Wednesday 7 January 2015

இராணுவ அமைச்சகத்தின் வினோதமான போக்கு



 
அமைச்சரின் முடிவா அல்லது அதிகார வர்கத்தின் முடிவா?

எங்கள் மேல் ஏன் உங்களுக்கு இத்தனை கோபம் ? எல்லையை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.
 
இராணுவ அமைச்சகத்தின் வினோதமான போக்கு

முன்னாள் ராணுவத்தினர் நலன் காக்க 2004 தொடங்கப்பட்ட முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை (Department of Exservicemen Welfare DESW) கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து அதன் நோக்கத்திற்கு எதிராகவே செயல்படுகிறது என்பது கசப்பான உண்மை.

இதன் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக சமீபத்தில் ஜனவரி 2 இல் ஒரு முடிவு எடுத்துள்ளது.  அதன்படி ராணுவ அமைச்சகத்தை எதிர்த்து (MOD) நீதி மன்றம் செல்பவர்கள் (குறிப்பாக இயலாமை பென்சன் சம்பந்தமாக ) உச்ச நீதிமன்றம் வரை செல்லவேண்டும் என்பதுதான்.

DESW Memo No.MOD ID No.1(ii) 2013/D (Pension/Legal) dated 02.01.2015  ஆணையின்படி குறித்த ஆறு வகையான தாவாகளுக்கு  நேரடியாக உச்ச நீதிமன்றம் அப்பீல் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.  கடந்த 64 ஆண்டுகளில் நம் ராணுவ வீரர்களுக்கு இளைத்த அநீதிகளுக்கு நீதிமன்றங்கள் பல நல்ல தீர்ப்புகள் வழங்கியுள்ள சூழ்நிலையில் ராணுவ அமைச்சகம் கோபம் கொண்டு எதையும் அமுல் படுத்த முன் வராமல் அனைத்தையும் அப்பீல் செய்து காலம் தாழ்த்தி யாருக்கும் எதுவும் கிடைக்கவிடாமல் செய்து வருகிறது.  ராணுவ தீர்ப்பாயத்தை (AFT) வெறும் செல்லா காசாக்கி விட்டது நமது ராணுவ அமைச்சகம்.

1965 இல் நடந்த இந்திய பாக்கிஸ்தான் போரில் தனது கால் ஒன்றை இழந்த லெப்டினன்ட் ஜெனரல் ஓபராய் அவர்கள் தொடர்ந்து பணியில் இருந்து 2001 இல் இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக ஒய்வு பெற்றபின் 70 சதவீத இயலாமை பென்சன் வழங்கப்பட்டது.  5 வது ஊதிய கமிசன் இவரை போன்றவர்களுக்கு 75 சதவீதம் வழங்க பரிந்துரை செய்தது.  ஆனால் ராணுவ அமைச்சகம் 75 சதவீதம் வழங்க மறுத்ததின் பேரில் ராணுவ தீர்ப்பாயம் சென்று வெற்றி பெற்று பின்னர் உச்ச நீதிமன்றம் வரை சென்று 2012 இல் தான் பெற முடிந்தது.  ஒரு ராணுவ துணை தளபதிக்கே இந்த நிலை என்றால், சாதாரண சிப்பாய் நிலைமை என்ன ஆகும்?

திரு ஓபராய் சொல்வதென்னவென்றால் 70 சதவீதம் இயலாமை பென்சன் வழங்கப்பட்ட ஒருவருக்கு 75 சதவீதம் வழங்க மறுத்து இரண்டு ஆண்டுகள் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது MOD.  திரு ஓபராய் அவர்களுக்கு இந்த 5 சதவீத உயர்வு ஒரு பெரிய தொகையாக இல்லாவிட்டாலும் MOD யின் பிடிவாதத்தை முறியடிக்கவே உச்ச நீதிமன்றம் சென்றதாக கூறுகிறார்.  ஒரு சாதாரண சிப்பாய் இது போன்று அப்பீல் போக முடியுமா என்பதுதான் கேள்வி.?

கடந்த காலத்தில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட பல முன்னாள் ராணுவத்தினர், மக்களின் வரிப்பணத்தில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களை எதிர்கொள்ள முடியாமல் விலகி விட்டனர்.  பெரும்பாலான வழக்குகள் முடிவாகுமுன்னர் பலர் இறந்து விடுகின்றனர்.  இதுதான் நிலைமை.  இதை பயன்படுத்தி MOD இப்போது அப்பீல் செய்ய முழு மூச்சில் இறங்கி விட்டது.

முன்னாள் ராணுவத்தினர் சம்பத்தப்பட்ட பெரும்பாலான, பொதுவான ஆறு வகையான அநீதிகளுக்கு வெற்றி கண்ட (இயலாமை பயன்கள், பென்சன் பயன்கள் ) அனைத்து வழக்குகளையும் எந்த பரிசீலனையும் இன்றி உச்ச நீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்ய DESW  ஆணை பிறப்பித்துள்ளது ஒரு மாபெரும் கொடுமை.  இதை அறிந்த நமது ராணுவ தளபதி ஜெனரல் விக்ரம் சிங் நமது ராஜ்ய ரக் ஷா மந்திரி திரு ஜிதேந்திர சிங்கிடம் புகார் அளிக்க வுள்ளார்.

பல ஆயிரகணக்கான நல்ல தீர்ப்புகளை இன்னும் அமுல் படுத்தாமல் கிடப்பில் போட்டிருக்கும் ராணுவ அமைச்சகம் தற்போது மேலும் பல வழக்குகளை மேல் முறையீடு செய்கிறது.  இதையே தனது முழு நேர வேலையாக கொண்டுள்ளது DESW நமது நலன் காக்கும் இந்த துறை.

90 சதவீத வழக்குகளுக்கு எதிராக உச்ச நீதி மன்றம் சென்ற MOD  எல்லா வகையிலும் தோற்று போனபின் ஏழை படை வீரர்களுக்கு நீதி கிடைக்க காலம் தாழ்த்துகிறது.  இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் இப்போது அதிகரித்து விட்டது.  அதிகார வர்க்கம் நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிப்பது சாதாரணமாகிவிட்டது.

முன்னாள் இராணுவத்தினரின் நல் வாழ்வுக்காக 2004 இல் அமைக்கப்பட்ட இந்த துறை தற்போது ஒரு முழு நேர செயலாளரை கொண்டு முழுவதும் முன்னாள் ராணுவத்தினருக்கு எதிராக செயல்படுவதென்பது தான் உண்மை.  இதற்க்கு என்ன தீர்வு என்று தெரியவில்லை.  காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...