தமிழ் பேசும் முன்னாள், இந்நாள்படை வீரர்களின் நல்வாழ்வுக்கான ஓர் வலை பதிவு. நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைக்கத நாடு இனி யாரும் அதற்காக உயிர் விடும் தகுதியை இழந்துவிடும். "தெரிந்து கொள்ளுங்கள்" என்ற ராணுவ பென்சன் வழிகாட்டி புத்தகம் வந்துவிட்டது. அவசியம் படிக்கவும்.
Friday, 15 January 2016
Sunday, 10 January 2016
அறிவிப்பு
அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்ட சட்ட பணிகள்
ஆணைக்குழு
(District Legal Services
Authority)
மாவட்ட நீதி மன்ற வளாகம்,
திருநெல்வேலி 627002.
--oOo--
முன்னாள்
ரானுவதினர்களுக்கான, ராணுவ தீர்ப்பாயம் பற்றிய
(Armed Forces
Tribunal) சட்ட விழிப்புணர்வு முகாம்,
வருகின்ற
19-01-2016 செவ்வாய் கிழமை காலை
11.00 மணி அளவில்,
திருவேல்வேலி மாவட்ட நீதிமன்ற
வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் வைத்து நடைபெறும்.
முகாமில்
ராணுவ தீர்ப்பாயம் பற்றியும், வழக்கு தொடரும் வழி முறைகள் பற்றியும்
விளக்கப்படும்.
எனவே
திருநெல்வேலி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு
கேட்டுகொள்ளப் படுகிறார்கள்.
இவண்
திருநெல்வேலி
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு
மாவட்ட
நீதிமன்றம், திருநெல்வேலி 627002.
--oOo--
மேலும் விபரங்களுக்கு
தொடர்புகொள்ளவேண்டிய முகவரி,
எக்ஸ் வெல் அறக்கட்டளை,
15 G மிலிடரி லைன்ஸ்,
சமாதானபுரம்,
திருநெல்வேலி 627002.
போன்:0462-2575380
Friday, 8 January 2016
எக்ஸ் வெல் அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டு விழா
| அறக்கட்டளை நிர்வாகிகள் |
எக்ஸ் வெல்
அறக்கட்டளையின்
பத்தாவது ஆண்டு விழா
பாளையம்கோட்டை. சாந்திநகர், மணி மஹாலில் கடந்த
03.01.2016 ஞாயிறு காலை 10.00 மணிக்கு
தொடங்கியது.
முதற்கண் வெள்ளத்தில் மாண்ட மக்களுக்கு
அஞ்சலி செலுத்தப்பட்டது.
அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு
R.செல்லப்பா அவர்கள் தலைமை தாங்க
சிறப்பு விருந்தினர்களாக
திரு.Wg.Cdr.P.J.விக்டர்,அவர்கள்
திரு.Sgt.S.சண்முகம் அவர்கள், பேரளம்.
திரு.Cpl.மோகன ரங்கன் அவர்கள், சென்னை.
திரு.Sgt.டேவிட், அவர்கள். கலந்துகொண்டு
சிறப்புரை ஆற்றினார்கள் . எண்பது வயதான திருமதி.பார்வதி அம்மாள்,
Hon.Capt.செல்லதுரை , Nk.துரைபாண்டியன், மற்றும் சௌரிய சக்கரா விருது பெற்ற
திரு.c.ராமமூர்த்தி அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர்களும், நன்கொடையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். கடந்த
பத்தாண்டுகாளாக அறக்கட்டளையின் சேவையைபற்றியும், உடனிருந்து சிறப்பாக சேவை புரிந்த
திரு.S.கந்தையா, திரு.நடராஜன், திரு.C.முத்துக்கிருஷ்ணன் அவர்களையும் பாராட்டினார்.
