Saturday, 6 February 2016

ஒன் ரேங்க் ஒன் பென்சன் பட்டியல்கள் கிடைக்கும்




தெரிந்து கொள்ளுங்கள்” இரண்டாம் பதிப்பு  புத்தகத்துடன்
ஒன் ரேங்க் ஒன் பென்சன் பட்டியல்கள்
(JCOs, ORs & Family pension tables) இணைப்பு புத்தகமாக கிடைக்கிறது.

விலை (கொரியர் செலவு உட்பட)
ரூ.150 மட்டுமே. 
உடனே மணி ஆர்டர் அனுப்பி பெற்றுகொள்ளவும்.

ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டம் - கிடைக்கும் பயன்கள்


ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டம் மூலம் ஒரு சாதாரண சிப்பாய், நாயக், ஹவில்தார் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு உடனே என்ன கிடைக்கும் என்று பார்ப்போம்.

நமது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றபடாவிட்டா லும், ஓரளவு பயனுள்ளதாக  அமைந்துள்ளது என்று சொல்லலாம் என்பது என் அபிப்ராயம்.

1.   உடனடியாக அனைத்து குடும்ப பென்சனர்களுக்கும் மார்ச் 31 க்குள்
ரூ.21,317  அரியர் கிடைக்கும்.
2.   இதுவரை ரூ7665  குறைந்த குடும்ப பென்சன் வாங்கி வந்தவர்களுக்கு இனிமேல் மார்ச் 2016 முதல் ரூ.8758 கிடைக்கும்.  அதாவது மாத பென்சனில் ரூ.1093 கூடுதலாக கிடைக்கும்.
3.   ராணுவ பணிநிமித்தம் உயிரிழந்த சிப்பாய்  குடும்பத்தினருக்கு குறைந்த பென்சன் ரூ.7000 (15 ஆண்டு சர்விஸ் ) ஆக இருந்தது. தற்போது அது ரூ.7998 ஆக உயர்த்த பட்டுள்ளது.
4.   65/67 வயதுக்கு முன்னதாக இறந்தவர் குடும்பத்தினருக்கு தற்போது கூடுதல் பென்சன் வழங்குவதில் தெளிவு இல்லை. (Enhanced pension)
தற்போது இந்த OROP ஆணையில் இறந்து போனவர் வாங்கிய அதே பென்சன் அவர் மனைவிக்கும் அவர் வயது 65/67 வரை வழங்கப்படும் என தெளிவாக பட்டியல்கள் கொடுக்க பட்டுள்ளது.  இதன் படி பலர் பயன் பெருவார்கள்.
5.   பதவி அடிப்படையில் வழங்கப்பட்ட இயலாமை பென்சன் இப்போது சர்விஸ் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது.  15 ஆண்டு சர்விஸ் முடித்த ஒரு நாயக்குக்கு 100 சதவீத இயலாமைக்கு ரூ.3510 மட்டுமே வழங்கப்பட்டது.  தற்போது ரூ.5025 வழங்கப்படும்.  15 ஆண்டு
         ச ர்விஸ் முடித்த 20 % இயலாமை உடைய குரூப் நாயக்கிற்கு  
        ரூ.17,586 தற்போது பென்சனாக கிடைக்கும்.

உங்கள் கையிலுள்ள பட்டியலை நன்கு படியுங்கள்.  சந்தேகங்களை தெளிவு படுத்த எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.  நாம் சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளோம்.  பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் இதன் பயனை அனுபவிக்காலே போய் சேர்ந்து விட்டார்கள் என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.  நமது கோரிக்கைக்கு ஓரளவு நியாயம் கிடைத்திருக்கிறது என்பது உண்மை.  அரசு முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பது எமது விருப்பம்.

