Sunday, 2 September 2012

பென்சன் கேள்வி பதில்



உங்கள் சந்தேகங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் 

பென்சன் பற்றிய சில கேள்வி பதில்

கேள்வி: தகுதியின்மை பென்சன் (Invalid Pension) இயலாமை பென்சன்   (Disability Pension)  இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பதில்: ஒரு படை வீரர் ராணுவ பணி நிமித்தம் தகுதியின்மை அடையாமல் வேறு காரணங்களுக்காக இயலாமை அடையும்போது இந்த தகுதியின்மை பென்ஷன் (Invalid Pension) வழங்கப்படுகிறது.  ஆனால் இந்த பென்சன் பெற குறைந்தது பத்து ஆண்டுகள் சர்வீஸ் தேவை.

ஆனால் இயலாமை பென்சனானது ராணுவ பணி நிமித்தம் ஏற்படும் இயலாமைக்கு மட்டுமே வழங்கபடுகிறது. (Granted when the disability is attributable to, or aggravated by service in accordance with rules) இயலாமை பென்சன் பெற குறைந்த  சர்வீஸ் நிபந்தனை எதுவும் இல்லை.  புதிதாக ராணுவத்தில் சேர்ந்து பயிற்சியில் இருக்கும்போது கூட இயலாமை பென்சன் பெற தகுதி உண்டு.  (Even recruits are eligible for disability pension)

கேள்வி: ஒரு படை வீரர் இளம் வயதில் ராணுவத்தில் இருக்கும்போது இறந்து விடுகிறார்.  அவர் மனைவிக்கு  மட்டுமே விசேஷ குடும்ப பென்சன் வழங்கப்படுகிறது.  அந்த படைவீரரின் வயதான விதவை தாய் கவனிப்பாரின்றி கஷ்டபடுகிறாள்.  மனைவிக்கு கொடுக்கப்படும் பென்சனில் தாய்க்கும் பங்கு கிடைக்குமா ?

பதில்: கண்டிப்பாக கிடைக்கும்.  விசேஷ குடும்ப பென்சன் வழங்கப்படுவது  அந்த விதவைக்கு மட்டுமல்ல.  மொத்த குடும்பத்துக்கும் பயன்படும் பொருட்டு கூடுதல் தொகை வழங்கப்படுகிறது. (Pension regulations 215) ஒருவேளை பென்சன் பெரும் விதவை படைவீரரின் தாய், மற்றும் அவரின் குழந்தைகளை பராமரிக்க மறுத்தால் பென்ஷனை பிரித்து பெற்றுக்கொள்ளலாம்.  இந்த விதிகள் சாதாரண குடும்ப பென்சன் வாங்குகுபவர்களுக்கு பொருந்தாது.

கேள்வி: ஒரு திருமணமான ஜே.சி.ஒ. தன் தாயாரை பென்சனக்கு நியமனம் (Nomination) செய்துள்ளார்.  மனைவியின் நிலை என்ன ?

பதில்: தாயை நியமனம் செய்திருந்தால் அவருக்குத்தான் பென்சன் வழங்கப்படும்.  ஆனால் தன் மருமகளையும், பேர குழந்தைகளையும் கவனிக்க தவறினால், வழங்கப்படும் பென்சன் விசேஷ குடும்ப பென்சனாக இருந்தால், மருமகளின் புகாரின் பேரில் பென்சன் இரண்டாக பிரித்து கொடுக்கப்படும் என்பதை அறியவும்.  இளம் வயதில், ராணுவ பணியின் நிமித்தம் அகால மரணம் அடைவதால் குடும்பத்தில் அனைவரின் நலன் கருதி விசேஷ குடும்ப பென்சன் வழங்கபடுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  கூட்டு குடும்பமாக இல்லாமல் பிரிந்து தனித்தனியே சுயநலத்துடன் வாழ முற்பட்டால் பென்சனும் பிரிக்கப்படும்.  ஒன்று பட்ட குடும்பம் சிதறுண்டு போகும் என்பதை நினைவில் கொள்ளவும். 

                                   நீங்கள் விரும்பினால் தொடரும் ..........
உங்கள்  கருத்துகளை உடனுக்குடன் தெரிவித்தால் நம் இனம் முன்னேறும்.

3 comments:

  1. நீங்கள் என்ன எழுதி என்ன ஆகபோகிறது? யாரும் கண்டுகொள்ளபோவதில்லை. நீங்கள் சொல்வதுபோல் காண்டீனில் கொடுக்கும் மதுபானத்தை ஒழித்தால்தான் இவர்கள் உருப்படுவார்கள். சுமார் 15000 பென்சன் பெறவேண்டிய ஒரு விதவைக்கு வெறும் 5000 மட்டுமே கொடுக்கிறது வங்கி. ஏன் என்று கேட்டால் எனக்கு தெரியாது என்று கூறுகிறது அந்த 70 வயது விதவை. ஆனால் அவருடைய கான்டீன் அட்டையை வாங்கி பார்த்தல் ஒவ்வொரு மாதமும் தவறாமல் சரியாய் அந்த மதுபானம் மட்டும் வாங்கி இருக்கிறது. மதுபானத்தை வாங்க சொல்லும் அளவுக்கு சரியான பென்ஷனை யாரும் இவர்களுக்கு பெற்று கொடுப்பதில்லை என்பது பெரும் கொடுமை. எது எப்படி இருப்பினும் உங்களுடைய அயராத முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள். நான் யார் என்று பின்னர் ஒரு சமயத்தில் நேரில் சொல்கிறேன். அதுவரை உங்களின் நல்ல ரசிகனாக இருக்கிறேன். முடிந்தால் முக நூலில் என்னை தேடுங்கள்.நன்றி. உங்கள் குழு நீடுழி வாழ என் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  2. Sir,

    The question and answer is very useful to all veterans. keep it up.

    Thanks & Regards

    ReplyDelete

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...