Thursday, 13 September 2012

வங்கிகளும் ராணுவ பென்சனர்களும்


வங்கிகளில் காத்திருக்கும் பென்சனர்கள்.

வங்கிகள், ராணுவ பென்சனர்கள் அனைவருக்கும் சரியான பென்சன் கொடுக்கின்றனவா?

இது பற்றி நன்கு தெரிந்தவர்கள், இல்லை என்று தான் கூறுவார்கள்.
இதற்கு என்னதான் தீர்வு?

1.ஒவ்வொரு பென்சனரும் தனக்கு கிடைக்க வேண்டிய பென்சன் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

2. வயதான பென்சனர்களுக்கு குடும்பத்திலுள்ள உறவினர்கள் சரியான பென்சன் கிடைக்க உதவேண்டும்.

3.அருகிலுள்ள பென்சனர் சங்கங்களுக்கு சென்று பென்ஷனை சரி பார்க்க வேண்டும்.

4. இது சம்பந்தமான புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும்.

5. ராணுவ குடும்ப பென்சனர்கள் தன் கணவர் ரேங்க், சர்வீஸ், குரூப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

6. மொத்தத்தில் ஒவ்வொரு பென்சனரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ராணுவ பென்சன் பலருக்கும் புரியாத ஒரு புதிர்.  வங்கிகள்,  தானாக சரியான கொடுப்பார்கள் என்று நினைப்பது தவறு.  நாங்கள் சுமார் இருபது ஆண்டுகளாக இதற்க்கு ஒரு தீர்வு காண முயற்சிக்கிறோம்.  ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.

நமது பென்சனர்களுக்கு நல்லதோர் சேவை செய்யும் எண்ணத்தில், இந்த வங்கிகளை அணுகி இந்த ராணுவ பென்சனர் பட்டியலை கேட்டால் அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள்.  இப்போது தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இந்த பட்டியலை பெற முயற்சி செய்கிறோம்.  முடியுமா என்பது சில நாட்களில் தெரியும்.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...