Saturday, 1 September 2012


ராணுவ குடும்ப பென்சன்

பென்சன் ஒரு சிறந்த சமூக பாதுகாப்பு.  உங்களுக்கு கிகைக்க வேண்டிய பென்சனைபற்றி முழுமையாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ராணுவ குடும்ப பென்சனர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது

ஆறாவது ஊதிய கமிசன் பரிந்துரைகளின்படி ராணுவ குடும்ப பென்சனர்களுக்கு 01.01.2006 முதல் கீழ கண்ட விகிதத்தில் பென்சன் வழங்கப்படவேண்டும்.

குடும்ப பென்சனானது அவரவர் கணவர் ராணுவத்தில் வகித்த பதவி (ரேங்க்), குரூப் அடிப்படையில் நிர்ணயிக்கபடுகிறது.  ஆறாவது ஊதிய கமிசனின் பரிந்துரைகளில் உள்ள சில முரண்பாடுகள் இன்னமும் களையப்படாமல் இருப்பதினால் சிப்பாய், நாயக், ஹவில்டர் ஆகிய இந்த மூன்று பதவியியிளிருந்தவர் மனைவிகளுக்கும் அதற்க்கு சமமான பதவியில் இருந்த விமானப்படை, கப்பல் படையில் இருந்தவர்களுக்கும் மேலே குறிப்பிட்ட சிப்பாய் மனைவிக்கு கிடைக்க வேண்டிய அதே பென்சந்தான் இவர்களுக்கும் கிடைக்கும்.  ஆக வெவ்வேறு பதவி அடிப்படையில் கிடைக்கும் குடும்ப பென்ஷனை இவ்வாறு பட்டியலிடலாம்.

இந்த முரண்பாடு விரைவில் சரி செய்யப்படும் என்று நமது பிரதம மந்திரி கூறியுள்ளார்.

சாதாரண குடும்ப பென்சன் பட்டியல் 01.01.2006 முதல்.

1. சிப்பாய் மற்றும் அதற்க்கு சமமான மற்ற படை   
வீரர் மனைவிகளுக்கு          ------------                                 ரூ.3,500/-
2. நாயக் மற்றும்  அதற்கு  -------------“----------------------- ரூ.3,500/-
3. ஹவில்டர்   ---------------------------“----------------------    ரூ.3,500/-
4. நாயப் சுபேதார் -----------------குரூப் ‘எ’-------------------ரூ.5,070/-
5. நாயப் சுபேதார் மற்ற குரூப்  ----------------“--------------ரூ.4,650/-
6. சுபேதார் குரூப் “எ” --------------------------“----------------ரூ.5,190/-
7.சுபேதார் மற்ற குரூப் -------------------------“----------------ரூ.4,770/-
8.சுபேதார் மேஜர் குரூப் “எ”------------------“-----------------ரூ.5,250/-
9. சுபேதார் மேஜர் மற்ற குரூப் ---------------“----------------ரூ.4,830/-
10.ஹோனரி லேப்டிமினன்ட் ------------------“-------------  ரூ.8,100/-
11.ஹோனரி கேப்டன் -------------------------“----------------ரூ. 8,310/-

கிடைக்கும் பென்ஷனை சரி பார்ப்பது எப்படி ?

சாதரணமாக வங்கி பாஸ் புத்தகத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த பென்சன் தொகைதான் பதியப்பட்டிருக்கும்.  அகவிலைப்படி, மருத்துவபடி போன்றவை தனித்தனியே இருக்காது.  எனவே உங்கள் பென்ஷனை சரி பார்க்கும் முன்னதாக உங்களுக்கு எவ்வளவு  கிடைக்கவேண்டும் என்பதை இந்த பட்டியலுடன் ஒப்பிட்டு பின்னர் அப்போது வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் மருத்துவ படியையும் சேர்த்து நீங்களாக கணக்கிட்டு அந்த தொகை உங்கள் வங்கி  புத்தகத்தில் பதிய பட்டிருக்கிறதா  என்பதை உறுதி செய்யுங்கள்.  இரண்டு தொகையும் ஒத்து வராவிட்டால் உடனே வங்கியில் முறையிட்டு சரி செய்யுங்கள்.
                                                                                                                        தொடரும் .........
                                                                                                                                                                                                           

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...