எழுத்தில் வந்தவைகள் அனைத்தையும் காலம் தாழ்த்தாமல் செயல் படுத்த வேண்டும்.  வங்கிகள், காலம் தாழ்த்தாமல், ராணுவ பென்சன் பற்றி நன்கு  தெரிந்தவர்களை ஒப்பந்த அடிப்படையிலாவது பணியில் அமர்த்தி அனைவருக்கும் இந்த அரசாணையின் படி பயன்கள் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதுதான் எமது தாழ்மையான வேண்டுகோள்.

காலம் கடந்து வந்தாலும் அனைவரது கஷ்டங்களையும் ஓரளவு குறைக்கும் ஆணையிது என்பது உண்மை.

நாடு காத்த வீரர்களின் நலன் காத்த அரசுக்கு எமது நன்றி.


Tuesday, 2 February 2016

சர்குலர் 547 இன் படி யார் யாருக்கு அரியர் கிடைக்கும் ?

ஒரு விதவைக்கு உதவும் எக்ஸ் வெல் அறக்கட்டளை
நிர்வாகி திரு S.கந்தையா அவர்கள்.
சர்குலர் 547 இன் படி யார் யாருக்கு அரியர் கிடைக்கும் ?

பெரும்பாலான ராணுவ பென்சனர்களுக்கு இந்த அரியர் ஏன் கொடுக்கப்படுகிறது என்பதே தெரியாது.  அதிலும் குடும்ப பென்சனர்கள் தனக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாதது போல் இருக்கிறார்கள்.

இந்த அரியர் தொகையானது உயிரோடிருக்கும் OR மற்றும் JCO களுக்கு 01.01.2006 முதல் 30.06.2009 வரைதான் கிடைக்கும்.  30.06.2009 க்கு முன்னதாக இறந்திருந்தால், அதாவது ஒருவர் 01.01.2009 ல் இறந்திருந்தால் அவருக்குரிய அரியர் தொகை 01.01.2006 முதல் 01.01.2009 வரை LTA  ஆக கணக்கிட்டு பென்சன் பெரும் அவர் மனைவிக்கு வழங்கப்படவேண்டும்.  பின்னர் அவர் மனைவிக்கு 02.01.2009 முதல் 23.09.2012 வரை குடும்ப பென்சனுக்குரிய அரியர் தொகையை கணக்கிட்டு வழங்கப்படவேண்டும்.  ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கவேண்டும் என்ற விபரத்தை எங்கள் வலைப்பூவில் கொடுத்துள்ளோம். நன்கு படிக்கவும்.

ஒவ்வொருவரும் தனக்கு கிடைக்க வேண்டிய அரியர் தொகையை தானே கணக்கிட்டு தெளிவாக வங்கிகளுக்கு விண்ணப்பம் கொடுத்தால் மட்டுமே இது கிடைக்கும்.  வங்கிகளே தானாக கணக்கிட்டு வழங்க சாத்தியம் இல்லை என்பது இந்த கட்டுரையாளரின் கருத்து.

சாதாரணமாக குடும்ப பென்சன் பெரும் ஒரு விதவைக்கு அவர் கணவர் பென்சனுக்குரிய அரியர் தொகையை (LTA)  நாமினேசன் அல்லது வாரிசு சான்று இல்லாமல் வழங்கலாம்.  எனவே CDA சர்குலர் 547 ஐயும், அதனுடன் இணைந்த மற்ற சர்குலர்களையும் நன்கு படித்து, தெரிந்தவர்கள் மூலம் சரியாக கணக்கிட்டு பெற வேண்டியது உங்கள் பொறுப்பு. தேவைபட்டால் எக்ஸ் வெல் அறக்கட்டளையை அணுகலாம்.  “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற எங்கள் புத்தகத்தை வாங்கி படித்து பயன்பெறலாம்.

