Tuesday, 5 January 2016

"தெரிந்து கொள்ளுங்கள்" ராணுவ பென்சன் வழிகாட்டி இரண்டாம் பதிப்பு



 “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற ராணுவ பென்சன் வழிகாட்டி
புத்தகம் இதோ வந்துவிட்டது !

இதில் பல முக்கிய செய்திகள் உள்ளது.
பல வகையான பென்சனை அடையாளம் காணும் முறை,
ஒரு SMS மூலம் உங்கள் பென்சனை தெரிந்து கொள்ளும் முறை,
உயில் பற்றிய விளக்கம்,
பிரதமரின்  ஸ்காலர்ஷிப் திட்டம்,
பென்சன் பற்றிய பல நல்ல கேள்வி பதில்,
OROP பற்றி அரசின் அறிவிப்பு,
ராணுவ தீர்ப்பாயம்,
ஜீவன் பிரமாண் பற்றிய விளக்கம்,
சர்குலர் 547 இன் படி குடும்ப பென்சனர் அரியர் பட்டியல்,
ECHS கேள்வி பதில்,
டிஜிட்டல் லாக்கர்,
இன்னும் பல தகவல்கள் உள்ளது...
ஒவ்வொரு பென்சனரும் அவசியம் படிக்கவேண்டும்,
புத்தகத்தின் விலை Rs.100/-
ஐந்து புத்தகம் வரை கொரியர் செலவு தனி  Rs.30 மட்டுமே.
நண்பர்களாக சேர்ந்து ஐந்து புத்தகங்கள் வாங்கினால் Rs.530 மட்டுமே.
நல சங்கங்கள் மொத்தமாக 50 க்கு மேல் வாங்கினால் 10% தள்ளுபடி உண்டு.
புத்தகம் கிடைக்குமிடம்
எக்ஸ் வெல் அறக்கட்டளை,
15 G மிலிடரி லைன்ஸ், சமாதானபுரம்,
பாளையம்கோட்டை, திருநெல்வேலி 627002.
போன்: 0462-2575380, 9894152959, 9894125019, 9786449036, 9442801632.






டிஜிட்டல் லாக்கர் என்றால் என்ன ?



 டிஜிட்டல் லாக்கர் என்றால் என்ன ?
DIGITAL LOCKER
(மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகம்)

இந்திய அரசு கடந்த ஜூலை 2015 இல் இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியை மக்களுக்கு அறிமுகம் செய்தது.

          இதன் மூலம் உங்கள் சொந்த முக்கிய ஆவணங்களை (அதாவது உங்கள் ஆதார் அட்டை, ரேசன் கார்டு, பான் கார்டு, பல முக்கிய அடையாள அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், பள்ளி சான்றிதழ்கள், உங்கள் சொத்து பத்திரங்கள், உயில், இன்னும் பல) ஸ்கேன் செய்து பாதுகாப்பாக இணைய தளத்தில் எந்த கட்டணமும் இல்லாமல் வைத்துக்கொள்ளலாம்.         வரும் காலத்தில் அரசு வழங்கக்கூடிய அனைத்து சான்றிதழ்களும் ஆதார் எண் அடிப்படையில் உங்கள் லாக்கருக்கு அனுப்பி வைக்கப்படும். சுய சான்றளிக்கும் (self attestation) வசதி மூலம் நீங்கள் தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
          இதன் மூலம் கட்டுகட்டாக காகித ஆவணங்களின் உபயோகமும் தவிர்க்கப்படும். செலவும் மிச்சமாகும்.  உங்கள் ஆவரங்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் பகிர்ந்து (ஷேரிங்) கொள்ளலாம். உங்கள் ஆதார் எண்ணுடன்இணைக்கப்பட்ட இந்த மின்னணு வைப்பு வசதி (e-store)  அரசால் இலவசாமாக வழங்கப்படுகிறது.
          இந்த சேவையை நீங்கள் பெற உங்கள் ஆதார் எண்ணும் அதனுடன் இணைக்கப்பட்ட செல் போன் எண்ணும் தேவை.
          ஆகவே ஒரு லாக்கர் கணக்கு ஆரம்பிக்க உடனே எங்கள் அலுவலகம் வரவும்.  வரும்போது மறக்காமல் ஆதார் அட்டை, செல் போன், தவிர நீங்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பும் ஒரிஜினல் ஆவணங்களையும் கொண்டு வரவும். ஒவ்வொரு ஆதார் அட்டைக்கும் தனித்தனி கணக்கு திறக்க வேண்டும்.    ஆதார் அட்டை வைத்துள்ள மாணவர்கள், வேலையில்ல பட்டதாரிகள், பென்சனர்கள் அனைவரும் இந்த லாக்கர் கணக்கு வைத்துகொள்வது நல்லது.
            வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் முன்கூட்டியே இந்த லாக்கர் கணக்கு வைத்திருந்தால்,  இன்று தாங்கள் வெள்ளத்தில் விட்ட ரேசன் கார்டு, மற்ற சன்றிதள்களுக்கு  இந்த அரசிடம் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை.  எனவே விழிப்புடன் இருந்து உடனே ஒரு லாக்கர் கணக்கு திறக்கவும். 
இந்த வசதி மார்ச் 31 வரை மட்டுமே எங்கள் மூலம் கிடைக்கும். 
மேலும் விபரங்களுக்கு : 
எக்ஸ் வெல் அறக்கட்டளை,
15 G மிலிடரி லைன்ஸ், சமாதானபுரம்,
பாளையம்கோட்டை, 627002.
போன்:0462-2575380, 9894152959.

