Monday, 14 July 2014

OROP யை செயல்படுத்த உருவாக்கிய அரசின் வரைவு கடிதம் (DRAFT GOVERNMENT LETTER)



OROP யை செயல்படுத்த உருவாக்கிய அரசின் வரைவு கடிதம்

(DRAFT GOVERNMENT LETTER)

முன்னாள் இராணுவத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையான OROP யை அமுல் படுத்த அரசு தேர்தல் நேரங்களில் முனைப்புடன் செயல்பட்டது.  இராணுவ பென்சனர்களின் கோரிக்கைகள் பல முறை பரிசீலிக்கப்பட்டு ஓரளவு சரி செய்து வந்தது அரசு.

தற்போது இறுதியாக இந்த OROP  கோரிக்கையை அமுல்படுத்த முன் வந்துள்ளது.  மாண்புமிகு முன்னாள் நிதி அமைச்சர் 17..2.2014 அன்று தனது பட்ஜெட் உரையில் இதை தெளிவாக கூறினார்.  அதன்பின் மாண்புமிகுமுன்னாள் பாதுகாப்பு அமைச்சர் 26.2.2014 அன்று ஒரு முக்கிய கூட்டத்தை கூட்டி இந்த OROP யை கொள்கை அளவில் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறி இதை செயல் படுத்தும்படி சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் கூறினார். தேர்தலும் வந்தது.  எல்லாம் திசை மாறுகிறது இன்று.  அரசு ஒப்புக்கொண்ட கொள்கை படி OROP  என்பது :-

“ஒரே பதவி, ஒரே பணிகாலத்துடன் ஒய்வு பெற்ற ராணுவ பென்சனர்களுக்கு அவர்கள் எந்த தேதியில் ஒய்வு பெற்றாலும் அனைவருக்கும் ஒரே பென்சன் வழங்கப்படும்.  வரும் காலங்களில் இந்த பென்சன் அதிகருக்கும் போது இதன் பயன் பழைய பென்சனர்களுக்கும் வழங்கப்படும்" என்பதுதான் இந்த கொள்கையின் சாராம்சம்.  இதன்படி :-

1.       ஒய்வு பெறும்போது இருந்த அதே பதவி தற்போது பணியில் உள்ளவர் பதவிக்கு சமமாகும்.
2.       அதே பணி காலம்  தகுதி கணக்கிடப்படும்.
3.       ஒய்வு பெரும் தேதி எதுவாகவும் இருக்கலாம்.
4.       வருங்காலத்தில் அதிகரிக்கும் பென்சன் பழைய பென்சனர்களுக்கும் வழங்கப்படும்.
5.       தற்போதைய பென்சனர் என்பவர் 1.7.2013 க்கு பின்னரும் 31.3.2014  க்கு முன்னதாகவும்  ஒய்வு பெற்றவர்கள் ஆவர்.  இந்த தேதிக்கு முன்னதாக ஒய்வு பெற்றவர்கள் பழைய பென்சனர் என கருதபடுவர்.
தற்போதைய பென்சனருக்கு வழங்கப்படும் பென்சன் பழைய பென்சனருக்கும் வழங்கப்படும்.



OROP யை அமுல்படுத்த சில புதிய விதிமுறைகள்.