“உங்கள் வழிகாட்டி” என்ற எங்கள் தமிழ் வலைப்பூவை தினமும் படியுங்கள். (Please visit our blog http://www.ungalvalikatti.blogspot.com regularly)  உங்களுக்காகவே எளிய, தமிழில் வெளியிடப்படுகிறது.  உங்கள் பிள்ளைகள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனில் பிளாக்கர் (Blogger) என்ற app ஐ டவுன்லோட் செய்து எங்கள் வலைப்பூவை பார்க்கலாம்.
ஒரு SMS மூலம் உங்களுக்கு சரியான பென்சன் கொடுக்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள, “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற எங்கள் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.

நாங்கள் வெளியிட்டிருக்கும் “நமது மருத்துவ திட்டம், மற்றும் பென்சன் பற்றிய” ஒரு படக்காட்சியை (A slide show on ECHS and Defence Pension) தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பாலி கிளிநிக்குகளுக்கும் அனுப்பியுள்ளோம்.  அதைக்கேட்டு, அங்குள்ள TV யில் ஒளிபரப்ப சொல்லி பாருங்கள்.  அனைத்து வகையிலும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.  எங்கள் பணி எப்போதும் உங்களுக்காக என்பதை மறந்துவிடாதீர்கள்.


Monday, 1 February 2016

விதவைகளுக்கு கிடைக்கவேண்டிய அரியர் தொகை.

எக்ஸ் வேல் அறக்கட்டளையின் உதவி 
CDA சர்குலர் 547ன் படி 01.01.2006க்கு முன்னதாக இறந்துபோன தரைப்படை (Army) பென்சனர்களின் விதவைகளுக்கு கிடைக்கவேண்டிய அரியர் தொகை.

ஹவில்தார் குரூப் X                           Rs.70,068
நாயப் சுபேதார் குரூப் X                    Rs.44772
நாயாப் சுபேதார் குரூப் Y                  Rs.36,066
நாயாப் சுபேதார் குரூப் Z                  Rs.11,815
சுபேதார் குரூப் X                                Rs.1,01,359
சுபேதார் குரூப் Y                               Rs.92,653
சுபேதார் குரூப் Z                               Rs.67780
சுபேதார் மேஜர் குரூப் X                    Rs.1,30,274
சுபேதார் மேஜர் குரூப் Y                    Rs.1,01,359
சுபேதார் மேஜர் குரூப் Z                    Rs.92,653
ஆனரரி லெப்டினென்ட்                     Rs.1,22,190
ஆனரரி கேப்டன்                              Rs.1,42,710

இந்த அரியர் தொகையானது சாதாரண சிப்பாய், நாயக், எக்ஸ் குரூப் ஹவில்தார் அல்லாதவர்  விதவைகளுக்கு கிடையாது.
இந்த குடும்ப பென்சனர்களின் சரியான தகவல், (அதாவது ரேங்க், சர்விஸ், குரூப்) வங்கிகளிடம் இல்லாத காரணத்தால் வங்கிகளால் இன்னும் அரியர் கொடுக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது.  (இது ஏற்றுகொள்ள கூடியது அல்ல) .  இதை சரி செய்ய அரசோ அல்லது வங்கிகளோ, பெரிய பெரிய சங்கங்களோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை.
ஆபிசர்கள் அனைவரும் தாமதமின்றி அவரவர் அரியர் தொகையை வாங்கிவிட்டார்கள்.
ஆனால் இந்த ஏழை, வயது முதிர்ந்த விதவைகளுக்கு உதவுவார் யாருமில்லை.

அனைவரும் ஒன்று சேர்ந்தால் நாம் வங்கிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து உடனே பெறலாம். பாதிக்கப்பட்டவர்கள் இந்த பதிவை படிக்க அவ்வளவாக வாய்ப்பில்லை.  அவர்களுடைய பிள்ளைகள், மற்றவர்கள், சங்கங்கள் முன்வந்தால்தான் ஏதாவது செய்ய முடியும்.

