Friday, 19 September 2014

மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்ள உதவுங்கள்.


கடைசி நேரத்தில் இந்த ஆறுதல்தான் தேவை


மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்ள உதவுங்கள்.

     வயதானவர்கள் தன்னிடம் அன்பாக இருபவர்களை விட்டுவிட்டு தன்னை எதிர்கொள்ளும் மரணத்தை ஏற்றுகொள்ள தயாராக இருக்கிறார்கள்.

     வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர்கள் மரணத்தைக்கண்டு அஞ்சுவதில்லை.  மரணம் என்பது இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வு என்பதை முற்றிலும் உணர்ந்தவர்கள் இவர்கள்.

     நம்மில் பலர் சாகும் தருவாயில் உள்ளவரை எப்பாடுபட்டாவது, எவ்வளவு செலவு செய்தாவது பிழைக்க வைத்து விடவேண்டும் என்று தவறான ஒரு முயற்சியை செய்கிறோம்.  சில நேரங்களில் இதனால் பாதிக்கப்பட்டவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மிகுந்த கஷ்டமும் மன உளைச்சலும் உண்டாகிறது.

     இதுபோன்ற பல நேரங்களில் நல்ல மருந்தையும், மருத்துவரையும் விட மரண படுக்கையில் இருப்பவரிடம் அன்பாக பேசி அவருக்கு துணையாக இருப்பதுதான் சிறந்தது என்பதை மறந்து விடுகிறோம்.  எந்த நிலையிலும் நீங்கள் அவருடன் இருந்து சந்தோசத்தையும் துக்கத்தையும் பகிர்ந்துகொண்டு அவர் பிரிவதையும் ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் அடைவது மருந்தைவிட சிறந்தது.

     பெரும்பாலும்  தீராத நோயினால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள் மருத்துவமனையில் இருப்பதைவிட தன் வீட்டிலேயே தன்னை நேசிப்பவர்கள் நடுவிலேயே இருக்க விரும்புவார்கள்.  அவருடைய இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதன்மூலம் அவருடைய மரணம் விரைவாக நிகழலாம்.  இதனால் தவறில்லை.அவருடைய உணர்சிகளுக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்வதுதான் நல்லது.  சில முதியவர்கள் தனக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளை நினைத்து நோயின்பால் அடையும் வேதனையைவிட மனவேதனை அதிகம் அடைவதுண்டு. எனவே இவர்களின் விருப்பத்திற்கேற்ப நடப்பதே சிறந்தது.

     மரண படுக்கையில் இருப்பவர்களின் கண்கள் கடைசி நேரத்தில் தன் அன்புக்கினியவர்களை காண ஏங்கும். இவர்கள் அவர்  முன் தோன்றி உண்மை நிலையை அன்பாக எடுத்து கூறி தன் கண்ணீரை காண்பித்தால் அமைதியாக உயிர் பிரியும்.  மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் யாரும் இல்லா  அனாதையாக உயிர் பிரிவதைவிட இதுபோன்ற அன்பானவர்கள் புடைசூழ கண்ணீர் மல்க உயிர் பிரிவது ஆயிரம் மடங்கு உயர்ந்தது.  மனித உயிர்கள் பிரியும்போது இதைத்தான் விரும்புகிறது என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.
தன்னிடம் போதிய வசதி இருக்கிறது என்ற காரணத்தினால் பிரியும் உயிரை மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தனிமையில் இயந்திரங்களின் மத்தியில் விட்டுவிட்டு கண்ணாடி வழியாக பார்ப்பது மாபெரும் கொடுமை என்பதை குறைந்தது பெற்ற பிள்ளைகளாவது உணரவேண்டும்.

     நம் எல்லோரையும் மரணம் ஒருநாள் கவ்வபோகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.  இருந்த போதிலும் நம் கண் முன்னால் வேறு ஒரு முதியவர் மரணத்தை சந்திக்க நேரிடும்போது அவருக்கு ஆறுதலாக அருகில் இருப்பதுதான் சிறந்த சேவை என்பதை நினைவில்  கொண்டு ஒவ்வொருவரும் வாழ்வது சிறந்தது.

