Friday 2 August 2013

கேள்வி பதில் தொடர்ச்சி ....

ECHS கேள்வி பதில் தொடர்ச்சி ...

6. கேள்வி: ஒரு ECHS  உறுப்பினர் அரசு மருத்துவ மனையில் கட்டணம் செலுத்தி சிகிட்சை  பெற்றால், அந்த கட்டணம் திரும்ப கிடைக்குமா ?

பதில்: அரசு மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிட்சை பெரும் உறுப்பினர்களுக்கு செலவு தொகை அனுமதிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும்.

அரசு மருத்துவ மனைகளில் சிகிட்சை பெரும் உறுப்பினர்களுக்கு சிகிட்சை செலவில்  80  சதவீதம் முன் பணமாக பெற வகை செய்யப்பட்டுள்ளது.  ஆனால் மருத்துவ மனையில் இருந்து வெளி வந்த ஒரு மாதத்திற்குள் முன் பணத்தை சரி செய்யவேண்டும்.

(Authy: B/49771/AG/ECHS 23 Aug 2004.)

7. கேள்வி:  ECHS  திட்டத்தில் ஒருவர் எந்த தேதியில் இருந்து உறுப்பினர் என்பதை எவ்வாறு கண்டு கொள்வது?

பதில்:  01.04.2003  க்கு முன்னர் டிஸ் சார்ஜில் வந்தவர்கள் இந்த திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தில் ஸ்டேஷன் HQ/ ரிஜெனல் சென்டர் ஆல் வழங்கப்பட்ட தேதி முதல் உறுப்பினராக கருதப்படுவர்.

01.04.2003 இக்கு பின்னர் வெளி வந்தவர்கள் அவர்கள் பணி விலகி வந்த மறு நாள் முதல் உறுப்பினர்களாக கருதப்படுவர்.

(Authy: B/49701/ PR/AGECHS dt.24/2/2011.)

8. கேள்வி: ECHS உறுப்பினரை சார்ந்த யார் யாருக்கு ECHS  இல் சிகிட்சை பெற உரிமை உண்டு?

சமீபத்தில் CGHS  திட்டத்தில் உள்ளது போல் ECHS இக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகனுக்கு: சுயமாக சம்பாதிக்கும் வரை அல்லது 25  வயது வரை, இதில் எது
                  முன்னதாக வருகிறதோ அது வரை. நிரந்தரமாக ஊனமுற்ற மகன் வயது வரம்பின்றி
                  உறுப்பினராக இருக்கலாம்.
மகளுக்கு: சுயமாக சம்பாதிக்கும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை.  வயது நிபந்தனை            
                 இல்லாமல் இதில் எது முன்னதாக வருகிறதோ அது வரை.
தவிர :      விவாக ரத்து பெற்ற மகள், கைவிடப்பட்ட மகள், கணவனிடமிருந்து பிரிந்து வாழும்
                 மகள், விதவை மகள், திருமணம் ஆகாத மகள், விதவையான சகோதரிகளும் உறுப்பினர்
                ஆகலாம்.  மைனர் சகோதரர்களும் மேஜர் ஆகும் வரை உறுப்பினர் ஆகலாம்.

9. கேள்வி: கணவனும் மனைவியும் ராணுவ பென்சனர்களாக இருக்கும் பட்சத்தில் ECHS இல் சேர என்ன நிபந்தனைகள்?

   1. கணவனும் மனைவியும் ராணுவ பென்சனர்களாக இருக்கும் பட்சத்தில் ஏதேனும் ஒருவர் மட்டும் ECHS  கட்டணம் செலுத்தினால் போதும்.
   2. இருவரும் கட்டணம் செலுத்தி தங்களுடைய பெற்றோர்களை இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
   3. ஒருவர் சிவில் பென்சனராக இருந்தால் CGHS இல் இருந்து விலகி ECHS இல் சேர்ந்து கொள்ளலாம்.

(Authy: B/49701/MOD/AG/ECHS dt. 24.2.2006.)

10.கேள்வி: இயலாமை பென்சன் பெரும் ஒரு ரிக்ருட் இன் மனைவி, பெற்றோர் குழந்தைகளுக்கு ECHS சலுகை உண்டா?

பதில்: கிடையாது. ரிக்ருட்டிர்க்கு மட்டுமே ECHS சலுகை உண்டு.  பயிற்சியில் சேரும் முன்னதாக திருமணம் செய்திருந்தால் அவர் மனைவி குழந்தைகளுக்கு சலுகை உண்டு.  ஆனால் பெற்றோருக்கு ECHS இல் சேர அனுமதி இல்லை.

(Authy: B/49708 Rect/AG/ECHS dt. 22.5.2006.)

11. கேள்வி: ECHS திட்டத்தில்  என்னென்ன கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது?

   1. ECHS  பாலி கிளினிக் இல்லாத மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மெடிக்கல் அலவன்ஸ் வழங்க பரிசீலனையில் உள்ளது.

   2. அவசர நிமித்தம் அங்கீகரிக்க படாத மருத்துவ மனைகளில் சிகிட்சை பெறுபவர்களுக்கு முழு செலவு தொகை வழங்க பரிசீலனையில் உள்ளது.

   3. இரண்டாம் உலக போர் வீரர்களுக்கும் ECHS  திட்டத்தை விரிவு படுத்த பரிசீலனையில் உள்ளது.

பின் குறிப்பு: நம்மில் பெரும்பாலனவர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் /ஆரோக்ய வாழ்வுக்கான காப்பீட்டு திட்டத்தையும் (Medical Insurance and Health Insurance) விரும்புவதாகவும் தற்போதைய ECHS  திட்டம் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்று கூறியுள்ளனர்.   எனினும் ECHS  திட்டத்தை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக ECHS  மேலாண்மை இயக்குனர் உயர் திரு. மேஜர் ஜெனரல் J.ஜார்ஜ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ECHS  மேலாண்மை இயக்குனர் 
மேஜர் ஜெனரல் J. ஜார்ஜ் அவர்கள் 
மிகவும் சிறந்த முறையில் 
சேவை செய்து வருவதாக 
செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. 
அவர்களுக்கு பல்லாயிர கணக்கான 
முன்னாள் இராணுவத்தினர் சார்பில்
 மன மார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் 
தெரிவித்து கொள்கிறோம்.

ஜெய் ஹிந்த் 


No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...