ஒன் ரேங்க் ஒன் பென்சன் வந்தாலும், இது கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டும்.  ஆனால் OROP வந்தால் இதை மறந்து விடுவார்கள் என்று வங்கியும், அரசும் நினைக்கிறது.  இது பற்றி மேலும் உதவிக்கு எக்ஸ் வேல் அறக்கட்டளையை அணுகவும்.





Sunday, 31 January 2016

"தெரிந்து கொள்ளுங்கள்" ராணுவ பென்சன் வழிகாட்டி புத்தகம்



“தெரிந்து கொள்ளுங்கள்”
(இரண்டாம் பதிப்பு)
ராணுவ பென்சனர்களுக்கு ஓர் வழிகாட்டி

பல முக்கிய தகவல்களை கொண்ட இந்த புத்தகத்தை
ஒவ்வொரு ராணுவ பென்சனரும் அவசியம் படிக்க வேண்டும்.

CDA cir.547 ன் படி கிடைக்க வேண்டிய அரியர் தொகை
கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப பென்சனர்களுக்கு கிடைக்க வேண்டிய அரியர் தொகை
கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவன் பிரமாண், டிஜிட்டல் லாக்கர் பற்றி விளக்கம் உள்ளது.
SMS மூலம் சரியான பென்சன் பெரும் முறை கொடுக்க பட்டுள்ளது.

இந்த புத்தகம் வாங்குபவர்களுக்கு OROP பட்டியல் வெளிவந்தவுடன்
அனுப்பி வைக்கப்படும்.
கிகைகுமிடம்
C.Muthukrishnan
Exwel Trust,
15G Military Lines, Samathanapuram,
Tirunelveli 627002.
Phone:04622575380.

விலை: ரூ.130 (கொரியர் சார்ஜெஸ் உட்பட)

வருமான வரியும் பென்சனர்களும்


வருமான வரியும் பென்சனர்களும்

பென்சனர்கள் வருமான வரி பற்றி ஓரளவு தெரிந்து கொள்வது நல்லது.  உங்களால் முடிந்தால் வரி கட்டுவதை திட்டமிடுங்கள் அல்லது முழுமையாக வரியை கட்டிவிட்டு வயதான காலத்தில் நிம்மதியாக இருங்கள்.

கட்ட வேண்டிய வரியை திட்டமிடுவதற்கு மூன்று முக்கிய பணிகளை நீங்கள் செய்யவேண்டும்.

1.    ஒரு நிதியாண்டில், அதாவது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை உங்களுக்கு பென்சன் உட்பட வேறு என்னனென்ன வருமானம் வருகிறது என்பதை கணக்கிடவும்.
2.    இந்த மொத்த தொகையை வைத்துக்கொண்டு, கீழே கொடுத்துள்ள அட்டவணைப்படி நீங்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பதை கணக்கிடுங்கள்.
3.    நீங்கள் எவ்வளவு வரி கட்டவேண்டும் என்பதை கணக்கிட்ட பின், கீழ் கண்ட இரண்டில் ஒன்றை முடிவு செய்யவேண்டும்.
(a)  வரியை முழுமையாக கட்டிவிடுவது ...அல்லது
(b)  திட்டமிட்டு வரியை குறைக்க ஏதாவது செய்யவேண்டும்.
வயது 60 க்கு குறைவாக உள்ளவர்களுக்கு (ஏப்ரல் 1 1955 பின்னர் பிறந்தவர்களுக்கு) மார்ச் 31 முடிய உரிய நிதியாண்டுக்கு வருமான வரி விகிதம் (Assessment year 2015-16)

Net income Range
Income Tax Rates
Surcharge
Plus education Cess
Up to Rs.2,50,000
Nil
Nil
Nil
Rs.2,50,000 to Rs.5,00,000
10% of income above
Rs.2,50,000
Nil
3% of income tax
Rs.5,00,000 to Rs.10,00,000
Rs.25,000+20% of the
Income above Rs.5,00,000
Nil
3% of income tax
Rs.10,00,000 to
1,00,00,000
Rs.1,25,000+30% if
Income above
Rs.10,00,000
Nil
3% of income tax
Above Rs.1,00,00,000
Rs.28,25,000+30% of
Income above 1,00,00,000
10% of income tax
3% of income tax and surcharge.


மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேல் ) அந்த நிதியாண்டுக்குள் இருக்க வேண்டும். 80 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Net income Range
Income Tax Rates
Surcharge
Plus education Cess
Up to Rs.3,00,000
Nil
Nil
Nil
Rs.3,00,000  to Rs.5,00,000
10% of income above
Rs.3,00,000
Nil
3% of income tax
Rs.5,00,000 to Rs.10,00,000
Rs.20,000+20% of the
Income above Rs.5,00,000
Nil
3% of income tax
Rs.10,00,000 to
1,00,00,000
Rs.1,20,000+30% if
Income above
Rs.10,00,000
Nil
3% of income tax
Above Rs.1,00,00,000
Rs.28,20,000+30% of
Income above 1,00,00,000
10% of income tax
3% of income tax and surcharge.
80 வயதுக்கு மேல். (ஏப்ரல் 1 1935 க்கு முன் பிறந்தவர்கள் )

Net income Range
Income Tax Rates
Surcharge
Plus education Cess
up to   Rs.5,00,000
Nil
Nil
Nil
Rs.5,00,001 to Rs.10,00,000
20% of the
Income above Rs.5,00,000
Nil
3% of income tax
Rs.10,00,001 to
1,00,00,000
Rs.1,00,000+30% if
Income above
Rs.10,00,000
Nil
3% of income tax
Above Rs.1,00,00,000
Rs.28,00,000+30% of
Income above 1,00,00,000
10% of income tax
3% of income tax and surcharge.
வயதுக்கு தகுந்த வருமான உச்ச வரம்பை விட அதிகமாக வருமானம் பெறுபவர்கள் கண்டிப்பாக ரிடர்ன் (Return) தாக்கல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ரிடர்ன் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31.
தணிக்கை செய்யவேண்டிய வருமான கணக்கு உள்ளவர்கள் செப்டம்பர் 30 வரை ரிடர்ன் தாக்கல் செய்யலாம்.
குறிப்பிட்ட காலத்திற்குப்பின் ரிடர்ன் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.
TDS (Tax Deducted at Source) என்றால் என்ன ?
வருமானம் உருவாகும் இடத்தில் வரி பிடித்தம் செய்வதற்கு பெயர் தான் TDS.
ஒருவர் ரூ.ஒரு லட்சத்தை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து, அவர் பான் கார்டு (PAN Card ) வங்கிக்கு கொடுத்திருந்து,  ரூ.11,000 வட்டி பெறுவதாக இருந்தால் அதில் வருமான வரி சட்டப்படி அதில் 10% TDS  பிடித்தம் செய்து மீதி ரூ.9,900 மட்டுமே வட்டியாக வழங்கப்படும். ஒருவேளை அவர் பான் கார்டு கொடுக்காமல் இருந்தால் வட்டியில் 20% பிடித்தம் செய்யப்பட்டு ரூ.8,800 மட்டுமே வட்டியாக கிடைக்கும்.

அவருடைய ஆண்டு வருமானம், வயதிற்கேற்ற உச்ச வரம்பிற்குள் (இந்த வட்டியையும் சேர்த்து ) இருந்து பான் கார்டும், படிவம் 15G/15H ம், ஏப்ரல் மாதத்திற்குள் வங்கிக்கு கொடுத்திருந்தால் வட்டியில் எந்த பிடித்தமும் செய்யப்பட மாட்டாது.  60 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் படிவம் 15G இம், 60 வயதை கடந்தவர்கள் படிவம் 15H இம் கொடுக்க வேண்டும்.

