Monday, 4 January 2016

எக்ஸ் வெல் அறக்கட்டளையை பாராட்டி கவிஞர் இல. நாதன் அவர்களின் கவிதை

எக்ஸ் வெல் அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டுவிழா 
செய்திகள்
கவிஞர் செந்தூர் இல.நாதன்
எக்ஸ் வெல் அறக்கட்டளையின்  பத்தாவது ஆண்டுவிழா
விழாவில் செந்தூர் கவிஞர் இல நாதன் அவர்கள்
அரங்கேற்றிய கவிதை உங்கள் பார்வைக்கு..
அறக்கட்டளையின் சேவைக்கு ஒரு பாராட்டு
இந்த கவிதை வடிவில்

காலத்தின் வழி

ஒவ்வொரு நாளும்

உயிர் இருப்பிற்கும்,

உறுப்பிழப்பிர்க்கும்

உத்திரவாதம் இல்லா நிலை ...


ஆரேனும் விரும்புவார்களா ?

அத்தகைய வேலை

ஆகவேதான் இந்த

இராணுவ வீரர்களுக்கு

இந்திய மனங்களில்

இமாலய உயர்நிலை !


வழிகாட்டி இல்லாத பாதை

திசை மாறி

திணற வைக்கும்


வழிகாட்டுதல் இல்லாத

உரிமை வினாக்கள்

ஊமையான உண்மையை

உணரவைக்கும் !


அது காட்சியின் பிழை !

இது காலத்தின் குறை !

முன்னாள்

படை வீரர்களுக்கு

பார்வையிருந்தும்

குருடனின் நிலை


ஆகவே

ஆண்டவன் இட்டான் கட்டளை

அமைந்தது
எக்ஸ் வெல் அறக்கட்டளை !

தேய்வூதியமாகிப்போன

ஓய்வூதிய விகிதங்களை

சரிவிகித  சதவீதங்களாய்

சாமான்யர்க்கும் பெற்றுத்தருவது

இந்த அறக்கட்டளையின் சேவை !


சரியான சமமான

தீர்வுகளே

இவர்களின் பாதை  !


ஆதரவற்ற விதவைகள்

ஆதரவிருந்தும், அனைவரும்

அடையமுடியா

ஓய்வூதிய பலன்கள்

அத்துணைக்கும்

அறக்கட்டளை அளிக்கும்

புத்தகங்களே

புதிய கீதை

அன்று

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்

பேரறிஞரரின் பொன்மொழி !


அது போல்


இன்று

“ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்

இவர்களின் உறுதிமொழி !



கட்டாயம் அது நிறைவேற

காலம் செய்யும் வழி !

நன்றி ! ஜெய் ஹிந்த் !  ..............செந்தூர் இல. நாதன்



 ஒரு மாற்று திறனாளி
செல்வி 
அபர்ணாவுக்கு நவீன காலணி வழங்கிய
(நடுவில் இருப்பவர் டாக்டர் திருமதி முத்து மீனாள் அவர்கள்)


 வள்ளல் திரு C.ராமமூர்த்தி அவர்கள் 
சௌர்ய சக்கரா விருதுபெற்றவர்.

Friday, 1 January 2016

எக்ஸ் வெல் அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டு விழா


 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
(2016)
எக்ஸ் வெல் அறக்கட்டளையின்
பத்தாவது ஆண்டு விழா
 மிலிடரி லைன்ஸ், சமாதானபுரம்பாளையம்கோட்டை,
திருநெல்வேலி -627002

இடம்: மணி மஹால், சாந்திநகர், பாளையம்கோட்டை.
நாள்: 03.01.2016 ஞாயிறு காலை 10 மணி.
சிறப்பு விருந்தினராக
Wg.Cdr.P.J.விக்டர் அவர்கள்
Sgt.S.சண்முகம் அவர்கள், பேரளம்.
Cpl.மோகன ரங்கன் அவர்கள், சென்னை.
Sgt.டேவிட், அவர்கள். கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் .
விழாவில்
“தெரிந்து கொள்ளுங்கள்” என்ற
பென்சன் வழிகாட்டி புத்தகத்தின்
இரண்டாம் பதிப்பு வெளியிடப்படும்.
தேவையானர்வர்களுக்கு டிஜிட்டல் லாக்கர் கணக்கு திறந்து கொடுக்கப்படும்.
முதியோர்கள் கௌரவிக்கபடுவர்.
படை வீரர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
திருநெல்வேலி ECHS கிளினிக்கில் பணிபுரியும் சிறந்த பணியாளர்கள் கௌரவிக்கபடுவார்கள் .
ஏழை பொதுமக்களுக்கு பல உதவிகள் வழங்கப்படும்.
அனைவருக்கும் தியானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.
“நங்கூரம்” என்ற பெயர் கொண்ட புதுமையான முதியோர் மறு வாழ்வு மையம் அறிமுகப்படுத்தபடும்.
ECHS மற்றும் பென்சன் பற்றிய கேள்வி பதில் அடங்கிய படக்காட்சியும் திரையிடப்படும்.
இது ஒரு நல்ல செய்தியும், செயல்களும் அடங்கிய விழா.
அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
இவண்
R.செல்லப்பா,
நிர்வாக அறங்காவலர்
எக்ஸ் வெல் டிரஸ்ட்,
திருநெல்வேலி-2. 