திருநெல்வேலி ECHS மருத்துவ மனையில்
அனைவருக்கும் இன்முகத்துடன் சிறந்த சேவை செய்துவரும்
திரு.Hav.V.சங்கரன், Nursing Asst./ECG Tech.,
| திரு.ஈஸ்வரன், Radiographer. |
| திரு.அரசகுமார் |
| திரு.சங்கரன் |
விழாவில் ஏழை, எழிய பொது மக்களுக்கு வேஷ்டி,
சட்டை, சேலை, சுடிதார் வழங்கப்பட்டது.
மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறநாழி
செல்வி.M.அபர்ணாவுக்கு நவீன செயற்கை காலணிகளை
வள்ளல் திரு.C.ராமமுர்த்தி அவர்கள் வழங்கினார்கள். மறு நாள் Rs.5000 க்கான காசோலையும்
வழங்கினார்கள்.
| செல்வி அபர்ணாவுக்கு காலணி வழங்கும் காட்சி. |
செல்வி.அபர்ணா மேடைக்கு அழைத்து வரும்போது
அனைவரும் கருணையுடன் பார்த்தனர் . பின்னர்
நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.Sgt.C.முத்து கிருஷ்ணன் அவர்கள் மிகவும் உருக்கமாக
அபர்ணாவின் ஏழ்மை நிலையை விவரிக்கும் போது, உணர்ச்சிவசப்பட்டு பலர் எழுந்துவந்து
கண்ணீருடன் நிதியுதவி செய்தது
மறக்கமுடியாத மனித நேய காட்சி.
அபர்ணாவுக்கு கிடைத்த நிதியுதவியை கண்ட அவள்
பெற்றோர் ஆனந்தகண்ணீர் விட்டு நன்றி சொல்ல கூட முடியாமல் திணறினர்.
நம் மக்களின் மனிதய நேயத்தை கண்டு எக்ஸ் அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது.
| திரு.வேலு நிதி உதவி |
| திரு.சுவாமிநாதன் நிதி உதவி |
| டாக்டர்.திருமதி.முத்து மீனாள் நிதி உதவி |
| திரு.சத்திய சீலன் நிதிஉதவி |
| கேப்டன் ஆறுமுகம் நிதி உதவி. |
| சுபேதார்.லாரன்ஸ் நிதி உதவி. |
நல்ல மதிப்பெண்கள் பெற்ற ராணுவத்தினர்
குழந்தைகளுக்கும், மறைந்த ஒரு BSF வீரர் மகள்கள் இருவருக்கும் கல்வி உதவித்தொகை
வழங்கப்பட்டது.
| கல்வி உதவி |
“தெரிந்து கொள்ளுங்கள்” என்ற
பென்சன் வழிகாட்டி புத்தகத்தின்
இரண்டாம் பதிப்பை Wg.Cdr.P.J.விக்டர்
அவர்கள் வெளியிட, பேரளம், திரு.Sgt.S.சண்முகம் அவர்கள்
பெற்றுகொண்டார்கள்.
![]() |
| ஒவ்வொரு பென்சனரும் படிக்கவேண்டிய புத்தகம் |
பின்னர் திருமதி.லட்சுமி அவர்கள்
அனைவருக்கும் அரை மணி நேரம் தியான பயிற்சி
அளித்து, தியானத்தின் அவசியம் பற்றி
விளக்கினார்.
“நங்கூரம்” என்ற முதியோர் மனமகிழ் மறு வாழ்வு
மையம் பற்றிய ஒரு குறும் படம் திரையிடப்பட்டது.
| திரு.ராஜசேகர், நங்கூரம் |
செந்தூர் கவிஞர் திரு இல.நாதன் அவர்கள் ராணுவ
வீரர்கள் தியாகம் பற்றியும், நம் அறக்கட்டளையின் சேவை பற்றியும் ஒரு அருமையான
கவிதையை அரங்கேற்றினார்.
| திரு.இல.நாதன், கவிஞர் |
| திரு.நாரும்புனாதன், முக நூல் புகழ் எழுத்தாளர் |
| அரங்கத்தில் மக்கள் கூட்டம் |
முக நூல் புகழ், எழுத்தாளர் மற்றும் தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் திரு.நாறும்பூ நாதன் அவர்கள் நமது சேவையை
பாராட்டி பேசினார்கள்.
