயம் இல்லை “ என்று கூறிவிட்டது.

புதிய கார்டும், அதற்குரிய மென்பொருளும் (Software from SITL) முழுமையாக உபயோகத்து வந்தால் ஒரு ECHS உறுப்பினருடைய முழு விபரமும் அதில் பதியப்படும்.  நோயின் தன்மை, எடுத்துகொள்ளும் மருந்துகள், அலர்ஜி சம்பந்தமான விபரங்கள் அனைத்தும் மருத்துவர்களுக்கு இந்த கார்டு மூலம் தெரியும்.

ஆனால் நடைமுறையில் இப்போது நடப்பது என்ன ?வெறும் டோக்கன் நம்பர் போடவும், மருத்துவ அதிகாரிக்கு வரிசை படுத்தவே உபயோக படுத்த படுகிறது.  புதிய மென்பொருள் நிறுவ பட்டதாக தெரிய வில்லை.  யாருக்கும் உரிய பயிற்சியும் கொடுக்க வில்லை.  இந்த சூழ்நிலையில் புதிய கார்டு வேண்டும் என்று சொல்வது சரியில்லை.  பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கும் இந்த ஸ்மார்ட் கார்டுக்கு நமது ECHS நிர்வாகம் ரூ.135  வசூலிப்பது நியாயம் இல்லை.  சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் கார்டு விலை சுமார் ரூ.25-30 க்குள் இருக்கும் என்கிறது ஒரு செய்தி.  இலவச மருத்துவ திட்டம் (பங்களிப்பு ஒரு புறம்) என்று சொல்லி, இப்படி கட்டணங்களை வசூலிப்பது சரியில்லை.  கான்டீன் ஸ்மார்ட் வாங்குவதிலும் இதே நிலை தான்.  கான்டீன் ஸ்மார்ட் கார்டு ஏன் இலவசமாக வழங்ககூடாது ?

இது தவிர சில பாலி கிளினிக்குகள் புதிய ECHS கார்டு பெற வங்கிகளிடம் NOC  வாங்கி வர நிர்பந்திக்கிறது. சம்பத்தப்பட்ட  STATION HQ இல் இது பற்றி கேட்டபோது “நாங்கள் அவ்வாறு நிர்பந்திக்க வில்லை” என்று சொல்கிறார்கள்.  மேலும் மிகவும் வயதான ECHS  உறுப்பினர்கள் குக்கிராமங்களில் இருந்து பெரும் செலவு செய்து STATION HQ க்கு நேரடியாக சென்று கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.  அந்தந்த பாலி கிளிநிக்குகளே இந்த விண்ணப்பங்களை பெற்று  STATION HQ  க்கு அனுப்புவதில் என்ன கஷ்டம் ?  ஏன் இந்த பாலி கிளினிக்குகள் செய்யக் கூடாது ? திருநெல்வேலி பாலிகிளினிக் இந்த பணியை நல்ல முறையில் செய்கிறது.  Col. விக்டர் அவர்களுக்கும், ஊழியர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.

01.04.2003  முதல் இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மெடிக்கல் அலவன்சை நிறுத்த வேண்டிய வங்கிகள் நிறுத்தாமல் இருந்துவிட்டு தற்போது திடீரென்று மொத்தமாக ரூ.28,000/-  கட்டவேண்டும் என்று சில பென்சனர்களை நிர்பந்திப்பதாக புகார்கள் வந்துள்ளன.  சில பாலி கிளினிக்குகள் (ஸ்ரீவில்லி புத்தூர்) இதற்க்கு துணை போவதாக செய்தி.
பல ஆண்டுகளாக பல பென்சனர்களுக்கு குறைந்த பென்சன் வழங்கி பல லட்சங்களை அரியர் தொகையாக வாங்கி கொடுத்த அனுபவம் எங்களுக்கு உண்டு.  “நாங்கள் ஒவ்வொரு பென்சனருக்கும் சரியான பென்சன் வழங்குகிறோம் “ என்று எந்த வாங்கியாவது கூற முடியுமா?  முடியாது என்பதுதான் உண்மை.  ஏனென்றால் “எனக்கு மெடிக்கல் அலவன்ஸ் கொடுக்காதீர்கள்” என்று பல முறை ஒரு பென்சனர் கூறியும் கண்டு கொள்ளாத வங்கி எப்படி சரியான பென்சன் கொடுப்பதாக சான்றளிக்க முடியும்.  தணிக்கையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஆயிரத்தில் ஒரு பென்சனர் கணக்கை பார்த்து பிடிபட்டால்தான் தவறும் வெளிவரும்.  தற்போதைய நடைமுறையில் அனைத்து பென்சன் கணக்குகளையும் தணிக்கையாளர்கள் பார்ப்பதில்லை.  எனவே தவறுகள் வெளிவர வாய்ப்பு இல்லை. எத்தனையோ பென்சனர்களுக்கு சாகும் தருவாயில் பல லட்சம் பென்சன் அரியர் தொகை பெற்று கொடுத்த அனுபவம் எங்களுக்கு உண்டு.  இதேபோல் எத்தனையோ இராணுவ பென்சனர்களும்,  இராணுவ குடும்ப பென்சனர்களும் தன்  வாழ் நாளில் சரியான பென்சன் பெறாமல் காலமாகிவிட்ட நிலையும் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.  நாம் அனைவரும் விழிப்புடன் இல்லாதவரையில் இந்த நிலை மாறாது. மொத்தத்தில் எமது கோரிக்கை என்னவென்றால் :-