உங்கள் வைப்பு நிதியில் வங்கிகள் TDS பிடித்திருந்தால் நீங்கள் படிவம் 16 ஐ கண்டிப்பாக வங்கியிடமிருந்து பெறவேண்டும்.  இந்த படிவம் 16 ஐ வைத்து நீங்கள் ரிடர்ன் தாக்கல் செய்து, பின்னர் ஒருவேளை கூடுதலாக வரி பிடித்தம் செய்திருந்தால் அதை நீங்கள் திரும்ப பெறலாம். வரி பிடித்தத்தை குறைக்க நீங்கள் ஏதேனும் மூலதனம் செய்திருந்தால் அதன் முழு விபரத்தையும் முன்னதாக வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
வயதான காலத்தில் வரி விலக்கிற்காக கண்ட கண்ட சேமிப்புகளையும் வைத்துக்கொண்டு சிரமப்படாமல் உரிய வரியை ஒவ்வொரு ஆண்டும் செலுத்திவிட்டு நிம்மதியாக இருப்பதே நல்லது என்பது இதை எழுதுபவரது கருத்து.  அல்லது நல்ல நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கி உரிய வரி விலக்கும் பெறலாம். (நன்கொடை நமக்கு மன நிம்மதி தரும்) ஏனென்றால் பெரும்பாலான குடும்பங்களில் வயதானவர்களுக்கு யாரும் உதவி செய்ய முன் வருவதில்லை. 

வங்கிகளும் TDS பிடித்தம் செய்துவிட்டு, படிவம் 16 ஐ குறித்த நேரத்தில் கொடுப்பதில்லை.  இதனால் ஒரு வயதான வாடிக்கையாளர் பல முறை வங்கிக்கு அலையை வேண்டியதுள்ளது. (இணைய தள சேவை இளைஞர்களுக்கே என்று ஆன பின் வங்கிகளில் முதியவர்களை யாரும் மதிப்பதில்லை).  சேவை மனப்பான்மை உடைய இனைஞர்களை தேர்வு செய்து வங்கிகளில் பணியில் அமர்த்தாமல், பொறியியல் பட்டதாரிகளையும், கணிப்பொறி வல்லுனர்களையும் வங்கியில் சாதாரண பணியில் அமர்த்தியுள்ளதால் சேவையின் தரம் குறைந்து வருகிறது.
நல்ல அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்ற பல முதியவர்கள், தன்பிள்ளைகள் உடன் இல்லாததால், தனியாக இருந்துகொண்டு சிரமப்படுகின்றனர்.  உதவிக்கு நம்பிக்கையான ஆள் கிடைக்காததால் பயத்துடன் வாழ்கின்றனர்.

அதே நேரத்தில் ஒரு கூலி வேலை பார்க்கும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக உணவருந்தி ஒரே அறையில் துயில்கின்றனர்.  பணமும் பாசமும் ஒரு இடத்தில் இருப்பதில்லை.  

பணமே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் பலர் அது தவறு என்பதை காலம் கடந்து உணர்ந்துள்ளனர். ரூ.ஒரு கோடி விலையில் மனையும், ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மாளிகையும் கட்டி ஓகோ என்று வாழ்ந்தவர்கள் ஒரு நாள் இரவு வெள்ளத்தில் அத்தனையையும் இழந்து வீதிக்கு வந்துவிட்ட நிலையை நாம் கண் கூடாக கண்டோம்.  சென்னை வெள்ளம் மக்களுக்கு புகட்டிய பாடம் மறக்க முடியாதது.  ஆம் வெள்ளத்தில் சிக்கியவர்கள் துயர் துடைக்க வந்து குவிந்த நிவாரண பொருட்களே சாட்சி.  ஒரு மாபெரும் வெள்ளத்தால் மனித நேயம் கற்பிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.



Tuesday, 26 January 2016

டிஜிட்டல் லாக்கர் மூலமாக ஆவணங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.