Monday, 23 November 2015

ஜீவன் பிரமாண் எளிதாக்கப்பட்டுள்ளது





உயிர் சான்றிதழ் (LIFE CERTIFICATE)
வழங்குவது எளிதாக்கபட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்
1.  ஆதார் அடையாள அட்டை.
2.  பென்சன் ஆணை எண்.
3.  வங்கி கணக்கு எண்.
4.  உங்களுடைய கை பேசி.

ஜீவன் பிரமாண் என்னும் இணைய தளத்தில் உங்கள் ஆதார் எண், பென்சன் ஆணை எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து உங்களுடைய கை விரல் ரேகையை பதிவு செய்யும் பட்சத்தில் தங்களுடைய பெயர் பதிவு செய்யப்பட்டு ஒரு அடையாள எண் வழங்கப்படும்.  இந்த பதிவை நீங்கள் நவம்பர் மதத்தில் இணைய தள வசதியும், கை ரேகை பதிவு  செய்யும் வசதியுடைய எந்த ஒரு சேவை மையத்திலும் செய்யலாம்.  இப்படி செய்துவிட்டால் நீங்கள் வங்கிக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை.  இந்த பதிவு மூலம் அச்சிட்டு பெறப்பட்ட சீட்டை நீங்கள் வங்கியில் கொடுத்தால் போதும்.

எக்ஸ் வெல் அறக்கட்டளை, வங்கிக்கு நேரில் செல்லமுடியாத வயதான, நோய்வாய் பட்ட பென்சனர்களுக்கு அவர்கள் வீட்டிற்கு கணிப்பொறியுடன் சென்று இந்த உயிர் சான்றிதழ் பதிவை செய்து கொடுக்கிறது.

இந்த சேவை தேவைபடுவோர் எங்களை தொடர்பு கொள்ளவும்.

எக்ஸ் அறக்கட்டளை,
15G, மிலிடரி லைன்,
சமாதானபுரம், பாளையம்கோட்டை.
போன்: 0462-2575380, 9894152959, 9786449036

Tuesday, 10 November 2015

ஒன் ரேங்க் ஒன் பென்சன் அறிவிப்பு





ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் அறிவிப்பு
 வெளி வந்துள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்.

1.      01.01.2013 இல் டிச்சார்ஜில் வருபவர்களுக்கு வழங்கப்படும் பென்சன் அதற்க்கு முன்னதாக வெளி வந்த அனைத்து பென்சனர்களுக்கும் 01.07.2014 முதல் வழங்கப்படும்.
2.      2013 இல் ஒய்வு பெரும் ராணுவ வீரருடைய ரேங்க் மற்றும் சர்விஸ் அடிப்படையில் வழங்கப்படும் பென்சன் மற்றவர்களுக்கு 2013 இல் ஒய்வு பெரும் ஒருவருடைய ரேங்க் மற்றும் சர்விஸ் அடிப்படையில் கிடைக்கும் குறைந்த பென்சன் – கூடுதல் பென்சன் ஆகியவற்றின் சராசரி (Average) அடிப்படையில் பழைய பென்சனர்களுக்கு பென்சன் 01.07.2014  முதல் மாற்றி அமைக்கப்படும்.
(இதன் முழு விபரம் அரசாணைகள் வந்த பின்னர்தான் தெரியும்)
3.      இந்த புதிய முறையில் யாருக்கேனும் பென்சன் குறைவாக வரும் பட்சத்தில் அவர் தற்போது வாங்கும் கூடுதல் பென்சன் பாதுகாக்கப்படும்.
4.      அரியர் தொகையானது நாலு தவணைகளில் அரையாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
5.      ஆனால் அனைத்து வகை குடும்ப பென்சனர்களுக்கும் ஒரே தவணையில் வழங்கப்படும்.
6.      வரும் காலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராணுவ பென்சனர்களுடைய பென்சன் மாற்றி அமைக்கப்படும்.  அடுத்த மாற்றம்  2019 இல் வரலாம்.
7.      சுய விருப்பத்தின் அடிப்படையில் ராணுவ பணியிலிருந்து விலகி வருபவர்களுக்கு (under Rule 13(3) 1(i) (b) 13 (3) 1 (iv) or Rule 16B of Army Rule 1954 or equivalent Navy & Air Force) ஒன் ரேங்க் ஒன் பென்சன் பயங்கள் கிடைக்காது.
8.      ஒன் ரேங்க் ஒன் பென்சனை அமுல் படுத்துவதில் உள்ள குறைபாடுகளை ஒரு நீதி மன்ற குழு விசாரித்து ஆறு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கவேண்டும்.
9.      அனைவருக்கும் உரிய புதிய பென்சன் அடங்கிய பட்டியல் விரைவில் தயாரிக்கப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

 நமது கோரிக்கையை ஏற்றுகொள்ள வில்லை இந்த அரசு.  நாம் 185 நாள் உண்ணாவிரதம் இருந்தும் எந்த பயனும் இல்லை.

புதிய பென்சன் எவ்வாறு நிர்ணயிப்பார்கள் என்று நம்மால் யூகிக்க முடிய வில்லை.  அறிவிப்பு வெளி வந்தும் நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...