Thursday 21 July 2016

ஆறாவது ஊதிய கமிசனில் உள்ள குறைபாடுகள்



 
இவர்களுக்கு உரிய அரியர் தொகையை நீங்கள்தான் பெற்று கொடுக்கவேண்டும் 
ஆறாவது ஊதிய கமிசனில் உள்ள குறைபாடுகள்
ஆறாவது ஊதிய கமிசனின் பரிந்துரைகளை சரியாக அமுல் படுத்தாததால் ராணுவ பென்சனர்களுக்கு மிகுந்த பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.   கடந்த பத்து ஆண்டுகளில் பென்சனர்கள் நீதிமன்றங்கள் மூலமாக கிடைத்த  நல்ல தீர்ப்பின் பலனாக ஒரு சில அரியர் தொகை கிடைக்கும் தருவாயில் உள்ளனர்.

பெரும்பாலான ராணுவ பென்சனர்கள் 33 ஆண்டுகள் சேவை செய்ய அனுமதிக்கபடுவதில்லை.இந்த சூழ்நிலையில் அவர்கள் பென்சன் கணக்கீட்டில் மட்டும் இந்த 33 வருட சேவை நிபந்தனையை புகுத்தி அவர்களுடைய பென்சனை விகிதாசார முறையில் (Reduced their pension on Pro-rata basis) குறைத்து வழங்கி வந்தது அரசு.  இது முற்றிலும் நியாய மற்றது என உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடினார் ஒரு சாதாரண முன்னாள் படை வீரர்.  அவர் கண்ட வெற்றிதான் இன்று அனைவரும் எதிர்பார்க்கும் 33 வருட முழு பென்சன். (De linking of 33 years for full pension issue)


ஒரு ராணுவ பென்சனர் நியாயமான முழு பென்சன் பெற இந்த அரசு அனுமதித்திருந்தால், அவர் 65  வயதுக்கு முன்னதாக மரண மடைந்தபோது, அவர் மனைவிக்கும் முழு பென்சன் வழங்கப்பட்டிருக்கும்.  ஆனால் நடந்தது என்ன ? இந்த முழு பென்சன் அவருக்கும் வழ ங்கப்படவில்லை, அவர் மனைவிக்கும் கொடுக்கப்படவில்லை.  ஒரு சில சமயங்களில் பென்சனில் சில மாற்றங்கள் வரும்போது, அதன் பயன் அவர் இறந்த பின் அவர் மனைவிக்கு மறுக்கப்பட்டது.  கேட்பார் யாருமில்லாத காரணத்தால் இந்த விதவைகளுக்கு நியாயமான பென்சன் மறுக்கப்பட்டது. 

சாதாரணமாக  பென்சன் விதிகளின் படி ஒருவர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் சரி பாதி பென்சனாக வழங்கப்படவேண்டும்.  ஆனால் ராணுவ பென்சனர்களுக்கு மட்டும் இந்த விதி மாற்றப்பட்டு பென்சன் குறைக்கப்பட்டது.  இது மாபெரும் அநீதி என நிரூபிக்கப்பட்டு அனைத்து ராணுவ பென்சனர்களுக்கும் ஒரு கணிசமான தொகை ஆரியராக கிடைக்க உள்ளது.  (Arrears of enhanced pension from 1.1.2006) இதற்குரிய அரசாணையை வெளியிடுவதை ஏனோ தாமதபடுத்துகிறது அரசு.  காரணம் புரியவில்லை.


தற்போது 65 வயதுக்கு முன்னதாக மரணமடைந்த ராணுவ பென்சனர்களின் மனைவிக்கு வழங்கப்பட்ட குறைந்த பென்சனை சரி செய்து முழு பென்சன் வழங்க அரசாணைகள் வெளி வந்துள்ளது.  இதன் படி 2002 முதல் 2012 இக்குள் மரணமடைந்த ராணுவ பென்சனர்களின் மனைவிக்கு முழு பென்சனுக்குரிய அரியர் தொகை கிடைக்கும். 

ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்து கோரிக்கை விடுத்தால்தான் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

கூடுதல் குடும்ப பென்சன் அரியர் தொகை உரியவர்களுக்கு எழிதாக கிடைக்க (Arrears of enhanced Family pension for the period from 1.1.2006 to 23.9.2012) எங்கள் இணைய தளத்தில்  www.exweltrust.in  விரைவில் வசதி செய்து கொடுக்கப்படும்.  தினமும் எங்கள் இணைய தளத்தை www.exweltrust.in பார்க்கவும். 

உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும்.

1 comment:

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...