                                      

Monday, 4 January 2016

எக்ஸ் வெல் அறக்கட்டளையை பாராட்டி கவிஞர் இல. நாதன் அவர்களின் கவிதை

எக்ஸ் வெல் அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டுவிழா 
செய்திகள்
கவிஞர் செந்தூர் இல.நாதன்
எக்ஸ் வெல் அறக்கட்டளையின்  பத்தாவது ஆண்டுவிழா
விழாவில் செந்தூர் கவிஞர் இல நாதன் அவர்கள்
அரங்கேற்றிய கவிதை உங்கள் பார்வைக்கு..
அறக்கட்டளையின் சேவைக்கு ஒரு பாராட்டு
இந்த கவிதை வடிவில்

காலத்தின் வழி

ஒவ்வொரு நாளும்

உயிர் இருப்பிற்கும்,

உறுப்பிழப்பிர்க்கும்

உத்திரவாதம் இல்லா நிலை ...


ஆரேனும் விரும்புவார்களா ?

அத்தகைய வேலை

ஆகவேதான் இந்த

இராணுவ வீரர்களுக்கு

இந்திய மனங்களில்

இமாலய உயர்நிலை !


வழிகாட்டி இல்லாத பாதை

திசை மாறி

திணற வைக்கும்


வழிகாட்டுதல் இல்லாத

உரிமை வினாக்கள்

ஊமையான உண்மையை

உணரவைக்கும் !


அது காட்சியின் பிழை !

இது காலத்தின் குறை !

முன்னாள்

படை வீரர்களுக்கு

பார்வையிருந்தும்

குருடனின் நிலை


ஆகவே

ஆண்டவன் இட்டான் கட்டளை

அமைந்தது
எக்ஸ் வெல் அறக்கட்டளை !

தேய்வூதியமாகிப்போன

ஓய்வூதிய விகிதங்களை

சரிவிகித  சதவீதங்களாய்

சாமான்யர்க்கும் பெற்றுத்தருவது

இந்த அறக்கட்டளையின் சேவை !


சரியான சமமான

தீர்வுகளே

இவர்களின் பாதை  !


ஆதரவற்ற விதவைகள்

ஆதரவிருந்தும், அனைவரும்

அடையமுடியா

ஓய்வூதிய பலன்கள்

அத்துணைக்கும்

அறக்கட்டளை அளிக்கும்

புத்தகங்களே

புதிய கீதை

அன்று

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்

பேரறிஞரரின் பொன்மொழி !


அது போல்


இன்று

“ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்

இவர்களின் உறுதிமொழி !



கட்டாயம் அது நிறைவேற

காலம் செய்யும் வழி !

நன்றி ! ஜெய் ஹிந்த் !  ..............செந்தூர் இல. நாதன்



 ஒரு மாற்று திறனாளி
செல்வி 
அபர்ணாவுக்கு நவீன காலணி வழங்கிய
(நடுவில் இருப்பவர் டாக்டர் திருமதி முத்து மீனாள் அவர்கள்)


 வள்ளல் திரு C.ராமமூர்த்தி அவர்கள் 
சௌர்ய சக்கரா விருதுபெற்றவர்.

Friday, 1 January 2016

எக்ஸ் வெல் அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டு விழா


 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
(2016)
எக்ஸ் வெல் அறக்கட்டளையின்
பத்தாவது ஆண்டு விழா
 மிலிடரி லைன்ஸ், சமாதானபுரம்பாளையம்கோட்டை,
திருநெல்வேலி -627002

இடம்: மணி மஹால், சாந்திநகர், பாளையம்கோட்டை.
நாள்: 03.01.2016 ஞாயிறு காலை 10 மணி.
சிறப்பு விருந்தினராக
Wg.Cdr.P.J.விக்டர் அவர்கள்
Sgt.S.சண்முகம் அவர்கள், பேரளம்.
Cpl.மோகன ரங்கன் அவர்கள், சென்னை.
Sgt.டேவிட், அவர்கள். கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் .
விழாவில்
“தெரிந்து கொள்ளுங்கள்” என்ற
பென்சன் வழிகாட்டி புத்தகத்தின்
இரண்டாம் பதிப்பு வெளியிடப்படும்.
தேவையானர்வர்களுக்கு டிஜிட்டல் லாக்கர் கணக்கு திறந்து கொடுக்கப்படும்.
முதியோர்கள் கௌரவிக்கபடுவர்.
படை வீரர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
திருநெல்வேலி ECHS கிளினிக்கில் பணிபுரியும் சிறந்த பணியாளர்கள் கௌரவிக்கபடுவார்கள் .
ஏழை பொதுமக்களுக்கு பல உதவிகள் வழங்கப்படும்.
அனைவருக்கும் தியானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.
“நங்கூரம்” என்ற பெயர் கொண்ட புதுமையான முதியோர் மறு வாழ்வு மையம் அறிமுகப்படுத்தபடும்.
ECHS மற்றும் பென்சன் பற்றிய கேள்வி பதில் அடங்கிய படக்காட்சியும் திரையிடப்படும்.
இது ஒரு நல்ல செய்தியும், செயல்களும் அடங்கிய விழா.
அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
இவண்
R.செல்லப்பா,
நிர்வாக அறங்காவலர்
எக்ஸ் வெல் டிரஸ்ட்,
திருநெல்வேலி-2. 

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...