Tuesday, 18 September 2012

பென்சன் முரண்பாடுகள்


எத்தனை குழப்பங்கள் எங்கள் பென்சனில்
படை வீரர்களின் பென்ஷனை நிர்ணயிப்பதில் உள்ள முரண்பாடுகள்.
(CDA Circular 482)

ஆறாவது ஊதிய கமிசனின் பரிந்துரைகள் ராணுவ பென்சனர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.  பென்ஷனை நிர்ணயிப்பதில் ஏகப்பட்ட முரண்பாடுகள்.  வங்கிகள் இன்னும் சரியாக புரியாமல் தினரிக்கொண்டிருக்கின்றனர்.

அடுத்தடுத்து பல சர்குலர் வெளியிட்டும் பிரச்சனையை தீர்க்கமுடியவில்லை.  CDA சர்குலர் 397, 453, 430 இப்போது 482 வந்துள்ளது.  ஒரு சிப்பாய்,  ஒரு ஹவில்டரைவிட கூடுதல் பென்சன் பெறுவது சரியா என்று கேட்டால், சரி, அந்த ஹவில்டாருக்கும் சிப்பாய் பென்ஷனை கொடுத்து விடுவோம் என்று கணக்கை முடிக்கிறது அரசு.  இதன் அடிப்படையில் சர்குலர் 482  வெளிவந்துள்ளது.  01.01.2006 லிருந்தும் 01.07.2009 லிருந்தும் பென்ஷனை மாற்றி அமைக்க பல பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்சமயம் சர்குலர் 430  லுள்ள கீழ்க்கண்ட பட்டியலின்படி பென்சன் பெறுபவர்கள் பென்சன் மாற்றி அமைக்கப்படவேண்டும்.
பட்டியல் 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 30, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 85, 106, 109, 110, 111 & 132.
இவர்களுடைய பென்சன் 01.01.2006 முதல் அல்லது 01.07.2009 ஆகிய இரண்டு தேதிகளில் இருந்தும் மாற்றி அமைக்கப்பட்டு அரியர் தொகை வழங்க வேண்டும்.

இந்த சர்குலரின் பலனை அடைய ஒவ்வொரு பென்சனரும் இணைய தளத்தில் உள்ள சுவிகியா என்ற மென்பொருளை பயன் படுத்தி சரியான பென்ஷனை தெரிந்து ள்ளலாம். 

இந்த மென் பொருள் உதவியுடன் சென்னை கோட்டை Esm. Helpline Centre இல் உள்ள கேப்டன் டேவிட் அவர்கள் நெல்லை, மதுரை, தென்காசி, வள்ளியூர், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களில் உள்ள ராணுவ பென்சனர்களுக்கு அருகிலுள்ள காண்டீனில் முகாமிட்டு பல நூற்று கணக்கான பென்சனர்களுக்கு சரியான பென்ஷனை அச்சிட்டு  வழங்கினார்கள்.  இந்த நல்ல சேவையை ஏனோ நிறுத்திவிட்டார்கள்.
கேப்டன் டேவிட் செய்த சேவைக்கு எமது பாராட்டுக்கள்.

இது போன்ற சேவை தொடரவேண்டும்.  தென் மண்டல ராணுவ தளபதி அவர்கள் எமது கோரிக்கையை ஏற்பார்களா?

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...