1.       முழு பென்சன் பெற 33 ஆண்டுகள் பணிக்காலம் தேவை என்ற நிபந்தனை நீக்கப்படுகிறது.
2.       பென்சன் கணக்கிட முழுமையான பணிக்கால வருடம் மட்டும் எடுத்து கொள்ளப்படும்.  பென்சன் பெறுவதற்கான குறைந்த பட்ச பணிகாலத்தில் எந்த மாற்றமும் இல்லை.
3.       முப்படை  படை பிரிவிலும் உயர்ந்த ஊதியம் கொண்ட குருப்பை கணக்கிலெடுத்து 1.1.2006 க்கு முன்னதாக ஒய்வு பெற்றவர்களுக்கு அவர்கள் பதவியின் கூடுதாலான ஊதியத்தை கணக்கிலெடுத்து பென்சன் நிர்ணயிக்கப்படும்.
4.       பணியில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் 3%
ஊதியம் அதிகரித்து வழங்கபடுவதுபோல் பென்சனர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.
5.       1.4.2014 முதல் OROP முறையில் பென்சன் வழங்கப்படும்.
6.      1.7.2014  முதல் ஒவ்வொரு ஜூலை மாதத்தில் இன்கிரிமென்ட் வழங்கப்படும்.
7.       முழுமையான பென்சன் பெறுவதற்கு 33 ஆண்டுகள் சர்வீஸ் தேவையில்லை.
8.       ஆனரரி நாயப் சுபெதார்களுக்கு ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் வழங்கப்படும்.
9.       OROP யை அமுல் படுத்துவதின் மூலம் தற்போதைய பென்சனர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தும் பழைய பென்சனர்களுக்கும் வழங்கப்படும். வரும் காலத்தில் சம்பளத்திலும் பதவி உயர்விலும் வரும் மாற்றங்கள் மூலம் பென்சன் அதிகமாகும் போது அதன் பயன்கள்  பழைய பென்சனர்களுக்கும் அதே தேதி முதல் வழங்கப்படும்.
10.   மேற்கண்ட இந்த வரைவு கடிதத்தின் படி தயாரிக்கப்பட்ட பென்சன் பட்டியல்  விமான படையில் கூடுதல் ஊதியம் பெரும் குருப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.  இதேபோல் தரைப்படை சம்பள பட்டியலை CGDA  கேட்டுள்ளது. இறுதியாக எந்த பட்டியல் முடிவாகும் என்று தெரியவில்லை.
11.   65 வயதுக்கு முன்னதாக இறந்தவர் மனைவிக்கு இந்த பட்டியல் படியான கூடுதல் பென்சன் கிடைக்கும். (Enhanced rate of ordinary family pension)
12.   விசேஷ குடும்ப பென்சன் இந்த பட்டியல் தொகையில்120% கிடைக்கும்.

13.   போர்கால குடும்ப பென்சன் இந்த பட்டியல் தொகையில் 200% வழங்கப்படும்..


மேற்கண்ட நிபந்தனைகளுடன் கீழ்க்கண்ட பட்டியல் அமுல் படுத்தபட்டால் நமது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும்.  ஆனால் நமது அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் செயல்படுத்தும் நிலை இருப்பதால் தாமதம் ஆகிறது.  அமைச்சர்கள் முழு மனதுடன் செயல்பட்டால்தான் OROP கிடைக்கும்.
 

Ors/JCOs/Hony Ranks
Revised Pension with effect from 01 Apr 14: JCOs/ORs
QS
Ranks
Sepoy
Naik
Havildar
Nb Sub
Sub
Sub Maj
H Lt
H Capt
15
8365
8760
9390
11635
12355
12800
16
8365
8760
9390
11635
12355
12800
17
8365
8840
9685
11635
12355
12800
18
8810
8845
9685
11635
12355
12800
19
8815
9015
9685
11635
12420
12885
20
9350
9550
9750
11635
12775
12885
21
9410
9610
9810
11635
12935
13705
22
9410
9610
9810
11635
13445
13935
23
X
9730
9930
11635
13450
14165
24
9730
9930
11635
13885
14405
25
X
9930
11635
13885
14405
26
9930
11635
14575
15075
14440
27
X
11735
14575
15075
14440
28
11735
14575
15310
16160
17905
29
11865
15015
15545
16160
17905
30
12030
15015
15790
16160
17905
31
12195
15015
16020
16160
17905
32
12360
15015
16020
16160
17905
33
12685
15015
16020
16160
17905
34
12845
15015
16020
16160
17905
35
12845
15015
16020
16160
17905
36
12845
15015
16020
16160
17905
37
12845
15015
16020
17130
17905
38
12845
15015
16020
17130
17905
39
12845
15015
16020
17130
17905
40
12845
15015
16020
17130
17905
Rank
Sepoy
Naik
Havildar
Nb Sub
Sub
Sub Maj
Hony Lt
Hony Capt
Ord Family Pension
5646
5838
5958
7707
9009
9612
10278
10743
100% Disability
5646
5838
5958
7707
9009
9612
10278
10743
Note: -
1.         Table has been made using real data available and best across three Services.
2.         Stepping up has been done in cases where the pension for greater length of service in a rank is lower than the lesser length of service in the same rank.
3.         Stepping up has also been done in cases where the pension in senior rank is lower than a junior rank for the same length of service.
4.         In cases where real data is not available, the date of next rank for same length of service has been used reducing the pension by half the difference in Grade Pays.
5.         The Enhanced Ordinary Family Pension will be equivalent of the re-fixed retiring pension. Special Family Pension will be 120% of the re-fixed retiring pension and Liberalised Family Pension will be 200% of the re-fixed retiring pension. 
6.         For lower disability less than 100%, the above figures will be reduced as applicable. 



