Showing posts with label இயலாமை பென்சன். Show all posts
Showing posts with label இயலாமை பென்சன். Show all posts

Friday, 19 September 2014

இயலாமை பென்சன் பெருபவர்களுக்கு ஓர் நற்செய்தி




அரசு இவர்களின் நலனில் அக்கறை கொள்ளுமா ?

01.01.1996 க்கு முன்னர் தகுதி இன்மை பென்சன் (Invalid Pension) பெறுபவர்களுக்கு விரிவு படுத்தப்பட்ட (Broad Banding ) இயலாமை பென்சன் பயன்களை 01.01.1996 முதல் வழங்கும் அரசானை.

(MOD Letter No.12(16)/2009/D (Pen/Policy) Government of India, Ministry of Defence, Department of Ex-servicemen Welfare, New Delhi. Dated 15.09.2014)

விரிவு படுத்தப்பட்ட இயலாமை பென்சன் பயன்கள் (Benefits of Broad banding of disability) தகுதி இன்மை பென்சன் பெறுபவர்களுக்கு (Invalided out pensioners) 01.07.2009 முதல்தான் வழங்கப்பட்டது.  அதாவது விரிவு படுத்தப்பட்ட இயலாமை பென்சன் பயன்கள் 01.01.1996 க்கு முன்னர் வெளி வந்தவர்களுக்கும் உரிமை கொடுக்க பட்ட போதிலும் அதன் பயன்கள் 01.07.2009 முதல்தான் வழங்கப்பட்டது.

தற்போது இந்த பயன்கள் 0101.1996 முதல் அணைத்து தகுதி இன்மை பென்சனர்களுக்கும் கிடைக்கும்.(All invalided out pensioners)  அதாவது 20% இயலாமை பென்சன் வாங்கிய ஒருவருக்கு விரிவு படுத்தப்பட்ட இயலாமை பென்சன் அடிப்படையில் 50%  வழங்கப்பட்டது.  ஆனால் இந்த பயன்கள் 01.07.2009  முதல்தான் வழங்கப்பட்டது.  தற்போது மேற்குறிய அரசாணைபடி 01.01.1996  முதல் வழங்கப்படும்.

சரியான முறையில் தன் பென்சன் ஆணைகளை சரிபார்த்து உரிய முறையில் விண்ணப்பம் செய்தால் ஒரு கணிசமான தொகை இவர்களுக்கு அரியாராக கிடைக்கும்.

ஒருவேளை சம்பந்தப்பட்ட பென்சனர் இந்த இடைப்பட்ட காலத்தில் இறந்துவிட்டால் இதன் பயன்களை ஆவர் மனைவியோ அல்லது வாரிசுகளோ பெற தகுதியுண்டு.

காலம் கடந்து வந்துள்ள இந்த அரசானையை எத்தனைபேர் தெரிந்து கொண்டு பயன் பெறுவார்கள் என்பது பெரும் கேள்விக்குறி.

மேல குறித்த அரசாணையை www.desw.gov.in என்ற இனைய தளத்தில் பார்க்கலாம்..  இது பற்றி மேலும் உதவி தேவைபடுவோர் கீழ் கண்ட எங்கள் அலுவலகத்தை அணுகவும்.
                        எக்ஸ் வெல் அறகட்டளை,
                        15G மிலிடரி லைன்ஸ்,
                        சமாதானபுரம்,
                        பாளையம்கோட்டை
                        திருநெல்வேலி 627002.
                        Phone:0462 2575380.
போரில் காயமுற்றவர்களுக்காகவும், இயலாமை பென்சன் மேம்பட்டுக்காகவும் பாடுபடும்  அரசு அங்கீகாரம் பெற்ற  ஒரே சங்கம் :-
                        Disabled War Veterans (DIWAVE)
                        Col.H.N.Handa,
                        President,
                        Disabled War Veteran’s (India)
                        B6/DLF city, Phase I
                        Gurgaon 122002.
                        Tele: 0124-4051570. Email: diwave1@gmail.com

                                                தெரிந்து கொள்ளுதல் ஒரு நல்ல ஆயுதம். 

