Sunday 26 October 2014

ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்ன ஆனது ?



தீபாவளி இனிப்பு வழங்கும் நமது பிரதமர்
ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்ன ஆனது ?

சமீபத்தில் சியாசின் பனி மலையில் நமது ராணுவ வீரகளுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி அவர்கள், ஒன் ரேங்க் ஒன் பென்சன் வழங்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். இதை நம்பாதவர்கள் கீழ் கண்ட இணைய தளத்தில் பார்க்கலாம்.
நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை பாராட்டிய பிரதமர் OROP யை பற்றிய உண்மையை கூற வில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பிரதமர் நமது வீரர்களுக்கு இதை அறிவித்த அதே நேரத்தில் இங்கு டெல்லியில் நமது நிதி அமைச்சரும் பாது காப்பு அமைச்சருமான திரு அருண் ஜெயிட்லி அவர்கள் OROP yயை ஒரு பிரச்னையாக வர்ணித்து அதை ஒரு தீர்பாயத்தின் முடிவுக்கு (Referring to a Tribunal) விடப்போவதாக Times Now  என்ற TV  க்கு 22.10.14 இல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.  பிரதமர் சொல்வதற்கும் பாது காப்பு அமைச்சர் கூறுவதற்கும் உள்ள முரண்பாடுகளை பார்த்தீர்களா ?

பிரதமரே பாதுகாப்பு அமைச்சரின் விருப்பபடி தீர்பாயத்தின் முடிவுக்கு விட சம்மதிக்கிறாரா ?  இந்த சூழ்நிலையில் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அமைத்த காபினெட் செக்ரட்டரி கமிட்டிக்கும் இந்த தீர்பாயத்துக்கும் என்ன வித்தியாசம் ?

OROP  யை அமுல்படுத்த தேவைப்படும் நிதி ரூ.4500 கோடி என்று முப்படைகளின் தலைமை அலுவலகம் கூறியுள்ளது.  இதே கணக்கை தன் வழியில் உருவாக்கிய CGDA  ரூ.9100  கோடி செலவாகும் என்று கூறியுள்ளது.  (செலவு கணக்கை தணிக்கை செய்யும் பணி மட்டுமே கொண்ட CGDA , எவ்வளவு செலவாகும் என்ற கணக்கை பரிந்துரைக்க அரசு கேட்டு கொண்டது விந்தையாக இருக்கிறது.)  ராணுவ அமைச்சகத்தின் நிதி பிரிவில் எல்லா விபரங்களும் (Finance Division of MOD) இருக்கும் பட்சத்தில் CGDA வுக்கு ஏன் பரிந்துரைக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

CGDA  கணக்கைவிட  முப்படைகளின் தலைமை அலுவலகம் குறைவாக கணக்கிட்டு கொடுத்த பட்டியலை அமுல் படுத்த ஏன் இந்த தயக்கம்?

சியாசின் பனிமலையில் ஒருநாள்மட்டும், ஒரு சில மணி நேரம் மட்டும் நமது வீரர்களுடன் இருந்து இனிப்பாக பேசி இனிப்பு வழங்கினால் மட்டும் போதாது.  சொல்லியதை செயலில்  காட்டவேண்டும் நமது பிரதமர்.  தான் கூறியதற்கும் அதே நேரத்தில் நிதி அமைச்சர் கூறியதற்கும் முரண்பாடு இருப்பதை தெரிந்த பிறகாவது நமது பிரதமர் விளக்கம் கூறியிருக்கவேண்டும்.  இதுவரை திரு அருண் ஜெயிட்லி கூறியதற்கு நமது பிரதமர் விளக்கம் கூற வில்லை.  அன்று நம் பிரதமர் ஆசையாக பேசி மோசம் செய்து விட்டார் என்றுதான் நேம் வீரர்களுக்கு நினைக்கதோன்றும்.

பொதுவாக ஒரு நாட்டின் நிதி அமைச்சர் ராணுவத்துக்கு செலவு செய்வதை விரும்பமாட்டார்.  துரதிர்ஷ்டவசமாக நமக்கு ஒருவரே நிதி அமைச்சராகவும் ராணுவ அமைச்சராகவும் வந்துவிட்டார்.  ஒரு பிரபல வழக்கறிஞர் ராணுவ அமைச்சராக வந்துவிட்டால் ராணுவ வீரர்கள் அனைவரும் நீதி கேட்டு உச்ச நீதிமன்றம் வரை செல்லவேண்டும்.  இதுதான் தற்போதைய நிலைமை.  எனவே OROP க்காக தீர்ப்பாயத்தை தேடுகிறார் நமது பாதுகாப்பு அமைச்சர்.

கடந்த தேர்தலில் நாடெங்கும் மோடி அலைவீசி ஜெயித்தது BJP.  ஆனால் அருண் ஜெயிட்லி மட்டும் அமிர்தசரஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஒரு ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் முன்னாள் பஞ்சாப் முதல்வருமான கேப்டன் அமரிந்தர் சிங்கிடம் தோல்வியுற்றார்.  தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்கு இரண்டு மாபெரும் அமைச்சு (Finance & Defence)  பணி கொடுப்பது ஜனநாயக விரோத செயலாகும்.  அதன் விளைவுதான் அவர் இன்று எல்லோரையும் நீதி மன்றத்துக்கு அழைக்கிறார்.

நமது பிரதமரோ இனிக்க இனிக்க பேசுகிறார்.  இந்தியில் மட்டுமே பேசுகிறார்.  இந்தி தெரிந்த மக்கள் அவர் பேச்சில் மயங்கி வாக்களித்துவிட்டு இன்று முழிக்கிறார்கள்.  125 கோடி மக்களுக்கும் இந்தி தெரியாது என்பது யாருக்கும் தெரியாதா ?  தகவல் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறியுள்ள இந்த யுஹத்தில் அவர் பேசுவதை  மொழி பெயர்த்து ஒலி, ஒளி பரப்புவதில் என்ன சிக்கல்.  இந்தி தெரியாத, புரியாத மக்கள் நமது பிரதமர் மிகவும் உருக்கமாக பேசுவதை வெறும் ஊமை படம் பார்பதுபோல் பார்த்து கொண்டிருக்கின்றனர் .

மொத்தத்தில் இந்த சர்கார் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக .........

எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் நம் வீரர்கள் பட்டும் நம் எல்லைகளை கண் கொட்டாமல் கண்காணிக்கவேண்டும்.  இங்கு நாட்டில்,  தன் வீட்டில் எது நடந்தாலும் யாருக்கும் கவலையில்லை,  அவன் மட்டும் தன் பணியை செய்யவேண்டும்.  ஏன் என்றால் இது நாம் தாய் நாட்டை காக்க மேற்கொண்ட சத்தியம்.  சத்தியம் தவறாத உத்தமர் போல் நாம் மட்டும் வாழ வேண்டும், நாட்டையும் காக்க வேண்டும்.

சத்திய மேவ ஜெயதே
ஜெய் ஹிந்த்


 

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...