Wednesday, 6 July 2016

முப்படை வீரர்களின் குழந்தைகளுக்கும், அவர்தம் விதவைகளுக்கும் கல்வி உதவித்தொகை





முப்படை வீரர்களின் குழந்தைகளுக்கும், அவர்தம் விதவைகளுக்கும் கல்வி உதவித்தொகை
(SCHOLARSHIPS FROM KENDRIYA SAINIK BOARD)

சிப்பாய், நாயக் மற்றும் ஹவில்தார் அதற்க்கு சமமான மற்ற படை வீரர் குழந்தைகளுக்கும்  அவர்தம் விதவைகளுக்கும் முதல் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை நிதி உதவி வழங்கப்படும்.


2011 முதல் இந்த நிதி உதவி இரண்டு குழந்தைகளுக்கு மாதம்  ரூ.1000 வழங்கப்படுகிறது.  விதவைகளுக்கு PG படிப்புக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.

தகுதி:
1.   விண்ணப்பதாரர் முன்னாள்படை வீரராகவோ அல்லது அவர்தம் விதவையாகவோ அல்லது அவர்தம் அநாதை குழந்தையாகவோ இருக்கவேண்டும்.

2.    ஹவில்தார் பதவிக்கு குறைந்த வர்களாக இருக்க வேண்டும்.

3.    குழந்தை முந்தய வகுப்பில் தேர்ச்சி பெற்றுக்க வேண்டும்.

4.    வேறு எங்கிருந்தும் நிதி உதவி பெற கூடாது.

5.    மாவட்ட சைனிக் போர்டால் சிபாரிசு செய்யப்படவேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

1.    முழு டிஸ் சார்ஜ் புக் நகல்.

2.    அடையாள அட்டை.

3.    முந்தய வகுப்பில் எடுத்த மதிப்பெண் சான்று.

4.    குழந்தையின் பெயர் டிஸ் சார்ஜ் புக் இல் இருக்க வேண்டும் அல்லது பார்ட் II ஆர்டர் இருக்க வேண்டும்.

5.    வேறு யாரிடமும் நிதிஉதவி பெறவில்லை என்ற சான்று.

6.    வங்கி கணக்கு விபரம். (பாரத ஸ்டேட் வங்கி அல்லது பஞ்சாப் நேசனல் வங்கியில் மட்டும் கணக்கு இருக்க வேண்டும்)

7.    ஆதார் அட்டை நகல்.



ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மே 31 க்குள்ளும் 10 முதல் 12 வரை ஜூலை 31 க்குள்ளும், கல்லூரி படிப்புக்கு ஆகஸ்ட் 31 க்குள்ளும் விண்ணப்பங்களை  இணைய தளம் மூலம் சமர்பித்து அதன் நகலை மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகத்தில் மறு நாள் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகவேண்டும். இந்த நிதி உதவிக்கு ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.  ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1000 வீதம் இரண்டு குழந்தை இருந்தால் ரூ.24000 நடப்பு ஆண்டு முடியும் முன் தங்கள் வங்கி கணக்கில் வந்து விடும்.



அனைத்து பணிகளும் இணையம் மூலம் நடைபெறுவதால் அனைவருக்கும் பாரபட்சமின்றி நிதி உதவி கண்டிப்பாக கிடைக்கும்.  விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் நீட்டிக்க பட்டுள்ளதாக செய்தி உள்ளது. முழு விபரமும் கீழ் கண்ட இணைய தளத்தில் பெற்று கொள்ளலாம்.  உதவி இயக்குனர் அலுவலகத்தையும் அணுகவும். நெல்லை மாவட்ட உதவி இயக்குனர் திரு ஸ்ரீநிவாசன் அவர்கள் இந்த பணியை மிகவும் சிறந்த முறையில் செய்வதை அறிந்து அவருக்கு எமது பாராட்டுக்கள்.


மேலும் உதவிக்கு எக்ஸ் வெல் அறக்கட்டளையை அணுகலாம்.





