Thursday, 20 June 2013

முன்னாள் ராணுவத்தினருக்கு இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு .



இந்தியன் ரயில்வேயில் முன்னாள் ராணுவத்தினருக்கு வேலை வாய்ப்பு

Employment Notice No.RRC01/2013 dt. 08/06/2013

முன்னாள் ராணுவத்தினருக்கான விசேஷ அறிவிப்பு.  20% இட ஒதுக்கீடு.

மொத்த காலி இடங்கள் : 813 (தெற்கு ரயில்வே)
தகுதி: 15 ஆண்டுகள் ராணுவ சேவை.  ஆர்மி கிளாஸ் I சர்டிபிகேட் பாஸ்.
வயது: ராணுவ சேவை + 3 ஆண்டுகள்.
தேர்வுகள் எதுவும் கிடையாது.  ராணுவ சர்வீஸ் அடிப்படையில் தேர்வு செய்யபடுவர்.  மருத்துவ தகுதி அவசியம் வேண்டும்.
சம்பளம்: 5200 – 20200 .  கிரடு பே ரூ.1800/’ இதர படிகள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08/07/2013.  மாலை 5  மணி.


இது ஒரு நல்ல வாய்ப்பு.  உடனே விண்ணப்பிக்கவும்.
 

Monday, 17 June 2013

மேம்படுத்தப்பட்ட ECHS கார்டு



மேம்படுத்தப்பட்ட  ECHS கார்டு
(Upgraded ECHS Card)

முன்னாள் இராணுவத்தினர் பங்களிப்பு மருத்துவ திட்ட சிகிச்சை உறுப்பினர்களுக்கு அகில இந்திய அளவில் விருவுபடுத்த படுவதால், (PAN INDIA) ECHS மெம்பர்கள் அனைவரும் புதிய மேம்படுத்தப்பட்ட கார்டு வாங்க வேண்டும். இந்த புதிய கார்டு பெற தேவையானவை :-

1. ஒவ்வொரு பயனாளிக்கும் இரண்டு பாஸ் போர்ட் சைஸ் போட்டோ வேண்டும்.  (பின் புறத்தில் சிவப்பு நிறம் வேண்டும் ) (WITH RED BACKGROUND) .

2.ஒவ்வொரு கார்டுக்கும் Rs.135/- வங்கி வரைவோலை, அந்தந்த வட்டார அலுவலத்தின் பெயரில் எடுக்க வேண்டும். (In the name of the Regional Centre).

3. பழைய கார்டின் போட்டோ நகல் இணைக்க வேண்டும்.

4. ECHS கார்டை மேம்படுத்த தேவையான விண்ணப்ப படிவம் பாலி கிளினிக்கில் கிடைக்கும்.  தேவையானால் இங்கே கிளிக் செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.

5. இதுவரை இந்த  திட்டத்தில் சேராதவர்கள், புதியதாக சேர விரும்பினால், உரிய விண்ணப்பத்துடன் கட்டணத்தையும் முறையாக செலுத்தி ரசீது பெற்ற பின், கார்டு  வரும் வரை அந்த ரசீதின் அடிப்படையில் சிகிட்சை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்க படுகிறது.


Saturday, 1 June 2013

இரண்டாவது குடும்ப பென்சன்





இரண்டாவது குடும்ப பென்சன்.

இரண்டாவது குடும்ப பென்சன் வழங்க மத்திய அரசு ஆணைகள் வெளியிட்டு சுமார்  நான்கு  மாதங்கள் ஆகியும் ஒருவர் கூட அதை பெற்றதாக தெரியவில்லை.

ஒரு குடும்ப தலைவர் இறந்தபின் அந்த விதவையின் கோரிக்கைகளை கேட்க யாரும் தயாராக இல்லை.  இறந்து போன ஒரு முன்னாள் படை வீரருடன் பணிபுணிந்த உற்ற நண்பர் கூட இவர்களுக்கு உதவ முன் வருவது இல்லை.  இவர்கள் பணிபுணிந்த அலுவலகங்களில் இந்த விதவைகளின் விண்ணப்பங்களை யாரும் பரிவுடன் பரிசீலிப்பதில்லை.

இரண்டு பென்சன் வாங்கி வந்த என் நண்பர், தன் மரணத்திற்குப்பின் இரண்டு குடும்ப பென்சனும் தன் மனைவிக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி எடுத்து அரசு ஆணைகளை தன் மனைவி கையில் கொடுத்து இறந்துவிட்டார்.  அவர் இறந்த நாள் 31.01.2012 இன் படி அவர் மனைவிக்கு இரண்டாவது குடும்ப பென்சன் வழங்க எந்த தடையும் இல்லை.  இருந்தும் கடந்த நான்கு மாதங்களாக இரண்டாவது பென்சன் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  ஏன் என்று தெரியவில்லை.  என்ன செய்வதென்றும் தெரியவில்லை.  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று இந்த வயதான விதவைகள் தினமும் ஏங்கிக்கொண்டிர்க்கின்றனர். 

