Saturday, 26 January 2013

இரண்டாவது குடும்ப பென்சன்



பாரத ஸ்டேட் வங்கியில் மறு பணியில் சேர்ந்து
ஒய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர்களுக்கு
ஓர் வேண்டுகோள்

உலகத்திலேயே பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கிதான் அதிமான அளவு முன்னாள் இராணுவத்தினரை காவலர் பணிக்கு நியமித்தது அன்று.  இன்று நிலைமை வேறு. ஸ்டேட் வங்கியில் இந்த காவலர்கள் மிடுக்கான உடையில் நிற்கும் அழகே தனி.  பாரத ரிசர்வ் வங்கிக்கும், ஸ்டேட் வங்கிக்கும் பெருமை சேர்ப்பதில் இந்த காவலர்களுக்கு பெரும் பங்கு உண்டு.  இவர்களுக்கு கல்வி அறிவு குறைவாக இருந்த காரணத்தால், கடைசி வரை காவலர்களாக இருந்து ஒய்வு பெற்றனர்.  பெரும்பாலானவர்களுக்கு இந்த வங்கி பென்சன் கொடுக்க வில்லை என்பது பலருக்கு தெரியாது.

பாரம்பரியம்மிக்க இந்த பெரிய வங்கியில் பென்சன் திட்டம், அதுவும் குடும்ப பென்சன் திட்டம், நீதிமன்றம் சென்றுதான் பெற முடிந்தது.  இந்த வங்கியில் பணிபுரியும் ஒரு முன்னாள் படை வீரர், பென்சன் பெரும் தகுதி பெறுவதற்கு பல வினோதமான நிபந்தனைகள் இருந்தன.  இதன் காரணமாக இந்த வங்கியில் பணிபுரிந்த பெரும்பாலான முன்னாள் படை வீரர்கள் பென்சன் கிடைக்காமல் ஒய்வு பெற்றனர்.

காலபோக்கில் பென்சன் விதிகளில் சில மாற்றங்கள் வந்த காரணத்தால் ஒரு சில பேருக்கு பென்சன் கிடைக்க வாய்ப்பு கிடைத்தது.  இருந்த போதிலும் ஸ்டேட் வங்கியின் குடும்ப பென்சன் ஒட்டுமொத்தமாக இந்த முன்னாள் படை வீரர்களின் விதவைகளுக்கு மறுக்கப்பட்டது.  சரியான காரணம் இல்லாமல் மத்திய அரசின் பென்சன் விதிகளை (CCS Pension Rules) மேற்கோள் காட்டி குடும்ப பென்சன் மறுக்கப்பட்டது.  இதன் காரணமாக எண்ணற்ற விதவைகள் இந்த வங்கியுடன் எந்த தொடர்பும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.  ஆனால் பெரும்பாலான விதவைகளிடம் ஸ்டேட் வங்கியின் குடும்ப பென்சன் பெறுவதற்கான ஆணைகள் இருந்தும் பென்சன் கிடைக்காமல் இருக்கின்றனர்.

இப்போது மத்திய அரசு இதே போன்ற விதவைகள் 24.09.2012 முதல் இரண்டு பென்சன் பெற்றுக்கொள்ளலாம் என அரசாணைகள் வெளியிட்டுள்ளது.  காலம் கடந்து வந்துள்ள இந்த அரசாணையின் பயன் பாதிக்கப்பட்ட  அனைவருக்கும் போய் சேர வேண்டுமென்றால் அவர்கள் அனைவருக்கும் இந்த செய்தி தெரிய வேண்டும்.  இந்த செய்தியை அவர்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது ? 

வங்கியே முன்வந்து சுற்றறிக்கை விடலாம்.  ஸ்டேட் வங்கி பென்சனர் சங்கம் வேண்டிய உதவிகள் செய்யலாம். இதை படிக்கும் வாசகர்கள் தனக்கு தெரிந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு சொல்லலாம்.  மிலிடரி கேண்டீன், ECHS  பாலி கிளினிக்குகளில் நோட்டிஸ் ஒட்டி தெரிய படுத்தலாம்.  இன்னும் எத்தனையோ வழிகளில் நம் இனத்தவர்களுக்கு உதவி செய்யலாம்.

இந்த வலைப்பூவை நிர்வகிக்கும் EXWEL TRUST, IESM  மற்றும் SBI PENSIONERS ASSOCIATION  ஆகிய மூவரும் சேர்ந்து இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முயற்சிகள் செய்து வருகிறோம்.

இந்த பென்சன் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் உங்களுக்கு யாரேனும் தெரிந்தால், அவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எங்களுக்கு தெரிவிக்கவும்..

இந்த  செய்தி மற்ற அரசு நிறுவனங்களில் பணி புரிந்தவர்களுக்கும் பொருந்தும்.

எங்கள் தொலைபேசி எண் : 9894152959, 9786449036

நமது கூட்டு முயற்சியை ஒரு சமூக நலனுக்காக அர்ப்பணிப்போம்.

இரண்டு  குடும்ப பென்சன் அரசாணை பெற 
இங்கே கிளிக் செய்யவும்

Sunday, 20 January 2013

இரண்டு குடும்ப பென்சன்.




இரண்டு குடும்ப பென்சன்
நமது நியாமான கோரிக்கைக்கு இணங்கியது அரசு.