Saturday, 12 July 2014

ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் (OROP)




ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் (OROP)
ஏன் இந்த குழப்பம்?

சுமார் 28 லட்சம் முன்னாள் இராணுவத்தினரும் 5 லட்சம் விதவைகளும் ஆவலுடன் எதிர்பார்த்த OROP நமது நிதி அமைச்சரின் அறிவிப்பை கேட்ட பின் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது.

OROP என்றால் என்ன ?
பாதுகாப்பு படை வீரர்கள் ஒய்வு பெறும்போது வழங்கப்படும் பென்சன் அவர்களுடைய பதவிக்கும், (RANK) பணிபுரிந்த காலத்திற்கும், QUALIFYING SERVICE) தகுந்தார்போலும், எந்த கால கட்டத்திற்கும் (IRRESPECTIVE OF THE DATE OF RETIREMENT) ஒரே சீராக இருக்க வேண்டும். காலத்திற்கு ஏற்றால்போல் அதிகரிக்கப்படும் இந்த பென்சன் அனைவருக்கும் ஒரே சீராக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதுதான் முன்னாள் இராணுவத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

கடந்த காலங்களில் வெவ்வேறு கால கட்டத்தில் இந்த OROP கோரிக்கையை கொள்கை அளவில் ஒப்புகொண்டது காங்கிரஸ் அரசும் பாரதீய ஜனதா அரசும்.  ஆனால் பல காரணங்களால் காங்கிரஸ் அரசு இந்த கோரிக்கையை முழுமையாய் நிறைவேற்றாமல் ஒருசில மாற்றங்களை மட்டும் செய்தது.  இதை கண்டு ஏமாற்றமடைந்த IESM (INDIAN EXSERVICEMEN MOVEMENT) என்ற ராணுவத்தினர் சங்கம் பல போராட்டங்களை நடத்தியது.  பல ஆயிரக்கணக்கான வீர பதக்கங்களை குடியரசு தலைவரிடம் திருப்பி அளித்தது. பல  உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியது.  கோரிக்கை மனுக்களை ரத்தத்தில் கையொப்பம் இட்டு குடியரசு தலைவரிடம் கொடுத்தனர்.

பொது தேர்தல் நேரத்தில் இரு கட்சிகளும் ஏகோபித்த குரலில் OROP யை முழுமையாய் அமுல் படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தன.  காங்கிரஸ் ஒரு அறிவிப்பை ரூ.500 கோடியில் விட்டு. தோல்வி கண்டது.  வெற்றி பெற்ற BJP அரசு அமுல்படுத்தாமல் வெறும் ரூ.1000 கோடி அறிவிப்பை மட்டும் வெளியிட்டுள்ளது.  முழுமையான OROP யை அமுல் படுத்த சுமார் ரூ.5000 முதல் ரூ.9000  கோடி வரை ஆகும் என்று கொஷியார் கமிட்டி அறிவித்துள்ள நிலையில் வெறும் ரூ.1000 கோடி மட்டும் பட்ஜெட்டில் ஒதுக்குவது எப்படி சரியாகும் என்பது பெரும் கேள்விகுறி.

கொள்கை அளவில் ஒப்புக்கொண்ட அரசு அதை அமுல் படுத்த ஏன் தயங்குகிறது.?  தேர்தல் கூட்டங்களில் வாக்களித்த பாரதிய ஜனதா கட்சி தற்போது ஏன் பின் வாங்குகிறது.?

நம்மை ஏமாற்ற முயற்சிக்கிறது இந்த அதிகார வர்க்கமும் அரசியல் கட்சிகளும்.  நாம் போராட தயாராக வேண்டும் என்கிறது நமது சங்கம். IESM.
எனவே நாம் முழுமையாக OROP பெற போராட்டத்திற்கு தயார் ஆக வேண்டும்.  வேறு வழியில்லை.