1.    சம்பத்தப்பட்ட பாலி கிளிநிக்குகளே புதிய கார்டுக்கான விண்ணப்பத்தை பெற்று  Station HQ க்கு அனுப்பவேண்டும்.
2.    தவறாக வழங்கப்பட்ட மெடிக்கல் அலவன்ஸ் தொகையை மொத்தமாக திருப்பி கட்ட எந்த வங்கியும் நிர்பந்திக்க கூடாது.  விதி முறைகளின்படி குறைந்த தவணைகளில் வசூலிக்க வேண்டும்.
3.    முழுமையான ECHS மென்பொருள் பயன்படுத்தும்வரை பழைய கார்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
4.    ECHS இன் SITL Software பயிற்சி அனைவளுக்கும் வழங்கவேண்டும்.
5.    ஸ்ரீவில்லி புத்தூர் பாலி கிளினிக் புதிய கார்டுக்கு வங்கியில் NOC கேட்டு நிர்பந்திக்க கூடாது.
6.    சரியாக பூர்த்தி செய்த புதிய ECHS  கார்டு விண்ணப்பங்களை உறுப்பினர்கள் Station HQ க்கு பதிவுத்தபாலில் அனுப்ப அனுமதிக்க வேண்டும்.  வயதான ECHS  உறுப்பினர்களை Station HQ க்கு நேரடியாக வரச்சொல்லி நிர்பந்திக்க கூடாது.

இதை படிக்கும் பல நல சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு இந்த கோரிக்கையை நேரில் எடுத்து சொல்லவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

Monday, 29 September 2014

ஒய்வு பெற்ற விமானபடை வீரர்கள் கூட்டம்




ஒய்வு பெற்ற விமானபடை வீரர்கள் கூட்டம்

ஏர் மார்ஷல் திரு.எஸ் .குமார் அவர்கள்
(விமான படை வீரர்களுக்கான உயர் அதிகாரி)
விமான படை தலைமை அலுவலகம் புது டெல்லியில் இருந்து
பாண்டிசேரி வருகை தர உள்ளார்கள்.  அச்சமயம் ஒய்வு பெற்ற விமான படை வீரர்களுக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம். : பாண்டிச்சேரி பல் கலை கழகம்
நாள்: 01.10.2014
நேரம்: காலை 09.30 மணிக்கு.
அவ்வமயம் அருகிலுள்ள ஒய்வு பெற்ற விமானபடை வீரர்கள்
அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள கேட்டு கொள்ள படுகிறார்கள்.
தங்கள் நிறை குறைகளை ஒரு உயர் அதிகாரிக்கு
எடுத்து சொல்ல ஓர் அறிய சந்தர்ப்பம் இது.
அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு
பாண்டிச்சேரி ஒய்வு பெற்ற விமான படை வீரர்கள் சங்க
செயலாளர் கேட்டு கொள்கிறார்கள்.
திரு:G.கார்த்திகேசன்.
தொலைபேசி:9345452483
04132253525

Friday, 26 September 2014

பாரத ஸ்டேட் வங்கியின் பென்சன் லோன்





பாரத ஸ்டேட் வங்கியின் பென்சன் லோன்

சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி பென்சனர்களுக்கு வழங்கும் கடன் தொகையின் உச்ச வரம்பை ஒரு லட்சத்தில் இருந்து மூன்று லட்சமாக உயர்த்தியிருக்கிறது.

