Monday 11 February 2013

மேம்படுத்தப்பட்ட குடும்ப பென்சன்



மேம்படுத்தப்பட்ட இராணுவ குடும்ப பென்சன்
(Improvement in Defence Family Pension)

பொதுவாக இராணுவ குடும்ப பென்சனானது ஒரு படை வீரருடைய பதவி (Rank) மற்றும் குரூப் அடிப்படையில் இதுநாள் வரை நிர்ணயிக்கப்பட்டது.  ஆனால் தற்போது 24.09.2012 முதல் , ஒரு படைவீரர் பணி புரிந்த காலத்தையும் கணக்கிலெடுத்து நிர்ணயிக்கபடுகிறது. (Qualifying Service) எனவே ஒரு குடும்ப பென்சனருடைய சரியான பென்ஷனை தெரிந்து கொள்ள அந்த படை வீரருடைய கீழ் கண்ட முக்கிய தகவல்கள் தேவை.

     (1) படை வீரருடைய பதவி (Rank)
            (2) படை வீரருடைய பணிக்காலம். (Qualifying Service)
            (3)அவர் வகித்த பணிப்பிரிவு. (Group)

இந்த தகவல்கள் 01.04.1985 க்கு முன்னர் ஒய்வு பெற்று வந்தவர்களின் பென்சன் ஆணைகளிலோ அல்லது இந்த கால கட்டத்தில் இறந்துபோன படை வீரர்களின் குடும்ப பென்சன் ஆணைகளிலோ தெளிவாக இருக்காது.  ஆனால் 01.04.1985 க்கு பின்னர் வெளி வந்தவர்களுக்கு இந்த தகவல்கள் அவர்களுடைய பென்சன் ஆணைகளில் இருக்கும்.

எனவே 01.04.2012 க்கு முன்னர் வெளி வந்தவர்களுக்கு இப்போதைய அரசாணைகளின்படி சரியான குடும்ப பென்சன் வழங்குவதில் வங்கிகளுக்கு சிரமம் உள்ளது.   ஆகவே இந்த குடும்ப பென்சனர்கள் மேலே குறித்த இந்த மூன்று தகவல்களையும் வங்கியில் காண்பித்து அதன் நகல்களை அந்தந்த வங்கியின் மத்திய பென்சன் அலுவலகங்களுக்கு உடனே அனுப்ப வேண்டும். (CPPC) இது முக்கியம்.  புதிய குடும்ப பென்சன் ஆணைகளின்படி ஒரே பதவி, ஒரே குருப்பாக இருந்தாலும் பணிக்காலம் அதிகமாகும் போது பென்சனும் மாறுபடும் என்பதை தெரிந்து கொள்ளவும்.

15 ஆண்டு சர்விஸ் முடித்த “X” குரூப் சார்ஜெண்ட் மனைவிக்கு பென்சன் ரூ.4467.  ஆனால் 20 ஆண்டு சர்விஸ் முடித்த “X”  குரூப் சார்ஜெண்ட் மனைவிக்கு ரூ.4656.

பணிக்காலம் அதிகரிக்கும்போது பென்சனும் அதிகருக்கும்.  எனவே மேல குறித்த இந்த முன்று தகவல்களையும் ஒவ்வொரு குடும்ப பென்சனரும் தெரிந்துகொண்டால்தான் சரியான பென்சன் பெற முடியும்.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...