Sunday 3 February 2013

குடும்ப பென்சனும் குறை தீர்க்க போராடும் சங்கங்களும்



பென்சனுக்காக டெல்லியில் விதவைகளின் போராட்டம்

IESM சங்கத்தின் மாபெரும் போராட்டம்
 குடும்ப பென்சனும் 
குறை தீர்க்க போராடும் சங்கங்களும்.

சாதாரண குடும்ப பென்சன் தொகையானது, ஒரு படை வீரர் பணி விலகும் முன் வாங்கிய சம்பளத்தில் முப்பது சதவீதம் இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. இதன் படி பல ஆண்டுகளுக்கு முன் ஒய்வு பெற்று வந்தவர்களின் உத்தேச சம்பளத்தை (Notional Pay) ஆறாவது ஊதிய கமிஷனில் சரியானபடி நிர்ணயிக்காத காரணத்தால் இவர்களுக்கு சரியான குடும்ப பென்சன் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

இந்த அநீதியை IESM என்ற சங்கம் ஒன்று தான் சரியான முறையில் அரசுக்கு எடுத்து சொல்லி, இவர்களுக்கு நீதி கிடைக்க செய்தது.  இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த பதவியிலுள்ள சிப்பாய், நாயக் மாற்றும் ஹவில்தார் இவர்களின் விதவைகள் தான்.

உதாரணத்துக்கு 01.01.2006 முதல் ரூ.4467 என்ற நியாயமான பென்சன் பெறவேண்டிய ஒரு விமானப்படை சார்ஜெண்டின் மனைவி வெறும் ரூ.3500 மட்டுமே பெற்று வந்தனர். இது ஒரு மாபெரும் அநீதி என்று அரசுக்கு நன்கு தெரியும்.  அது தவிர சிப்பாய், நாயக், ஹவில்தார் ஆகிய இந்த மூன்று பதவியில் இருந்தவர்களின் விதவைகளுக்கும் ஒட்டுமொத்தமாக வெறும் ரூ.3500 தான் கடந்த ஆறு ஆண்டுகளாக கொடுக்கப்பட்டது. IESM சங்கத்தின் தொடர்ந்த போராட்டத்தால் இதை சரிசெய்ய முன் வந்தது அரசு.  அதுவும் 01.01.2006 முதல் வழங்காமல் 24.09.2012  முதல் மட்டுமே வழங்கமுடியும் என்று கூறியுள்ளது.  சுமார் ஒரு லட்சம் வரை பென்சன் நிலுவை தொகையாக கொடுக்க கடமைப்பட்ட அரசு ஒன்றும் கொடுக்கமால் ஏமாற்றிவிட்டது.

நாம் இவ்வாறு ஏமாற்றபடுவதர்க்கு முக்கிய காராணம் நம் மக்களின் அறியாமை தான்.  தவிர அகில இந்திய அளவில் 20 லட்சம் பென்சனர்களை கொண்ட இந்த நாட்டில், நமது குறைபாடுகளை எடுத்து சொல்ல வலுவான ஒரு சங்கம் இல்லாதது ஒரு மாபெரும் குறை.  வெகு நாட்களுக்கு பிறகு இப்போது ஒருசில ஒய்வு பெற்ற உயர் ராணுவ அதிகாரிகள் (Lt.Gen.Raj Kadyan, Maj.Gen. Satbir Singh)  களத்தில் இறங்கி போராட்டுவதால் ஒரு சில பலன்கள் கிடைக்கிறது.

எனவே இந்த அரசாணைகளால் பயன் பெற்றோர் உடனே IESM  என்ற சங்கத்தில் உறுப்பினராக சேருங்கள்.  தமிழ்நாட்டில் இந்த சங்கத்தின் பொறுப்பாளராக நமது மதிப்பிகுரிய Col.T.N. Raman  அவர்கள் சிறந்த சேவை செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் நூற்றுகணக்கான சங்கங்கள் இருந்தும் ஒரு சங்கம் கூட நமது ஒன்  ரேங்க் ஒன் பென்சனுக்காக ஒரு நாள் கூட எந்த போராட்டமும் நடத்தவில்லை. இவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவர Col.T.N. Raman அவர்கள் எடுத்து வரும் முயற்ச்சிக்கு எமது பாராட்டுக்கள். விரைவில் தமிழ் நாட்டில் IESM சங்கத்தின் மாபெரும் மாநாடு நடத்த வேண்டும் என்பது எமது அவா.

நமது மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த எமது எக்ஸ் வெல் அறக்கட்டளை பல புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.  இந்த சங்கங்கள் எமது புத்தகங்களை வாங்கி தமது உறுப்பினர்களை படிக்க சொல்வதின் மூலம் நல்ல ஒற்றுமையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும். 

சங்கங்களுக்கு சலுகை விலையில் புத்தகங்களை கொடுக்க எமது அறக்கட்டளை தயாராக இருக்கிறது. புத்தகங்களை வாங்கவும், IESM சங்கத்தில் சேரவும் எங்களை தொடர்பு கொள்ளவும்.  உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும். 




No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...