மழை நின்ற பின்னும் தூறல் விடவில்லை என்பது போல் அரசாணைகள் வந்த பின்னரும் அனுபவிக்க முடியாமல் தடுக்கிறது அலுவலக நடைமுறைகள்.  இதற்க்கு என்னதான் தீர்வு ?

முன்னாள் இராணுவத்தினர் நல சங்கங்கள் இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதே எமது வேண்டுகோள். 

Wednesday, 24 April 2013

நஷ்ட ஈடு பெரும் வழி.


கற்றுகொள்ள வயது தடை இல்லை.

இந்த பெண் செல் போனில் பேச யார் கற்றுகொடுத்தது?
தாமதமாக வழங்கப்படும் பென்சனுக்கு நஷ்ட ஈடு 
எவ்வாறு பெறுவது ?

நஷ்ட ஈடு எவ்வாறு பெறுவது என்ற முறையை கீழ்க்கண்ட வலை பூவில் 
தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.  அதனை பயன்படுத்தி 
அனைவரும் பெற வேண்டும் என்பது எமது 
விருப்பம்.

முயற்சி செய்தால் பலன் உண்டு.

குறைந்த தொகையாக இருந்தாலும், அதை பெற்ற பின் 
ஒரு மன நிறைவு ஏற்படும்.
நீங்கள் அனைவரும் நஷ்ட ஈடு கேட்டால், வரும் 
காலங்களில் வங்கிகள் தாமதமின்றி 
உங்கள் பென்ஷனை வழங்கும் என்பது உறுதி.

செய்வீர்களா ?
உங்கள் எண்ணங்களை எங்களுக்கு 
மின் அஞ்சலாக அனுப்புங்கள்.
உங்கள் பிள்ளைகளிடம் கேட்டு இணைய தளத்தை 
நன்கு படியுங்கள்.
வரும் காலத்தில் கணிப்பொறி பயன்பாடு தெரியாவிட்டால்
நாம் கண்ணிருந்தும் குருடர்கள் போல் ஆகிவிடுவோம் 
என்பதை நினைவில் கொள்ளவும்.

Sunday, 21 April 2013

நஷ்ட ஈடு கேட்க உரிமையுண்டு.




தாமதமாக வழங்கப்படும் பென்சன் நிலுவைதொகைக்கு
நஷ்ட ஈடு கேட்க உங்களுக்கு உரிமை உண்டு.

நியாயமானபடி பார்த்தல் ஒவ்வொரு இராணுவ பென்சனருக்கும், குடும்ப பென்சனருக்கும் பிப்ரவரி 2013 இல் பென்சன் நிலுவைத்தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் வழங்கப்படவில்லை.  எனவே வங்கி விதிகளின்படி (ரிசர்வ் வங்கி கடிதங்களின் படி ) பென்சனர் கேட்காமலேயே தாமதத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இன்றைய தேதியில்
ஒரு ஹவில்டார் மனைவிக்கு  ரூ.90 நஷ்ட ஈடு கிடைக்கும்.
ஒரு நாயப் சுபெடார் மனைவிக்கு  ரூ.84 கிடைக்கும்.
ஒரு சுபெடார் மனைவிக்கு  ரூ.426 கிடைக்கும்.
ஒரு சுபேதார் மேஜர் மனைவிக்கு  ரூ.615 கிடைக்கும்.
ஹோனரரி கேப்டன் மனைவிக்கு  ரூ.334 கிடைக்கும்.
ஹோனரரி லெப்டினன்ட் மனைவிக்கு  ரூ.286  கிடைக்கும்.
ஒரு Y  குரூப் சிப்பாய்க்கு ரூ. 121 கிடைக்கும்.
ஒரு Y  குரூப் நாயக்குக்கு ரூ. 128 கிடைக்கும்.
ஒரு  Y  குரூப் ஹவில்டருக்கு ரூ.186  கிடைக்கும்.
ஒரு ஹோனரரி லெப்டினன்ட் க்கு ரூ. 476  கிடைக்கும்.
ஒரு ஹோனரரி கேப்டனுக்கு ரூ.556  கிடைக்கும்.