டிஜிட்டல் லாக்கர் மூலமாக ஆவணங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
(Sharing of documents through Digital Locker)

இந்திய அரசு கடைந்த ஜூலை 2015 ல் அறிமுகப்படுத்திய டிஜிட்டல் லாக்கர் வசதியை பலர் பயன் படுத்த தொடங்கி விட்டனர்.  முதல் கட்டமாக அவர்களுடைய ஆவணங்களை ஸ்கேன் செய்து பத்திரமாக வைத்துள்ளனர் அவ்வளவு தான்.  இந்த லாக்கருடைய மிக முக்கியமான உபயோகமான “ஆவணங்களை பகிர்ந்து கொள்ளுதல்” (sharing of documents)  வசதியை யாரும் எந்த அரசு அலுவலககங்களுக்கும் செய்வதாக தெரியவில்லை.  ஆகவே இந்த டிஜிட்டல் லாக்கரின் முக்கிய உபயோகமான ஆவண பகிர்தல் வசதியை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.  அதற்க்கு அரசு உடனே தேவையான சுற்றறிக்கைகளையும் அனைத்து அனுவலகங்களுக்கும் அனுப்ப வேண்டும்.

ஒரு அரசு அலுவலகமோ, ஒரு தனியார் நிறுவனமோ, அல்லது வங்கிகளோ உங்களுடைய அடையாள அட்டையையோ அல்லது வேறு முக்கிய ஆவணங்களை கேட்டால் அவற்றை நாம் டிஜிட்டல் லாக்கர் மூலம் அனுப்பி அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.  இந்த வசதி இதில் உள்ளது. இருந்தும் யாரும் பயன் படுத்துவதாக தெரிய வில்லை.

வங்கிகள் இன்னும் பான் கார்டு ஜெராக்ஸ் கேட்கிறது.  ஏன் அவருடைய டிஜிட்டல் லாக்கரில் இருந்து வங்கி இ-மெயில் ID க்கு அனுப்ப சொல்லி ஏன் கேட்கக்கூடாது ?  இதற்க்கு தனிப்பட்ட அனுமதி தேவை இருப்பதாக தெரியவில்லை.  இதே போல்  KYC ஆவணங்களையும் கத்தை கத்தையாக கேட்கிறது.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், மற்றும் அனைத்து அனுவலகங்களும் ஒவ்வொருவரிடம் இருந்தும் நேரில் ஜெராக்ஸ் காப்பி கேட்பதற்கு பதிலாக அவரவர் டிஜிட்டல் லாக்கரில் இருந்து ஈமெயில் முறையில் பெற்றுக்கொள்ளும் முறையை செயல்படுத்த வேண்டும்.  ஆவணங்களை பத்திரமாக ஸ்கேன் செய்து வைத்துகொள்ள மட்டும் அல்ல இந்த லாக்கர், பல இடங்களுக்கும் ஆவணங்களை தேவையின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளவும் நடைமுறை படுத்த வேண்டும் என்பதே இந்த கட்டுரையாளரின் நோக்கம்.  மேலும் சுய சான்றிதழ் வசதியும் (Self Attestation) தரப்பட்டுள்ளது.  மத்திய அரசு மிகவும் பெருந்தன்மையுடன் அட்டஸ்டேசன் முறையையும், ஆணையர் முன் உறுதி மொழி (Abolition of Attestation and Affidavits from Notary public) முறையையும் ஒழிக்க அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.  ஆனால் தமிழக அரசு இன்னும் இதை முழுமையாக நடைமுறைபடுத்த வில்லை.


மக்களாகிய நாம்தான்  விழிப்புடன் இருந்து அரசை செயல்படுத்த செய்யவேண்டும்.   நமது ECHS கிளினிக்கில் இந்த முறையை பின்பற்ற, கடிதம் எழுதப்பட்டுள்ளது.  வங்கிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 


எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...