Friday 26 September 2014

பாரத ஸ்டேட் வங்கியின் பென்சன் லோன்





பாரத ஸ்டேட் வங்கியின் பென்சன் லோன்

சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி பென்சனர்களுக்கு வழங்கும் கடன் தொகையின் உச்ச வரம்பை ஒரு லட்சத்தில் இருந்து மூன்று லட்சமாக உயர்த்தியிருக்கிறது.

  இந்த கடனை பெரும் தகுதிகள்:

.  பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பென்சன் வாங்கவேண்டும்.
  பென்சனர் வயது  72  குள் இருக்க வேண்டும்.
  கடன் பெரும் பென்சனருடைய மனைவி குடும்ப பென்சன் பெற தகுதி உடையவராகவும், கடன் பெறும்போது அவர் வயது 65 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  கடன் தொகை:-
            12  மாத பென்சன் உச்ச வரம்பு  3 லட்சம்.
  குடும்ப பென்சனர்களுக்கு  9 மாத பென்சன், உச்ச வரம்பு ரூ.1.5 லட்சம்.
  வாங்கும் கடனுக்கு மாதாமாதம் திருப்பி கட்டும் தொகையானது (EMI) பிடித்தம் போக அவர்  பெரும் பென்சனில் 25% க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

·         கடனுக்கு பாதுகாப்பு (Security)

·   குடும்ப பென்சன் பெரும் தகுதியுள்ள அவர்  மனைவி கடனுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அல்லது கடன் தொகைக்கு சமமான மதிப்புடைய ஒரு மூன்றாம் நபர் ஜாமீன்.
·    குடும்ப பென்சனருக்கு வழங்கும் கடனுக்கு அவருடைய மகனோ அல்லது மகளோ அல்லது அந்த வங்கி கிளையில் நல்ல படியாக கணக்கு வைத்து பராமரிக்கும் ஒரு மூன்றாம் நபர்  ஜாமீன்.

  திருப்பி செலுத்தும் காலம்:-

  70 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் 60 மாதத்தில் கட்ட வேண்டும்.
  70 வயதுக்கு மேல் ஆனவர்கள் 48  மாதத்தில் திருப்பி கட்ட வேண்டும்.
  கடன் பட்டுவாடா ஆகி ஒரு மாதம் கழித்து திருப்பி செலுத்துதல் தொடங்கும்.
  மாதாந்திர பென்சன் வழங்கப்படும்போது கடன் தவணை பிடித்தம் செய்யப்படும்.
  இந்த கடன் பெற எந்த வித கட்டணமும் கிடையாது.
  இந்த கடனுக்கு மார்ஜின் பணம் கட்ட தேவை இல்லை.
  வட்டி விகிதம் இன்றைய தேதியில் 14.75%

70 வயதாகும் ஒருவருக்கு 3 லட்சம் கடன் கொடுக்கும் வங்கியை நிச்சயம் பாராட்டவேண்டும்.
வட்டி விகிதம் கொஞ்சம் அதிகம்தான்.  என்ன செய்வது? கந்து வட்டிக்கு வாங்குவதைவிட இது பரவாயில்லை.

  பாரத ஸ்டேட் வங்கி பென்சனர்களுக்கு 
வழங்கும் கூடுதல் வசதிகள் :-

  ஒவ்வொரு மாதமும் பென்சன் ஸ்லிப் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.
  உங்கள் கணக்கில் பென்சன் வரவு வைத்தவுடன் நீங்கள் பதிவு செய்த உங்கள் கைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பி விடுவார்கள்.
  வருடாந்திர பென்சன் பட்டுவாடா விவரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
  வருடாந்திர லைப் செர்டிபிகேட் எந்த கிளையிலும் கொடுக்கலாம்.
  வருமானவரி பிடித்தம் தொடர்பாக படிவம் Form 15G/15H இவற்றை கிளையிலேயே கொடுக்கலாம்.
  இலவச தொலை பேசி சேவையும் உள்ளது: Toll Free No.1800 112211, 1800 425 3800.
  இணைய தள சேவை வைத்திருப்பவர்களுக்கு ஸ்டேட் வங்கி நல்ல பல வசதிகள் வழங்கியுள்ளது.
  அதிகபடியான ATM சேவை வழங்குவது ஸ்டேட் வங்கி மட்டும்தான்.

இத்தனை பெரிய வங்கியில் நிறைய குறைகளும் இருக்கின்றன என்பது ஒரு கசப்பான உண்மை.

நன்றி: “Elders Voice” September, 2014.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...