எனவே ஒவ்வொரு பென்சனரும் இந்த நஷ்ட ஈடு வேண்டி உடனே வங்கிக்கு ஒரு விண்ணப்பம் கொடுக்கவும். மாதிரி விண்ணப்பத்திற்கு கீழே  கிளிக் செய்யவும்.  உங்கள் வங்கி ஒரு மாதத்திற்குள் இந்த வட்டியை கொடுக்காவிட்டால், அதே விண்ணப்பத்தை “ Banking Ombudsman”
Reserve Bank of India, Chennai 1.  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இந்த நஷ்ட ஈடு பெரிய தொகையாக இல்லாவிட்டாலும் இதை நாம் கேட்பதின் மூலம் வங்கிகள் தாமதமின்றி பென்சன் நிலுவைத்தொகையை  வழங்க ஏதுவாக இருக்கும்.  காரணம் தகுந்த புகாருக்கு வங்கிகள் பதில் சொல்லியாக வேண்டும்.  மேலும் ஒரே நேரத்தில் அனைவரும் இது மாதிரி கோரிக்கை வைத்தால் நம் வேலைகள் உடனே நடக்கும்.

இதை படிப்பவர்கள் உண்மையாக களம் இறங்கி மற்றவர்களையும் செய்ய சொன்னால், கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

காண்டீனில் கோட்டாவை நிறுத்தினால் நிச்சயம் களம் இறங்குவீர்கள்.  ஆனால் இதற்க்கு செய்வீர்களா என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

நமது முன்னாள் இராணுவத்தினர் நலன் காக்க எவ்வளவோ நுணுக்கமான செய்திகளை இந்த இணைய தளத்தில் வெளியிடுகிறோம்.  ஆனால் நம்மில் பெரும்பாலோர் அதை கண்டு கொள்வதே இல்லை.

சுமார்  1.5  லட்சம் முன்னாள் இராணுவத்தினரை கொண்ட தமிழ் நாட்டில் ஒரு ஆயிரம் பேர் கூட இந்த வலைப்பதிவை படிப்பதில்லை.  அப்படி படித்தாலும் எந்த ஒரு பதிலும் கொடுப்பதில்லை.

இது தொடர்வது நம் இன வளர்ச்சிக்கு நல்லதில்லை.

நீங்கள் முயற்சிசெய்தால் இந்த வலைப்ப்பூ
செய்திகளை உங்கள் மொபைல் போனிலேயே
பார்க்கலாம். “facebook” லும் பார்க்கலாம்.
“twitter”  லும் பார்க்கலாம்.
இதெல்லாம் என்ன, என்ன என்று தேடினால் கிடைக்கும்.

 “தேடுங்கள் கிடைக்கும்”
“தட்டுங்கள் திறக்கப்படும்”
“கேளுங்கள் கொடுக்கப்படும்”

மாதிரி விண்ணப்ப படிவம்.

Friday, 19 April 2013

பென்சன் அரியர் வழங்க ஏன் இந்த தாமதம் ?




பென்சன் அரியர் வழங்க ஏன் 
இந்த தாமதம்?

இராணுவ பென்சனர்கள் அனைவரும் அமைதியாக பல வேண்டுகோள்கள் விடுத்தும், வங்கிகள் இன்னும் மேம்படுத்தப்பட்ட பென்ஷனை வழங்கவில்லை.  ஏன் இந்த தாமதம் ?  பென்சனர்கள் வங்கிகள் முன் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைகிரார்களா ?

தாமதத்திற்கு வங்கிகள் முறையாக நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.  அதுதான் ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அழகு.

தாமதமின்றி உரிய நேரத்தில் இந்த கூடுதல் பென்சன் தொகையை மாதாமாதம் அதே வங்கியில் ஒரு பென்சனர் முதலீடு செய்திருந்தால் அதற்க்கு கீழ் கண்ட விகிதத்தில் வட்டி கிடைத்திருக்கும்.

15 ஆண்டு y குருப் சிப்பாய் மார்ச்  2013 முடிய ரூ. 121 வட்டி கிடைக்கும்.
17 ஆண்டு y குருப் நாயக்    மார்ச்  2013 முடிய ரூ. 128 வட்டி கிடைக்கும்.         
20 ஆண்டு y குருப் ஹவில்தார் மார்ச்  2013 முடிய ரூ. 186  வட்டி கிடைக்கும்.            
28 ஆண்டு ஆனரரி லெப்டினன்ட்  2013 முடிய ரூ. 476  வட்டி கிடைக்கும்.       
28 ஆண்டு ஆனரரி கேப்டன்   2013  முடிய 556  வட்டி கிடைக்கும்.

குடும்ப பென்சனர்களுக்கு இதை விட கூடுதல் வட்டி கிடைக்கும்.

எனவே வங்கிகள் நியாயமான முறையில், பென்சனர் கேட்காமலே இந்த வட்டியை வழங்குவது தான் நல்ல வங்கிக்கு அழகு.  செய்வார்களா ?

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...