முதியோர் சேவை பற்றியும், இறுதிகட்ட மருத்துவ
சிகிச்சை (Terminal Care) பற்றியும், மறுவாழ்வு மையங்கள் பற்றியும் Sgt.டேவிட்
அவர்கள் மிகவும் உருக்கமான உரையாற்றினார்கள்.
தமிழகம் முழுவதுமுள்ள ராணுவ பென்சனர்களுக்கு தான்
ஆற்றி வரும் சேவை பற்றி Sgt.S.சண்முகம் விளக்கினார்கள்.
Cpl.மோகன ரங்கன் (TAFVA)அவர்களும், NEXCC
திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு.ரவி அவர்களும், கோவையிலிருந்து திரு.சத்தியசீலன்
அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
நண்பகல் 1.30 க்கு சுவையான மதிய உணவு
வழங்கப்பட்டது.
மதிய உணவுக்குப்பின் திரு.Sgt.C.முத்து
கிருஷ்ணன் அவர்கள் உருவாக்கிய, பல இனிமையான
பாடல்களுடன் கூடிய பென்சன் மற்றும் நமது
மருத்துவ திட்டம் பற்றிய அருமையான
படக்காட்சியும் தெளிவான விளக்கமும் கொடுக்கப்பட்டது. பென்சன் கேள்விகளுக்கு திரு S.சண்முகம்
அவர்களும் திரு S.கந்தையா அவர்களும் பதில் அளித்தார்கள்.
ஜீவன் பிரமாண், மற்றும் டிஜிட்டல் லாக்கர் பற்றி
Sgt.C.முத்து கிருஷ்ணன் விளக்கம் அளித்தார்கள்.
ஒரு சிலருக்கு டிஜிட்டல் லாக்கர் கணக்கும் திறந்து கொடுக்கப்பட்டது.
நிகழ்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார் திரு
முத்து கிருஷ்ணன் அவர்கள்.
திரு.நடராஜன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே
நிறைவடைந்தது.
இந்த ஆண்டுவிழா மிகவும் பயனுள்ளதாக இருந்தது
என்று அனைவரும் பாராட்டிய செய்தியை அனைத்து உள்ளூர் பத்திரிக்கைகளும் வெளியிட்டு
பெருமை சேர்த்தது மறக்கமுடியாதது.
இந்த விழாவின் வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி.
Tuesday, 5 January 2016
"தெரிந்து கொள்ளுங்கள்" ராணுவ பென்சன் வழிகாட்டி இரண்டாம் பதிப்பு
“தெரிந்து கொள்ளுங்கள்”
என்ற ராணுவ பென்சன் வழிகாட்டி
புத்தகம் இதோ
வந்துவிட்டது !
இதில் பல முக்கிய செய்திகள் உள்ளது.
பல வகையான பென்சனை அடையாளம் காணும் முறை,
ஒரு SMS மூலம் உங்கள் பென்சனை தெரிந்து கொள்ளும்
முறை,
உயில் பற்றிய விளக்கம்,
பிரதமரின்
ஸ்காலர்ஷிப் திட்டம்,
பென்சன் பற்றிய பல நல்ல கேள்வி பதில்,
OROP பற்றி அரசின் அறிவிப்பு,
ராணுவ தீர்ப்பாயம்,
ஜீவன் பிரமாண் பற்றிய விளக்கம்,
சர்குலர் 547 இன் படி குடும்ப பென்சனர் அரியர்
பட்டியல்,
ECHS கேள்வி பதில்,
டிஜிட்டல் லாக்கர்,
இன்னும் பல தகவல்கள் உள்ளது...
ஒவ்வொரு பென்சனரும் அவசியம் படிக்கவேண்டும்,
புத்தகத்தின் விலை Rs.100/-
ஐந்து புத்தகம் வரை கொரியர் செலவு தனி Rs.30 மட்டுமே.
நண்பர்களாக சேர்ந்து ஐந்து புத்தகங்கள் வாங்கினால் Rs.530
மட்டுமே.
