படை வீரர்களின்
கோரிக்கைகள் பரிசீலிக்கபடுமா?
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்றே எதிர்பார்த்த அறிவிப்பு
இன்னும் வெளியாகவில்லை. படை வீரர்களின்
பென்சன் முரண்பாடுகள் அனைவராலும்
ஒப்புகொள்ளபட்டது. முப்படை தளபதிகளும் தங்களது
முழு அதிர்ப்தியை தெரிவித்தும் இந்த அதிகார வர்க்கம் கண்டு கொள்வதாக இல்லை.
சுமார் இருபது லட்சத்துக்கும்
மேல் உள்ள படை வீரர்களின் பிரச்னைகளை செவி மடுத்து கேட்க ஒரு ஒரு பிரதிநிதியை கூட
அழைத்து பேச அதிகார வர்க்கமும் அரசியல் தலைவர்களும் முன்வரவில்லை.
ஒட்டுமொத்த பாதுகாப்;பு படை வீரர்களின்
நலன்கள புறகணிப்பது நாட்டுக்கு நல்லதல்ல. இந்த வேலையில்லா இளைஞர்கள் நிறைந்த
நாட்டில் கூட, ராணுவத்தில் சேர யாரும் முன் வருவது இல்லை. பல ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பணியிடங்கள்
காலியாக உள்ளன.
படை வீரர்களின் வாழ்க்கைத்தரத்தில், பொருளாதார மேம்பாட்டில்,
சமூக வாழ்க்கையில் பலதரப்பட்ட பிரச்சனைகள்., இதன் காரணமாக அதிகரித்துவரும்
தற்கொலைகள். வெளி நாட்டிலிருந்து படை
எடுப்பவர்களிடம் இருந்து நம் நாட்டை பாதுகாக்க பயிற்சி பெற்ற நம் படை வீரர்கள்,
முழுக்க முழுக்க தீவிரவாதிகளை பிடிக்கவும், உள்நாட்டு குழப்பங்களை அடக்கவும் பயன்படுத்தபடுவது
மாபெரும் துரதிர்ஷ்டம். போரில் நாம் இழந்த
வீரர்களைவிட இந்த தீவிரவாதத்தை அடக்குவதில் நாம் இழந்து வரும் படைவீரர்கள்
அதிகமாகிவிடும் போல் தெரிகிறது.
அமைதியான வாழ்க்கைக்கு நல்ல
அரசியல் தீர்வுதான் வேண்டும். வெறும்
அதிகார வர்க்கத்தின் பேச்சு வார்த்தைகளால் அமைதி நிலவ சாத்தியமில்லை. படை வீரர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம்
கடத்துவது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டின்
பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை யாரும் மறக்கலாகாது.
No comments:
Post a Comment