இரண்டு குடும்ப பென்சன் மறுக்கப்பட்டது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.  இது போன்ற பென்சன் விதிகளை அரசியல்வாதிகள் உருவாக்கவில்லை.  அதிகார வர்க்கம்தான் உருவாக்கியது.  இதன் பாதிப்பு அவர்களுக்கு இல்லை.  ஆதி முதல் அந்தம் வரை அதிகார தோரணையில் கொடிகட்டி பறக்கும் இவர்களுக்கு அடிமட்ட மக்கள் படும் இன்னல்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.

இந்த நாட்டில் உள்ள தலை சிறந்த விஞ்ஞானிகள், புகழ்பெற்ற மருத்துவர்கள், சமூக சேவர்கள், தொழில் முனைவோர் போன்றவர்களுக்கு இல்லாத மரியாதை இந்த அதிகார வர்க்கத்துக்குத்தான் உள்ளது.   இது மாபெரும் துரதிர்ஷ்டம்.

அப்பாவி இராணுவ பென்சனர்களின் பென்சன் விதிகளில் ஒரு வரியை மட்டும் அமைதியாக சேர்த்துவிட்டு, பல்லாயிரகணக்கான விதவைகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள் இவர்கள்.  இரண்டு அரசு பணிகள் செய்த ஒரு இராணுவ வீரர் இரண்டு பென்சன் பெறவும் இரண்டு குடும்ப பென்சன் பெறவும் விதிகள் அனுமதிக்கும் போது விதவைகளுக்கு மட்டும் மறுப்பது என்ன நியாயம்.  இதனால் பெரிதும் பாதிக்க பட்டது குறைந்த பென்சன் வாங்கும் இராணுவ பென்சனர்கள்தான்.

காலம் மாறியது, நமது கல்வியறிவும் வளர்ந்தது.  நீதிக்காக குரல் எழுப்போனோம். இந்த அதிகார வர்க்கத்தின் ஏமாற்று வேலை வெட்ட வெளிச்சமாகியது.

இப்போது 24.09.2012  முதல் இரண்டு குடும்ப பென்சன் தடையில்லை என்று கூற, முன்பு சேர்த்த அந்த வரியை இப்போது நீக்கிவிட்டது.  நீதிமன்றங்களில் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் தேங்க காரணம் இந்த அதிகார வர்க்கம்தான் என்பதை அரசு உணர வேண்டும்.  நிர்வாக சீர்திருத்தம் போர்கால அடிப்படையில் நடக்கவேண்டும்.  காலம் தாழ்த்துவது நாட்டுக்கு நல்லதில்லை. நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.  நீதிக்காக போராடவேண்டும்.


Friday, 18 January 2013

பென்சன் ஆணைகள் வந்துவிட்டது




நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பென்சன் ஆணைகள்
17.01.2013 இராணுவ அமைச்சகத்தால் வெளியிட பட்டுள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள்

இதன் பலன்கள் 24.9.2012 முதல் கிடைக்கும்.

இரண்டு குடும்ப பென்சன் 24.9.2012 முதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும்.
பென்சனிலும், குடும்ப பென்சனிலும் சில மாற்றங்கள்
பயன் தரும் வகையில் உள்ளன.

இயலாமை பென்சன், போர் காய பென்சனில்
சில மாற்றங்கள் உள்ளன.

மொத்தத்தில் நாம் மகிழ்ச்சியுடன்
வரவேற்கவேண்டிய ஒன்று.

முழு விபரங்களுக்கு

www.indianmilitary.info  என்ற தளத்தை பார்க்கவும்.



Thursday, 17 January 2013

பென்சனர் குறைதீர்க்கும் கூட்டம்.




பென்சனர் குறை தீர்க்கும் கூட்டம்

சென்னை கோட்டையில் உள்ள எக்ஸ் சர்விஸ் மென் உதவி மையம், திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் உள்ள காண்டீனில் வைத்து பென்சனர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த உள்ளது.

திருநெல்வேலி 21.1.2013 & 22.1.2013 காலை ஒன்பது மணி முதல்.
தூத்துக்குடி 23.1.2013 காலை ஒன்பது மணி முதல்.
கோவில்பட்டி 24.1.2013 காலை ஒன்பது மணி முதல்.

குறிப்பு: கோவில்பட்டியில் எந்த இடம் என்பதை 0462-2560028 என்ற தொலைபேசியில் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வசதிக்காக இந்த கூட்டத்தை காண்டீனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நல்ல வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும்.

பென்சனை சரிபார்க்க கொண்டுவரவேண்டிய ரெகார்டுகள்..

1.       பேங்க் பாஸ் புக்.
2.       பென்சன் ஆர்டர்.
3.       டிஸ் சார்ஜ் புத்தகம்.
4.       வேறு ஏதேனும் கடிதங்கள் இருந்தால்.

Sunday, 13 January 2013

PONGAL GREETINGS


இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

எமது வாசகர்கள் அனைவருக்கும்,
எல்லையில் பணிபுரியும் நம்
வீரர்கள் அனைவருக்கும்
இந்த ஆண்டு 2013 எல்லா நலன்களும்
வழங்க நம் வாழ்த்துக்கள்

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...