இந்த OROP யை அமுல் படுத்த எவ்வளவு செலவு ஆகும் என்பதை தெளிவாக எடுத்து சொல்ல பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை கணக்கதிகாரிகள் (CGDA, CDA)   பல மாறுபட்ட கருத்துகளை கூறி பிரதமரையும் நிதி அமைச்சரையும் குழப்பி வருகின்றனர்.  பாதுகாப்பு சம்பந்தமான செலவினங்களை கணக்கிடும் அலுவலகங்களின் செயல்பாடுகளை முழுமையாக தணிக்கை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இந்த அலுவலகங்கள் துல்லியமாக கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தாத காரணத்தால் கடந்த ஆண்டு நமது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் திரு A.K. அந்தோணி அவர்கள் ரூ.22000/- கோடி ரூபாயை நிதி அமைச்சரிடம் திருப்பி கொடுத்துள்ளார் என்பது செய்தி.

தேசிய பாதுகாப்பு ஆகும் செலவினங்களில் சிக்கனம் கடைபிடிக்க நினைக்கும் அரசு பல லட்சம் கோடிகளில்இழந்த ஊழல் பணத்தை வசூல் செய்யவும், கருப்பு பணத்தை வசூல் செய்யவும் மறுக்கிறது.

நாட்டின் பாதுகாப்புக்கு பணிபுரியும், பணிபுரிந்த வீரர்களின் நலன் காக்க தவறினால் வருங்காலத்தில் இந்த நாடு எதிர்பாராத இன்னல்களை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை இந்த அதிகார வர்க்கமும் அரசியல் வாதிகளும் உணர வேண்டும்.

Saturday, 1 March 2014

ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.





ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இராணுவ பென்சனர்களுக்கு ஒன் ரேங்க் ஒன் பென்சன் அடிப்படையில் பென்சன் வழங்கலாம் என அரசு கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஒரே ரேங்கில் உள்ள இரண்டு ராணுவ வீரர்கள் ஒரே சர்வீஸ் இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஒய்வு பெற்ற தேதியை ஒப்பிடாமல் ஒரே பென்சன் வழங்க படும்.

இதற்காக நிதி அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள் தனது இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் ரூ.500 கோடி ஒதுக்கியிருப்பதாக தெரிகிறது.  தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வரும் முன்னதாக உரிய அரசு ஆணைகள் வெளியிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ராணுவ அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல். 

இதற்கிடையில்  7 ஆவது ஊதிய கமிசனும் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் தலைவராக ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், ராணுவ தீர்பாயங்களின் தலைவராக பணி புரிந்த திரு.A.K. மாத்தூர் அவர்கள் நியமிக்க பட்டுள்ளார்கள்.  ராணுவ தீர்பாயங்களில் பணிபுரிந்து பல பென்சன் வழக்குகளுக்கு நல்ல தீர்ப்பு இவர் வழங்கியுள்ளதால் இந்த 7 ஆவது ஊதிய கமிசனில் ராணுவ பென்சனர்களின் குறைகள் முழுமையாக தீர்க்கப்படும் என நம்புவோமாக.

வரப்போகும் மக்களவை தேர்தலில் பல ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கெடுக்க உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது.

சமீபத்தில் ஒய்வு பெற்ற ராணுவ தளபதி ஜெனரல் V.K. சிங்  அவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட உள்ளார்.  அதே போல் இந்திய எக் சர்விஸ் மென் மொவ்மென்ட் என்ற சங்கத்தின் தலைவராக உள்ள லெப்.ஜெனரல்.ராஜ் காடியான் அவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட உள்ளார்.

ஆக இந்த மக்களவை தேர்தல் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று தெரிகிறது. 

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் சமீபத்தில் பஞ்சாபில் பல முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதிரடியாக “ஒன் ரேங்க் ஒன் பென்சன் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டதன் பயனாக அவசர அவசரமாக இந்த OROP  கிடைக்க உள்ளது.

ராகுல் காந்தி அவர்கள் அரசில் எந்த பதவியிலும் இல்லாவிட்டாலும் அவருடைய சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்து வருகிறது. 

ஒன் ரேங்க் ஒன் பென்சன் அடிப்படையில் 01.04.2014 முதல் கீழ் கண்ட பென்சன் கிடைக்கும் என்று தெரிகிறது.  முழு விவரம் விரைவில் வெளி வரும்.

19 வருட சர்வீஸ் கொண்ட சிப்பாய் க்கு Rs.7600  (Rs.1742 கூடுதல் கிடைக்கும்)
24 வருட சர்வீஸ் கொண்ட நாயக் க்கு Rs.8680  (Rs.2081 கூடுதல் கிடைக்கும் )
26 வருட சர்வீஸ் கொண்ட ஹவில்டாருக்கு  Rs.10005.  (Rs.2630 கூடுதல் கிடைக்கும் ) 

இவர்களுடன் சம்பந்தப்பட்ட குடும்ப பென்சனர்களுக்கும் கூடுதல் பென்சன் கிடைக்கும்.