     ஒரு மனிதனின் முழுமையான மரணம் என்பது தன் இல்லத்திலேயே தன் குடும்பத்தினர் புடைசூழ அனைவரும் கண்ணீர் மல்க விடை பெறுவதுதான்.  எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்.

     என் நண்பர் ஒருவர் தன் ஆருயிர் மனைவியை மருத்துவ மனையில் ICU  வில் விட்டுவிட்டு மருந்து வாங்க சென்ற நேரத்தில் அவரை தேடி அவர் மனைவியின் உயிர் பிரிந்ததை நினைத்து தினமும் அழுதுகொண்டு இருக்கிறார்.  யாராலும் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.  இன்னொரு நண்பர்  மருத்துவ மனையில் ICU விலிருந்து  தன் மனைவியின் உயிர் பிரிந்த உடலை பார்த்து அவர்  வாயிலுள்ள பற்களை எங்கே என்று கேட்டு கதறி அழுதார்.  காரணம் அவர்  உயிர் பிரிந்த பின் வாயினுள் வெண்டிலேடர்  குழாயை  செலுத்த முரட்டுத்தனமாக முயற்சி செய்த மருத்துவர்களால் அவர்  பற்கள் உடைந்திருக்கிறது என்பது தெரியவந்தது.  தீராத மனக்கவலையுடன் நடமாடும் என் நண்பருக்கு நான் எப்படி ஆறுதல் சொல்வதென்று இன்றும் சிந்திக்கிறேன். 
பாசம் நிறைந்தவர்கள் வீட்டில் ஒரு முதியவர் மரணம் நிகழ்வது பெருமை.  மாறாக மருத்துவ மனையில் நிகழ்வது மாபெரும் கொடுமை.

     உயிரோடிருக்கும்போது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு உயிர் பிரிந்தபின் ஓடோடி சென்று விலை உயர்ந்த மாலை அணிவித்து மரியாதையை செய்வது கௌரவம் என நினைக்கிறார்கள் நம்மில் பலர்.

நன்றி : திருமதி.Dr.C.சத்திய மாலா அவர்கள் எழுதிய “Where there is no Doctor” என்ற புத்தகத்திலிருந்து  

இயலாமை பென்சன் பெருபவர்களுக்கு ஓர் நற்செய்தி




அரசு இவர்களின் நலனில் அக்கறை கொள்ளுமா ?

01.01.1996 க்கு முன்னர் தகுதி இன்மை பென்சன் (Invalid Pension) பெறுபவர்களுக்கு விரிவு படுத்தப்பட்ட (Broad Banding ) இயலாமை பென்சன் பயன்களை 01.01.1996 முதல் வழங்கும் அரசானை.

(MOD Letter No.12(16)/2009/D (Pen/Policy) Government of India, Ministry of Defence, Department of Ex-servicemen Welfare, New Delhi. Dated 15.09.2014)

விரிவு படுத்தப்பட்ட இயலாமை பென்சன் பயன்கள் (Benefits of Broad banding of disability) தகுதி இன்மை பென்சன் பெறுபவர்களுக்கு (Invalided out pensioners) 01.07.2009 முதல்தான் வழங்கப்பட்டது.  அதாவது விரிவு படுத்தப்பட்ட இயலாமை பென்சன் பயன்கள் 01.01.1996 க்கு முன்னர் வெளி வந்தவர்களுக்கும் உரிமை கொடுக்க பட்ட போதிலும் அதன் பயன்கள் 01.07.2009 முதல்தான் வழங்கப்பட்டது.

தற்போது இந்த பயன்கள் 0101.1996 முதல் அணைத்து தகுதி இன்மை பென்சனர்களுக்கும் கிடைக்கும்.(All invalided out pensioners)  அதாவது 20% இயலாமை பென்சன் வாங்கிய ஒருவருக்கு விரிவு படுத்தப்பட்ட இயலாமை பென்சன் அடிப்படையில் 50%  வழங்கப்பட்டது.  ஆனால் இந்த பயன்கள் 01.07.2009  முதல்தான் வழங்கப்பட்டது.  தற்போது மேற்குறிய அரசாணைபடி 01.01.1996  முதல் வழங்கப்படும்.