நல
சங்கங்கள் மொத்தமாக 50 க்கு மேல் வாங்கினால் 10% தள்ளுபடி உண்டு.
புத்தகம்
கிடைக்குமிடம்
எக்ஸ் வெல் அறக்கட்டளை,
15 G மிலிடரி லைன்ஸ், சமாதானபுரம்,
பாளையம்கோட்டை, திருநெல்வேலி 627002.
போன்: 0462-2575380, 9894152959, 9894125019,
9786449036, 9442801632.
டிஜிட்டல் லாக்கர் என்றால் என்ன ?
டிஜிட்டல் லாக்கர் என்றால் என்ன ?
DIGITAL LOCKER
(மின்னணு ஆவண பாதுகாப்பு
பெட்டகம்)
இந்திய அரசு கடந்த ஜூலை
2015 இல் இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியை மக்களுக்கு அறிமுகம் செய்தது.
இதன்
மூலம் உங்கள் சொந்த முக்கிய ஆவணங்களை (அதாவது உங்கள் ஆதார் அட்டை, ரேசன் கார்டு,
பான் கார்டு, பல முக்கிய அடையாள அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், பள்ளி
சான்றிதழ்கள், உங்கள் சொத்து பத்திரங்கள், உயில், இன்னும் பல) ஸ்கேன் செய்து
பாதுகாப்பாக இணைய தளத்தில் எந்த கட்டணமும் இல்லாமல் வைத்துக்கொள்ளலாம். வரும் காலத்தில் அரசு வழங்கக்கூடிய
அனைத்து சான்றிதழ்களும் ஆதார் எண் அடிப்படையில் உங்கள் லாக்கருக்கு அனுப்பி
வைக்கப்படும். சுய சான்றளிக்கும் (self attestation) வசதி மூலம் நீங்கள் தேவையான
இடங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
இதன் மூலம் கட்டுகட்டாக காகித ஆவணங்களின் உபயோகமும்
தவிர்க்கப்படும். செலவும் மிச்சமாகும். உங்கள் ஆவரங்களை எந்த நேரத்திலும், எந்த
இடத்திலிருந்தும் பகிர்ந்து (ஷேரிங்) கொள்ளலாம். உங்கள் ஆதார்
எண்ணுடன்இணைக்கப்பட்ட இந்த மின்னணு வைப்பு வசதி (e-store) அரசால் இலவசாமாக வழங்கப்படுகிறது.
இந்த சேவையை நீங்கள் பெற உங்கள் ஆதார் எண்ணும் அதனுடன் இணைக்கப்பட்ட
செல் போன் எண்ணும் தேவை.
ஆகவே ஒரு லாக்கர் கணக்கு ஆரம்பிக்க உடனே எங்கள் அலுவலகம்
வரவும். வரும்போது மறக்காமல் ஆதார் அட்டை,
செல் போன், தவிர நீங்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பும் ஒரிஜினல் ஆவணங்களையும்
கொண்டு வரவும். ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும் தனித்தனி கணக்கு திறக்க வேண்டும். ஆதார் அட்டை வைத்துள்ள மாணவர்கள், வேலையில்ல
பட்டதாரிகள், பென்சனர்கள் அனைவரும் இந்த லாக்கர் கணக்கு வைத்துகொள்வது நல்லது.
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் முன்கூட்டியே இந்த லாக்கர் கணக்கு
வைத்திருந்தால், இன்று தாங்கள் வெள்ளத்தில்
விட்ட ரேசன் கார்டு, மற்ற சன்றிதள்களுக்கு இந்த அரசிடம் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம்
இல்லை. எனவே விழிப்புடன் இருந்து உடனே ஒரு
லாக்கர் கணக்கு திறக்கவும்.
இந்த வசதி மார்ச்
31 வரை மட்டுமே எங்கள் மூலம் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு :
எக்ஸ் வெல் அறக்கட்டளை,
15 G மிலிடரி
லைன்ஸ், சமாதானபுரம்,
பாளையம்கோட்டை,
627002.
போன்:0462-2575380,
9894152959.
Subscribe to:
Posts (Atom)