ஜே சி ஒ களுக்கும் ஆனரரி ஆபிசர்களுக்கும் தற்போதைய பென்சனில் இருந்து எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது.  முழு விபரமும் அரசு ஆணைகள் வந்த பின் தான் தெரியும்.


Friday, 31 January 2014

இராணுவ குடும்ப பென்சனர்களின் அவல நிலை




 
நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை இந்த நாடு மறந்துவிடுவதுதான் கொடுமை
இராணுவ குடும்ப பென்சனர்களின் அவல நிலை

சமீபத்தில் ஒரு வங்கியினுடைய பென்சன் பட்டுவாடா பட்டியலை பார்க்க நேர்ந்தது.

PPO  நம்பர், பெயர், பென்சன் தொகை இவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.  காரணம் அவர்களுக்கு உரிய பென்ஷனை விட மிகவும் குறைவாக இருந்தது.  இதை கண்டு மிகவும் வேதனை அடைந்தோம்.  இவர்களுடைய முகவரி கிடைக்காத காரணத்தால், அதை தெரிந்து கொண்டு உதவும் பொருட்டு இந்த இணைய தளத்தில் வெளியிடுகிறோம்.

“F” என்ற முதல் எழுத்து மட்டும் கொண்ட PPO உடைய ஒவ்வொரு பென்சனருக்கும் குறைந்த பட்ச பென்சன் 01.01.2006  முதல் Rs.7000/-.  இது DA உடன் இன்றைய தேதியில் Rs.13300 கிடைக்க வேண்டும். ஆனால் கீழ்க்கண்ட பென்சனர்களுக்கு எவ்வளவு குறைவாக கொடுக்க படுகிறது என்பதை பாருங்கள்.

தமிழ் நாட்டில் அதிமான வீரர்களை ராணுவத்துக்கு அனுப்பிய வேலூர் மாவட்டத்தில், வேலூர் நகரத்தில் உள்ள ஒரு வங்கியில் (Canara Bank) மட்டும் சுமார் ஒன்பது பேர் குறைந்த பென்சன் வாங்குகின்றனர்.  இவர்களை உங்களுக்கு தெரிந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ள சொல்லவும்.

PPO No.          பெயர்              வங்கி            பென்சன் தொகை    

FBC/1166/1972   திருமதி.ஞானாம்பாள், கனரா வங்கி      Rs.5,763
F/1086/1977     திருமதி.சாரதா அம்மாள்      "         Rs.3,500
F/2500/1960    திருமதி.சரோஜா அம்மாள்    "         Rs.5,763
F/3310/1972     திருமதி.அம்புஜம்              "         Rs.5,763
F/4633/1973     திருமதி.சரஸ்வதி             "         Rs.5,763
F/1986/1981     திருமதி.ஔவையார்                   Rs.3,500
F/2542/1981     திருமதி.நவநீதம்மாள்                  Rs.3,500
F/253/1969      திருமதி.சந்திர அம்மாள்  A.S.           Rs.5,763
F/617/1979      திருமதி.சீதாமாள்                      Rs.7,119

பென்சனர்களின் அறியாமையாலும், இவர்களுக்கு உதவி செய்வார் யாரும் இல்லாததாலும் இந்த நிலை தொடர்கிறது. இதை படிப்பவர்களுக்கு இவர்களில் யாரையேனும் தெரிந்தால் எங்களை தொடர்பு கொள்ள சொல்லவும்.  முடிந்தால் வேலூர் மிலிடரி கன்டீனிலும், ECHS  மருத்துவ மனையிலும் இந்த பெயர்களை நோட்டீஸ் பலகையில் வெளியிடவும்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி

Ex-servicemen and Social Welfare Trust,
No.15G Military Lines,
Samathaanapuram, Palayamkottai,
Tirunelveli 627002.
Phone:0462-2575380
Mobile:9894152959, 9786449036

மற்ற ஊர்களில் உள்ளவர்கள் பெயர் அடுத்து சில நாட்களில் வெளியிடுவோம். 

Wednesday, 1 January 2014

வாசகர்களுக்கு எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

வாசகர்களுக்கு எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2014


எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...