சரியான முறையில் தன் பென்சன் ஆணைகளை சரிபார்த்து உரிய முறையில் விண்ணப்பம் செய்தால் ஒரு கணிசமான தொகை இவர்களுக்கு அரியாராக கிடைக்கும்.

ஒருவேளை சம்பந்தப்பட்ட பென்சனர் இந்த இடைப்பட்ட காலத்தில் இறந்துவிட்டால் இதன் பயன்களை ஆவர் மனைவியோ அல்லது வாரிசுகளோ பெற தகுதியுண்டு.

காலம் கடந்து வந்துள்ள இந்த அரசானையை எத்தனைபேர் தெரிந்து கொண்டு பயன் பெறுவார்கள் என்பது பெரும் கேள்விக்குறி.

மேல குறித்த அரசாணையை www.desw.gov.in என்ற இனைய தளத்தில் பார்க்கலாம்..  இது பற்றி மேலும் உதவி தேவைபடுவோர் கீழ் கண்ட எங்கள் அலுவலகத்தை அணுகவும்.
                        எக்ஸ் வெல் அறகட்டளை,
                        15G மிலிடரி லைன்ஸ்,
                        சமாதானபுரம்,
                        பாளையம்கோட்டை
                        திருநெல்வேலி 627002.
                        Phone:0462 2575380.
போரில் காயமுற்றவர்களுக்காகவும், இயலாமை பென்சன் மேம்பட்டுக்காகவும் பாடுபடும்  அரசு அங்கீகாரம் பெற்ற  ஒரே சங்கம் :-
                        Disabled War Veterans (DIWAVE)
                        Col.H.N.Handa,
                        President,
                        Disabled War Veteran’s (India)
                        B6/DLF city, Phase I
                        Gurgaon 122002.
                        Tele: 0124-4051570. Email: diwave1@gmail.com

                                                தெரிந்து கொள்ளுதல் ஒரு நல்ல ஆயுதம். 

இந்த அரசாணையின் பயன்களை அந்தந்த ரெகார்ட் அலுவலகங்கள் தகுதிள்ளவர்களுக்கு நேரடியாக பெற்றுகொடுக்கவேண்டும்.  இது தான் எமது கோரிக்கை.  செய்வார்களா ? 

click here for for the MOD letter 

Saturday, 9 August 2014

AFA THANJAVUR ANNIVERSARY



INVITATION

AIR FORCE ASSOCIATION
INTEGRATED THANJAVUR DISTRICT CHAPTER
(THANJAVUR, TIRUVARUR & NAGAPATTINAM DISTRICTS)

THIRD ANNIVERSARY

Date: 24th August 2014. Time 10.00 Hrs.
Venue: Vinodh Mahal, Cauvery Nagar, Thanjavur.

Chief Guest:
Group Captain. R.V.SHINDE
Station Commander, Air Force Station, Thanjavur.
Guest of Honour:
Dr.M.Thirumalai
Honourable Vice Chancellor, Tamil University, Thanjavur.

Felicitation By :

Wg.Cdr.M.Jeyakumar                                     Wg.Cdr.S.Arjunan
Commanding Officer, IGLA Missile,                        Chief Admin. Officer,
Air Force Station, Thanjavur.                         Air Force Station, Thanjavur.

Gp.Capt.A.Sambasiva Rao (Retd)                 Wg.Cdr.S.S.A.Razaak,
Secretary, A.F.A. Tamilnadu Branch,                        Deputy C.Ad.O.,
Tambarm, IAF, Chnnai.                                  Air Force Station, Thanjavur.

Shri C.Selvamoorthi, B.Sc.,                            Col.C.T,.Arasu (Retd)
Asst. Director of District                                President, IESL Thanjavur,
E.S.M.Welfare, Thanjavur.                             Officer i/c ECHS Polyclinic, Thanjavur.

Shri M.Balasusbramanian                               Lt.Col.P.Subbaiah (Retd)
Asst. Director of District                                Officer i/c ECHS Polyclinic,
E.S.M.Welfare, Tiruvarur-Nagapattinam.       Kumbakonam.

All are cordially invited with kith and kin.
Organising Committee,
AFA Integrated Thanjavur District Chapter.




