Thursday, 20 December 2012

பெரும் ஏமாற்றம் எங்களுக்கு


எங்களுக்கு பெரும் ஏமாற்றம்.

நீங்கள் ஆவலுடன் எதிர் நோக்கும் பென்சன் ஆணைகள்

நீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் பென்சன் ஆணைகள் ஜனவரி 2013 ல்
வெளிவரும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கீழ் கண்டபடி தான் கூடுதல் இருக்கும் என ஒரு தொலைகாட்சி தெரிவித்துள்ளது.

சிப்பாய் : ரூபாய்.377
நாயக் : ரூபாய்.412
ஹவில்டர் : ரூபாய்.461
கேப்டன்: ரூபாய்.1500
மேஜர்: ரூபாய்.4105
லெப்.கர்னல்.ரூபாய்.565
கர்னல்: ரூபாய்.1745
பிரிகேடியர்:ரூபாய்.2995
மேஜர் ஜென.ரூபாய்.3650

மற்ற ரேங்கில் உள்ளவர்களுக்கு எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை.
இதுதான் இராணுவ அமைச்சகத்தில் சிபாரிசு என்று கூறப்படுகிறது.

சாதாரண படை வீரர்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றம்.
அரசு பெரிய அளவில் செய்திகளை வெளியிட்டுவிட்டு
இந்த குறைந்த அளவு கொடுப்பது சரியில்லை.
தொலைகாட்சி நிகழ்ச்சியை காண
-ak-antony-pension/1/238078.html.

Sunday, 16 December 2012

இராணுவ பென்சன் வழிகாட்டி புத்தகம்.


இதோ வந்துவிட்டது !
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 
இராணுவ பென்சன் வழிகாட்டிபுத்தகம்.

23.12.2012 அன்று நெல்லையில்  வெளியிடபடுகிறது.
  
“இராணுவ பென்சனர்களுக்கு
ஓர் வழிகாட்டி
(A Guide to Defence Pensioners in Tamil)

வெளியிடுவோர்
எக்ஸ் வெல் அறக்கட்டளை
15G மிலிடரி லைன்,
சமாதானபுரம், பாளையம்கோட்டை,
திருநெல்வேலி 627002.
போன்: ௦04622575380
9786449036, 9894152959,
9442801632, 9894125019

இராணுவ பென்சனர்களுக்கு ஓர் அருமையான புத்தகம்.
ஒவ்வொரு இராணுவ பென்சனரும் அவசியம்
படித்து பயன் பெறவேண்டியது.

தேவைபடுவோர் தொடர்பு கொள்ளவும்.

Monday, 10 December 2012

திருமண நிகழ்ச்சியும், தஞ்சாவூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்க கூட்டமும்.





திருமண நிகழ்ச்சியும், தஞ்சாவூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்க கூட்டமும்.

எனது ஆருயிர் நண்பர் திரு நா.இராசமோகன் (இந்திய விமான படை ஓய்வு) அவர்களின் மகன் செல்வன் Er.R.சுந்தர் (எ) செல்வ நாயகத்துக்கும்
Dr.E.ஜெயப்ரியவுக்கும்
12.12.12 புதன்கிழமை காலை 9 மணிக்கு
முத்துபேட்டை
சிதம்பர ராமஜெயம் திருமண அரங்கில் வைத்து
திருமணம் நடைபெற உள்ளது.
நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு
மணமக்களை வாழ்த்திட நண்பர் சார்பாக வேண்டுகிறேன்.

பின் குறிப்பு

திருமணத்தில் கலந்துகொள்ளும் முன்னாள் விமானப்படை நண்பர்களின் வசதிக்காக தஞ்சாவூர் முன்னாள் விமானப்படை வீரர்களின் சங்கத்தின்
 காலாண்டு கூட்டம்
முத்துபேட்டை கொய்யா கல்யாண மண்டபத்தில் வைத்து அன்றைய தினம் காலை 11 மணிக்கு நடைபெறும் என சங்க தலைவர் தெரிவிக்கிறார்.

நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் சிறப்பிக்க அனபுடன் கேட்டுகொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு

திரு நா.இராசமோகன் போன்:9442232221
திரு ஷண்முகம், செயலாளர்:9500355847

Tuesday, 20 November 2012

ஒன் ரேங்க் ஒன் பென்சன்



ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்ன ஆனது?

சமீபத்தில் அரசு அறிவித்த 2300  கோடி கூடுதல் பென்சன் பலன்கள் என்ன ஆனது என்று அனைவரும் கேட்ட வண்ணம் உள்ளனர்.

இது சம்பந்தமாக நமது சங்க தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ராஜ் காடியன்  அவர்கள் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து கேட்டபோது ,  பென்சன்  பணிகள்  வேகமாக நடந்து வருவதாகவும் நவம்பர் மாத இறுதியில் அரசு ஆணைகள் வெளிவரும் என கூறியுள்ளார்.

குடும்ப பென்சனிலும் முன்னேற்றம் இருக்கும். சிப்பாய் மனைவிகளுடைய குடும்ப பென்சனில் உள்ள குறைகளை சரிசெய்ய அனைத்து முயற்சிகளும் நடந்துவருவதாக கூறினார்.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...