  இந்த கடனை பெரும் தகுதிகள்:

.  பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பென்சன் வாங்கவேண்டும்.
  பென்சனர் வயது  72  குள் இருக்க வேண்டும்.
  கடன் பெரும் பென்சனருடைய மனைவி குடும்ப பென்சன் பெற தகுதி உடையவராகவும், கடன் பெறும்போது அவர் வயது 65 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  கடன் தொகை:-
            12  மாத பென்சன் உச்ச வரம்பு  3 லட்சம்.
  குடும்ப பென்சனர்களுக்கு  9 மாத பென்சன், உச்ச வரம்பு ரூ.1.5 லட்சம்.
  வாங்கும் கடனுக்கு மாதாமாதம் திருப்பி கட்டும் தொகையானது (EMI) பிடித்தம் போக அவர்  பெரும் பென்சனில் 25% க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

·         கடனுக்கு பாதுகாப்பு (Security)

·   குடும்ப பென்சன் பெரும் தகுதியுள்ள அவர்  மனைவி கடனுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அல்லது கடன் தொகைக்கு சமமான மதிப்புடைய ஒரு மூன்றாம் நபர் ஜாமீன்.
·    குடும்ப பென்சனருக்கு வழங்கும் கடனுக்கு அவருடைய மகனோ அல்லது மகளோ அல்லது அந்த வங்கி கிளையில் நல்ல படியாக கணக்கு வைத்து பராமரிக்கும் ஒரு மூன்றாம் நபர்  ஜாமீன்.

  திருப்பி செலுத்தும் காலம்:-

  70 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் 60 மாதத்தில் கட்ட வேண்டும்.
  70 வயதுக்கு மேல் ஆனவர்கள் 48  மாதத்தில் திருப்பி கட்ட வேண்டும்.
  கடன் பட்டுவாடா ஆகி ஒரு மாதம் கழித்து திருப்பி செலுத்துதல் தொடங்கும்.
  மாதாந்திர பென்சன் வழங்கப்படும்போது கடன் தவணை பிடித்தம் செய்யப்படும்.
  இந்த கடன் பெற எந்த வித கட்டணமும் கிடையாது.
  இந்த கடனுக்கு மார்ஜின் பணம் கட்ட தேவை இல்லை.
  வட்டி விகிதம் இன்றைய தேதியில் 14.75%

70 வயதாகும் ஒருவருக்கு 3 லட்சம் கடன் கொடுக்கும் வங்கியை நிச்சயம் பாராட்டவேண்டும்.
வட்டி விகிதம் கொஞ்சம் அதிகம்தான்.  என்ன செய்வது? கந்து வட்டிக்கு வாங்குவதைவிட இது பரவாயில்லை.

  பாரத ஸ்டேட் வங்கி பென்சனர்களுக்கு 
வழங்கும் கூடுதல் வசதிகள் :-

  ஒவ்வொரு மாதமும் பென்சன் ஸ்லிப் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.
  உங்கள் கணக்கில் பென்சன் வரவு வைத்தவுடன் நீங்கள் பதிவு செய்த உங்கள் கைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பி விடுவார்கள்.
  வருடாந்திர பென்சன் பட்டுவாடா விவரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
  வருடாந்திர லைப் செர்டிபிகேட் எந்த கிளையிலும் கொடுக்கலாம்.
  வருமானவரி பிடித்தம் தொடர்பாக படிவம் Form 15G/15H இவற்றை கிளையிலேயே கொடுக்கலாம்.
  இலவச தொலை பேசி சேவையும் உள்ளது: Toll Free No.1800 112211, 1800 425 3800.
  இணைய தள சேவை வைத்திருப்பவர்களுக்கு ஸ்டேட் வங்கி நல்ல பல வசதிகள் வழங்கியுள்ளது.
  அதிகபடியான ATM சேவை வழங்குவது ஸ்டேட் வங்கி மட்டும்தான்.

இத்தனை பெரிய வங்கியில் நிறைய குறைகளும் இருக்கின்றன என்பது ஒரு கசப்பான உண்மை.

நன்றி: “Elders Voice” September, 2014.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...