Sunday, 3 July 2016

அரியர் தொகைக்கு பிடித்தம் செய்த வருமான வரி




அரியர் தொகைக்கு பிடித்தம் செய்த வருமான வரி

சமீபத்தில் பல ராணுவ பென்சனர்களுக்கு குறிப்பாக ஜெசிவோ, ஆனரரி ஆபிசர்களுக்கு வருமான வரி சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.  உண்மையில் இவர்கள் இவ்வளவு வரி கட்டவேண்டியது இல்லை. அரியர் தொகை ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்ற அளவில் கிடைத்ததாலும், அறியாமையின் காரணமாக பான் கார்டை வங்கியில் முன் கூட்டியே பதியாத காரணத்தாலும் இவர்களுக்கு கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியவும்.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கியில் வரி பிடித்தம் செய்ததற்கான படிவம் 16 (Form 16) பெற்று, அதனுடன் ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2016 வரையிலான பென்சன் ஸ்டேட் மென்ட் பெற்று அதனுடன் பான் கார்டையும் இணைத்து ஒரு ஆடிட்டரிடம் கொடுத்து கூடுதலாக பிடித்தம் செய்த வரியை திரும்ப பெறலாம்.  அரியர் தொகைக்குரிய தனிப்பட்ட கணக்கையும் ஆடிட்டரிடம் கொடுக்க வேண்டும்.  (Yearly Break up of arrears).

வருகிற ஜூலை 31 ம் முன்னதாக உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும்.  உங்களுக்கு சுமார் ரூ.25000 வரை (Hon.Capt) பிடித்தம் செய்த வரி ஆகஸ்ட் மாதம் திருப்பி கிடைக்கும்.

இது பெற்றிய உதவி தேவைப்படுவோர் எங்கள் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம். தொலை பேசி 0462-2575380.

ஒவ்வொருவருக்கும், ஒரு கைபேசியும், பான் கார்டும், ஆதார் கார்டும் அவசியம் தேவை.

85 வயதான ஒரு ஆனரரி கேப்டனுக்கு ரூ.60 ஆயிரம் வரி பிடித்தம் செய்திருந்தார்கள். அவர் எங்களிடம் வந்ததின் காரணமாக அவருக்கு ரூ.30000 திருப்பி கிடைக்க வேண்டிய உதவி செய்திருக்கிறோம்.



Tuesday, 19 April 2016

எக்ஸ் வெல் அறக்கட்டளையின் புதிய இணைய தளம்.





எக்ஸ் வெல் அறக்கட்டளையின்
புதிய இணைய தளம்.

உங்கள் O.R.O.P. அரியர் தொகையை தெரிந்துகொள்ள
எங்கள் புதிய இணைய தளத்தை பார்க்கவும்.


இன்னும் பல புதிய தகவல்கள் இந்த இணைய 
தளத்தில் வர உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் 
தெரிவித்துக்கொள்கிறோம்

Friday, 8 April 2016

இப்போது உங்கள் கைபெசியிலேயே OROP அரியர் தொகையையும் புதிய பென்சனையும் தெரிந்து கொள்ளலாம்.



 
நல்ல கைபேசி நல்ல நண்பன்
இப்போது உங்கள் கைபெசியிலேயே OROP அரியர் தொகையையும் புதிய பென்சனையும் தெரிந்து கொள்ளலாம்.

பிறருக்கு உதவும் மனம் உள்ளவர்கள் வெறும் ரூ.200 மட்டும்
செலுத்தி பல நூற்றுக்கணக்கான பென்சனர்களுக்கு
உதவி செய்யலாம்.
உங்கள் ஆண்டிரைடு (Android Phone)  கைபேசியில்
http://exweltrust.in என்ற இணைய தளம் சென்று
உங்கள் ரேங்க், சர்விஸ், குரூப், பிறந்த தேதி மற்றும்
உங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்து உங்கள்
ATM கார்டு மூலம் ரூ.200 செலுத்தினால்
15 நாட்களுக்கு OROP மற்றும் பல அரியர்
தொகையை தெரிந்து கொள்ளலாம்.
தேவையானால் அச்சிட்டும் எடுத்துகொள்ளலாம்.
மற்றவர்களுக்கும் உதவலாம்.
வேறு யாருமே செய்யாத இந்த புதிய சேவையை
உங்கள் எக்ஸ் வெல் அறக்கட்டளை
முதல் முறையாக அறிமுகப் படுத்துகிறது.
எங்களால் இந்த சேவையை இலவசமாக கொடுக்க
முடியவில்லையே என்று வருந்துகிறோம்.

புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
முன்னாள் ராணுவத்தினர் நல சங்கங்கள் இந்த சேவையை
பயன்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு
எக்ஸ் வெல் அறக்கட்டளை,
15 மிலிடரி லைன், சமாதானபுரம்,
திருநெல்வேலி 627002.
தொலைபேசி:0462-2575380.
உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும்
வரவேற்கிறோம்.

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...