Wednesday, 20 November 2013

ஆறாவது ஊதிய கமிசன் இன்னும் முடியவில்லை.





ஆறாவது ஊதிய கமிசன் ௦அரியர்ஸ் 01.01.2006 முதல் கிடைக்குமா ?

அரசு தனது ஊழியர்களுக்கு 6வது ஊதிய கமிசன் அரியர் தொகையை 01.01.2006  முதல் வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது.

அரசின் மேல் முறையீடுகள்  அனைத்தையும் உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஊதிய கமிசனின் சிபாரிசுகளை சரியாக அமுல்படுத்தாத காரணத்தால் சில முரண்பாடுகளை நீக்கி அதன் பலன்களை 01.01.2006 முதல் வழங்காமல் அரசு தன்னிச்சையாக 24.09.2012 முதல் வழங்க ஆணையிட்டது.  இதை எதிர்த்து வழக்காடி வெற்றி பெற்றுள்ளனர்.  (இன்னமும் அரசு மனம் இறங்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.)

“நீதி நிச்சயம் வெல்லும் “ என்பது நிரூபணமாகி விட்டது.

Friday, 1 November 2013

எமது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 

Friday, 13 September 2013

இரங்கல் செய்தி





இரங்கல் செய்தி

நாகப்பட்டினம் மாவட்டம், கீளாவூரை சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரர் CPL S. சந்திர சேகர் 12.09.2013  வியாழக்கிழமை அன்று காலமானார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.  இறுதி சடங்கு 13.09.2013 வெள்ளிகிழமை நடைபெறும்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.  அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.
தொடர்புக்கு : K.ரவிச்சந்திரன் 
போன் :9443908103

Sunday, 25 August 2013

ஒய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் சங்கம் தமிழ் நாடு கிளை கல்வி உதவி தொகை அறிவிப்பு 2013-14




ஒய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் சங்கம்
தமிழ் நாடு கிளை
விமானப்படை நிலையம், தாம்பரம்,
சென்னை 46.
தொலைபேசி: 044-22392546, 22396565

கல்வி உதவி தொகை அறிவிப்பு 2013-14

தமிழ் நாட்டிலுள்ள ஒய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் (உறுப்பினர்கள்) குழந்தைகளுக்கு இவ்வாண்டு கீழ் கண்ட கல்வி
உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

1. Sqn.Ldr. KV பிள்ளை மற்றும் சரஸ்வதி பிள்ளை கல்வி உதவி தொகை.(Rs.4,500 வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு)

2. HFO ஜாபாலி மற்றும் திருமதி பட்டம்மாள் ஜாபாலி கல்வி உதவி தொகை. (Rs.4500  வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு)

3. திரு ஜார்ஜ் மற்றும் திருமதி ஹெலன் கல்வி உதவி தொகை (Rs.4500 வீதம் இரண்டு குழந்தைகளுக்கு). Gp.Capt. Eslin D’Couto VM தனது பெற்றோரை கௌரவிக்கும் பொருட்டு வழங்குவது.

4.  Air Cmde.K. லக்ஷ்மணன் மற்றும் திருமதி மீனா லோசினி லக்ஷ்மணன் ஆகியோர் வழங்கும் நிதி உதவி. Rs.5000  வீதம் இருவருக்கு.

5. ஜெரல்டின் டிகொட்டா திருமண நிதி உதவி Rs.10,000/-  Gp.Capt.Eslin D’Couto மறைந்த தன் தங்கை நினைவாக வழங்குவது.

மேற்கண்ட நிதி உதவிகள் அனைத்தும் 21.09.2013 அன்று நடைபெறும் சங்கத்தின் ஆண்டுவிழாவில் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் 07.09.2013 இக்குள் அனுப்ப வேண்டும்.



இவண்
  குருப் கேப்டன் A. சாம்பசிவராவ்
செயலாளர் 
 


Tuesday, 6 August 2013

ஆனரரி நாயப் சுபேதார் பென்சன் வழக்குகள்


ஆனரரி  நாயப் சுபேதார் பென்சன் வழக்குகள்
வெற்றி மீது வெற்றி கண்டு வருகின்றன 
என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆனரரி நாயப் சுபெதார்களுக்கு ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் வழங்கவேண்டும் என்று ஆறாவது ஊதிய கமிசன் தெளிவாக கூறியிருந்த போதிலும் அரசு இதை அமுல் படுத்த வில்லை.

இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று வெற்றி கண்டது.  இருந்தும் அரசு இன்னும் வழங்கவில்லை.  சில தவறான விளக்கங்களை அரசு வழக்கறிஞர் உச்ச நீதி மன்றத்தில் வழங்கியதால் இந்த தீர்ப்பு இன்னும் அமுல் படுத்த படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 11.03.2013 அன்று கொச்சி ராணுவ நீதி மன்றம் இந்த உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை (O.A.49 of 2012 of AFT Kochin) மேற்கோள் காட்டி  32  ஆனரரி நாயப் சுபெடார்களுக்கு ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  இந்த 32  மனுதாரர்களில் சுமார்  28  பேர் 75 வயதை கடந்தவர்கள்.  கொச்சி AFT  வழங்கிய இந்த தீர்ப்பை இன்றைய தேதியில் அமுல் படுத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது.  ஜெய்பூர் ராணுவ நீதி மன்றத்திலும் இதே போன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் தமிழ் நாட்டிலிருந்து எந்த ஒரு ஆனரரி நாயப் சுபேதாரும் சென்னை AFT  இக்கு சென்றதாக தெரியவில்லை.  ஏன் என்றும் தெரிய வில்லை.

ஒரு Y குரூப் ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் (24 வருடம்) Rs.9382.00
ஒரு Y குரூப் ஆனரரி நாயப் சுபேதார் பென்சன் (24 வருடம்)  Rs.7601.00


நீதிமன்றம் சென்றால் கூடுதல் பென்சனும் கிடைக்கும் 01.01.2006 முதல் அரியர்ஸ் தொகை சுமார் 3.5  லட்சம் வரை கிடைக்கும். 

எனவே நமது தமிழ் நாட்டிலுள்ள ஆனரரி நாயப் சுபெடார்களே விழித்தெழுங்கள்.  கான்டீன் கோட்டாவை மட்டும் வாங்குவதற்கு இல்லை இந்த பதவி.  

Monday, 5 August 2013

பென்சனர்களின் ஜாயின்ட் அக்கௌன்ட் பிரச்சினைகள்.


பென்ஷன் சேமிப்பு கணக்கை ஜாயின்ட் அக்கௌன்ட் ஆக
வைத்துக்கொள்வதில் உருவாகும் புதிய பிரச்சனைகள்.

ஒரு பென்சனர் தற்போதைய மத்திய அரசின் ஆணைகளின் படி 
தன் பென்சன் கணக்கை ஜாயின்ட் அக்கௌன்ட் ஆக
 வெகு எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.  
ஆனால் பின்னொரு காலத்தில் கணவன், 
மனைவி இருவருக்குள் ஏதேனும்
 பிரச்சனை வந்து இந்த கணக்கை மறுபடி 
தனி கணக்காக மாற்ற வேண்டும் என்று 
கணவன் நினைத்தால், அதற்க்கு 
மனைவியின் கையெழுத்தையும் வங்கி கேட்கும் 
என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
 மனைவி கையொப்பமிட மறுத்தால் 
தனி கணக்காக மாற்ற முடியாது.  
இந்த நிலையில் சில விவரமான மனைவி, 
கணவனுக்கு முன்னதாகவே பென்ஷனை எடுத்துக்கொண்டு 
கணவனை அம்போ என்று விட்டு விடுவதும்
 நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 
சில வங்கிகள் ஓரளவுதான் இவர்களை 
சமாதானப்படுத்த முடியும்.  
நிரந்தர தீர்வுக்கு என்ன செய்வது 
என்பதுதான் தற்போதைய கேள்வி.

1. நன்கு யோசித்து, மிகவும் அவசியம் 
என்றால் மட்டுமே ஜாயின்ட் 
அக்கௌன்ட் ஆக மாற்ற வேண்டும்.
2. இது போன்ற பிரச்சினைகள் வந்துவிட்டால், 
உடனே வேறு ஒரு வங்கியில் 
சேமிப்பு கணக்கு தொடங்கி, உங்கள் பென்ஷனை
 அந்த வங்கிக்கு மாற்ற சொல்லி 
விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.  
தேவைபட்டால் உங்கள் ரெகார்ட் 
ஆபிசுக்கும் தெரிவிக்க வேண்டும்.
3. பென்ஷனை எடுத்து செலவு செய்யும் விஷயத்தில், 
அன்பும், பாசமும், கண்டிப்பும், 
சிக்கனமும் மிகவும் அவசியம்.
4. வயதான பென்சனர்கள் அவசர செலவுக்கு 
கொஞ்சம் ரொக்க பணத்தை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

எந்த சூழ்நிலையிலும் ஒரு பென்சனர், நாம் தான் குடும்ப தலைவன் என்ற அந்தஸ்தை விட்டுக்கொடுக்கலாகது.  ஒருவேளை அப்படி ஒரு சூழ்நிலை உருவாவது போல் தோன்றினால் அதை முளையிலேயே கிள்ளி விடவேண்டும்.



எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...