PROGRAMME

·         Lighting the Kuthu Vilakku
·         Tamil Thai Vazhthu and Air Force Song
·         Inviting and Honouring the Guest.
·         Welcome Address – Vice President AFA Thanjavur Chapter.
·         Annual Report by Secretary.
·         Annual Financial Statement by Treasurer.
·         Key Note Address by Chief Guest and Guest of Honour.
·         Honouring of Senior Air Veterans (75 years and above)

Felicitation:
·         Felicitation by sister Chapters and Branches.
·         Resolution
·         Vote of Thanks
·         National Anthem.

LUNCH

Bus Route

No.74 Between Old Bus stand and New Bus Stand
Stop: Cauvery Nagar (Vinodh Mahal)

Office Address:
S.M.Q. Complex, Air Force Station,
Thanjavur-5.

Contact No.
Cell: 8903700088, 9994887653, 9994985702






Thursday, 17 July 2014

தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதுதான் நல்ல அரசுக்கு அழகு.



 
இவர்கள் சேவை உங்களுக்கு தொடர்ந்து  வேண்டுமானால்
தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதுதான் நல்ல அரசுக்கு அழகு.

பாரதீய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையின் (ELECTION MANIFESTO) வெவ்வேறு பக்கங்களில் அளித்த வாக்குறுதிகள் இதோ :-

பக்கம் 2:- “நாம் வெறும் வாக்குறுதி அளிக்கும் அரசாக இருக்கக்கூடாது.  செயல் படுத்தும் அரசாக இருக்க வேண்டும்”.

பக்கம் 3:- “நமக்கு தேவை ஒரு உறுதியான அரசியல் கட்சியும், செயல்படுத்தும்  துணிவுகொண்ட நல்ல தலைமையும் “ வேண்டும்.

பக்கம் 5 & 26 :- அதிகாரிகள் சரியான முடிவெடுக்க தேவையான அரசியல் ஆதரவு அளிக்கப்படும்.

பக்கம் 10:- “திறந்த புத்தகம் போன்று அரசு இருந்து நிர்வாக குறைபாடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

பக்கம் 12:- நிர்வாகமும் அதன் உருபினர்களும் அவர்களின் செயல்பாடுகளுக்கும் மக்களுக்கும் பொறுப்பாக வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சகம் எடுக்கும் முடிவுகளில் பாதுகாப்பு    படையினருக்கும்பங்களிக்க வேண்டும்.

ராணுவ தீர்பாயங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் மீது  அரசு எடுக்கும் மேல் முறையீடுகளை குறைக்க வேண்டும். (சுமார்  3000 தீர்ப்புகளை மேல்முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளது ராணுவ அமைச்சகம்.)

ஒன் ரேங்க் ஒன் பென்சனைபற்றி தேவையான விளக்கம் வந்துவிட்டது. அமைச்சர்களின் வாக்குறுதிகளை செயல்படுத்த அதிகாரிகள் தயாராக இல்லை.  ஒன் ரேங்க் ஒன் பென்சனை விரைவில் செயல்படுத்த நியமிக்க பட்டுள்ள தலைவி (CHAIRPERSON) பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேசி முடிவெடுக்க மறுக்கிறார்.  அமைச்சர்களிடமும் நம் பிரதிநிதிகள் நேரில் சந்திக்க முடியவில்லை.  மீண்டும் நமது போராட்டங்களை தொடங்கவேண்டுமா ? ஏன் இந்த நிலை ? 
.

பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த மறுக்கும் அதிகாரிகளை நிர்பந்திக்க அமைச்சர்களுக்கு ஏன் தயக்கம் ?
ஆட்சி செய்வது அமைச்சர்களா அல்லது அதிகாரிகளா ?

நாடு காத்த வீரர்களில் நலன் காப்பது அரசின்  கடமை என்பதை மறக்கலாகாது.

முன்னாள் இராணுவத்தினரின் நலன் காக்க உருவாக்க பட்ட DESW  (DEPARTMENT OF EX-SERVICEMEN WELFARE)  அதற்க்கு எதிராக செயல்படுவது வருந்த தக்கது.

எங்கள் அன்புக்குரிய அதிகார வர்க்கமே “நாடு காத்தவர்களின் நலன் காக்க மறுப்பது உங்கள் பெற்றோர்களை வஞ்சிப்பதற்கு சமம்”

 COURTESY: AERIAL VIEW

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...