தமிழ் பேசும் முன்னாள், இந்நாள்படை வீரர்களின் நல்வாழ்வுக்கான ஓர் வலை பதிவு. நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைக்கத நாடு இனி யாரும் அதற்காக உயிர் விடும் தகுதியை இழந்துவிடும். "தெரிந்து கொள்ளுங்கள்" என்ற ராணுவ பென்சன் வழிகாட்டி புத்தகம் வந்துவிட்டது. அவசியம் படிக்கவும்.
Showing posts with label ஒன் ரேங்க் ஒன் பென்சன். Show all posts
Showing posts with label ஒன் ரேங்க் ஒன் பென்சன். Show all posts
Sunday, 30 December 2012
Tuesday, 20 November 2012
ஒன் ரேங்க் ஒன் பென்சன்
ஒன் ரேங்க் ஒன் பென்சன்
என்ன ஆனது?
சமீபத்தில் அரசு அறிவித்த 2300 கோடி கூடுதல் பென்சன் பலன்கள்
என்ன ஆனது என்று அனைவரும் கேட்ட வண்ணம் உள்ளனர்.
இது சம்பந்தமாக நமது சங்க தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ராஜ் காடியன் அவர்கள் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து
கேட்டபோது , பென்சன் பணிகள்
வேகமாக நடந்து வருவதாகவும் நவம்பர் மாத இறுதியில் அரசு ஆணைகள் வெளிவரும் என
கூறியுள்ளார்.
குடும்ப பென்சனிலும் முன்னேற்றம் இருக்கும். சிப்பாய் மனைவிகளுடைய குடும்ப
பென்சனில் உள்ள குறைகளை சரிசெய்ய அனைத்து முயற்சிகளும் நடந்துவருவதாக கூறினார்.
Wednesday, 26 September 2012
ஒன் ரேங்க் ஒன் பென்சன் பெரும் ஏமாற்றம்.
“ஒன்
ரேங்க் ஒன் பென்சன்”
ஒரு
மாபெரும் ஏமாற்றம்
பல
ஆண்டுகளாக கேட்கபட்டுவந்த ஒன் ரேங்க் ஒன் பென்சன் கோரிக்கையை கண்டிப்பாக அமுல்
படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்த இருபது லட்சம் படை வீரர்களை இந்த அரசு
ஏமாற்றிவிட்டது. மிகவும் தந்திரமாக
செய்திகளை வெளியிட்டு ராணுவ வீரர்களுக்கு ஏதோ வாரி வழங்குவதுபோல் நாட்டு மக்களிடம்
பொய் பிரசாரம் செய்து வருகிறது. ஒரு
சாதாரண சிப்பாய்க்கு இந்த அரசின் சூட்சிகள் புரியாத காரணத்தால், அரசின் அதிகார
வர்க்கமும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.
ஏமாற்றுபவர்கள்
ஒரு நாள் பெருத்த ஏமாற்றத்தை அடையபோகிரர்கள்.
நாம்
அனைவரும் ஒன்று சேரவேண்டும் அதுதான் முக்கியம்.
ஜார்ஜ்
வாஷிங்டன் கூறியதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்
“ஒரு
நாட்டின் இன்றைய இளம் படை வீரர்கள் போரில்
எத்தனை வீரத்துடன் செயல்படுவார்கள் என்பது அந்த நாடு தன்னுடைய முன்னாள்
படைவீரர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை பொறுத்துத்தான் இருக்கும்”
ஒரு
புகழ்பெற்ற அனுபவசாலியின் கருத்து.
காலம்தான்
இதற்க்கு தக்க பதில் சொல்லும்.
நாம்
அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தலைமையின்கீழ் போராடினால்
ஒரே
நாளில் கிடைக்கும் இந்த
ஒன்
ரேங்க் ஒன் பென்சன்.
நாம்
ஒன்று சேர்வோமா ?
Subscribe to:
Posts (Atom)