இந்த அரசாணையின் பயன்களை அந்தந்த ரெகார்ட் அலுவலகங்கள் தகுதிள்ளவர்களுக்கு நேரடியாக பெற்றுகொடுக்கவேண்டும்.  இது தான் எமது கோரிக்கை.  செய்வார்களா ? 

click here for for the MOD letter 

Tuesday, 19 March 2013

இயலாமை பென்சன்




வரையறுக்கப்பட்ட இயலாமை பென்சன்

(ROUNDING UP OF INVALID PENSION)
(for invalided out personnel only)

எனது நண்பர்கள்  பலர் வரையறுக்கப்பட்ட இயலாமை பென்சன் என்றால் என்ன என்று தெரியாத காரணத்தால் அது சம்மந்தமாக அரசு சில நல்ல மாற்றங்களை கொண்டுவந்தாலும் அதன் பயனை அடைய முடியாமல் இருக்கின்றனர்.  சமீபத்தில் நாங்கள் வெளியிட்ட “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற பென்சன் வழி காட்டி புத்தகத்தில் இது பற்றி தமிழில் தெளிவாக கொடுத்திருந்தும், அதை படித்து பயன்படுத்தி கொள்ள பலர் முன் வரவில்லை.  இது பற்றி ஒருவர்கூட ஒரு சந்தேகமும்  கேட்கவில்லை.
இது ஏன் என்று எங்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.

இயலாமை அடைந்த இராணுவ வீரர்களுக்காக நியாயம் வேண்டி உச்ச நீதி மன்றம் வரை சென்று பெற்றதுதான் இந்த வரையறுக்கப்பட்ட இயலாமை பென்சன்.  இதை பெற்று தந்தவர் ஒரு ஊனமடைந்த லெப்டினென்ட் ஜெனரல் ஒபராய் என்பவர்.
இவர் பல நல்ல பணிகள் செய்து வருகிறார் .

(ROUNDING UP OF INVALID PENSION)
(PCDA(p) CIRCULAR 429 DT.04.03.2010.

ஒரு படைவீரர் தனது பணிக்காலம் முடியும் முன்னதாக இயலாமை காரணமாக மேலும் பணி புரியும் தகுதியிழந்து உடனே பணியிலிருந்து வெளியே அனுப்பப்படும்போது (Only invalid cases) அவர்களுடைய இயலாமை பென்சன் (Disability element) மூன்று முக்கிய சதவீதத்தில் வரையருக்கபடுகிறது.  இந்த சலுகையானது முதலில் 01.01.1996 பின்னர் பணி விலகி வந்தவர்களுக்குத்தான் வழங்கப்பட்டது.  பின்னர் ௦01.01.1996 முன்னர் வெளிவந்தவர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது.  இந்த புதிய அரசாணையின்படி இயலாமை பென்சனானது கீழ்க்கண்ட மூன்று முக்கிய சதவீததிர்க்குள் வரையறுக்கப்பட்டு வழங்கப்படும்.

01.07.2009 முதல் 50 சதவீதத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு குறைந்தது 50 சதவீத இயலாமை பென்சன் வழங்கப்படும்.

50 சதவீதம் முதல் 74 சதவீதம் வரை உள்ளவர்களுக்கு 75 சதவீதம் வழங்கப்படும்.

76 முதல் 99 சதவீதம் வரை உள்ளவர்களுக்கு 100 சதவீத இயலாமை பென்சன் வழங்கப்படும்.

பின் குறிப்பு:
 தற்சமயம் ரூ.7228/- மாத பென்சன் பெரும் ஒரு சாதாரண சிப்பாய் இனி இந்த அரசாணையின் மூலம் 01.07.2009 முதல் ரூ.9039 மாத பென்சன் பெறுவார்.

ஆனால் இந்த கூடுதல் பென்சன் தானாக வராது.
கீழே கொடுத்துள்ள வரியை கிளிக் செய்து அதில் கிடைக்கும் படிவத்தை நிரப்பி நீங்கள் பென்சன் பெரும் வங்கி மூலம் ரெகார்ட்  ஆபிசுக்கு அனுப்பவேண்டும்.  இது முக்கியம்.
இதை படிப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொல்லவும்.




எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...