Saturday, 6 February 2016

ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டம் - கிடைக்கும் பயன்கள்


ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டம் மூலம் ஒரு சாதாரண சிப்பாய், நாயக், ஹவில்தார் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு உடனே என்ன கிடைக்கும் என்று பார்ப்போம்.

நமது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றபடாவிட்டா லும், ஓரளவு பயனுள்ளதாக  அமைந்துள்ளது என்று சொல்லலாம் என்பது என் அபிப்ராயம்.

1.   உடனடியாக அனைத்து குடும்ப பென்சனர்களுக்கும் மார்ச் 31 க்குள்
ரூ.21,317  அரியர் கிடைக்கும்.
2.   இதுவரை ரூ7665  குறைந்த குடும்ப பென்சன் வாங்கி வந்தவர்களுக்கு இனிமேல் மார்ச் 2016 முதல் ரூ.8758 கிடைக்கும்.  அதாவது மாத பென்சனில் ரூ.1093 கூடுதலாக கிடைக்கும்.
3.   ராணுவ பணிநிமித்தம் உயிரிழந்த சிப்பாய்  குடும்பத்தினருக்கு குறைந்த பென்சன் ரூ.7000 (15 ஆண்டு சர்விஸ் ) ஆக இருந்தது. தற்போது அது ரூ.7998 ஆக உயர்த்த பட்டுள்ளது.
4.   65/67 வயதுக்கு முன்னதாக இறந்தவர் குடும்பத்தினருக்கு தற்போது கூடுதல் பென்சன் வழங்குவதில் தெளிவு இல்லை. (Enhanced pension)
தற்போது இந்த OROP ஆணையில் இறந்து போனவர் வாங்கிய அதே பென்சன் அவர் மனைவிக்கும் அவர் வயது 65/67 வரை வழங்கப்படும் என தெளிவாக பட்டியல்கள் கொடுக்க பட்டுள்ளது.  இதன் படி பலர் பயன் பெருவார்கள்.
5.   பதவி அடிப்படையில் வழங்கப்பட்ட இயலாமை பென்சன் இப்போது சர்விஸ் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது.  15 ஆண்டு சர்விஸ் முடித்த ஒரு நாயக்குக்கு 100 சதவீத இயலாமைக்கு ரூ.3510 மட்டுமே வழங்கப்பட்டது.  தற்போது ரூ.5025 வழங்கப்படும்.  15 ஆண்டு
         ச ர்விஸ் முடித்த 20 % இயலாமை உடைய குரூப் நாயக்கிற்கு  
        ரூ.17,586 தற்போது பென்சனாக கிடைக்கும்.

உங்கள் கையிலுள்ள பட்டியலை நன்கு படியுங்கள்.  சந்தேகங்களை தெளிவு படுத்த எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.  நாம் சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளோம்.  பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் இதன் பயனை அனுபவிக்காலே போய் சேர்ந்து விட்டார்கள் என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.  நமது கோரிக்கைக்கு ஓரளவு நியாயம் கிடைத்திருக்கிறது என்பது உண்மை.  அரசு முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பது எமது விருப்பம்.

எழுத்தில் வந்தவைகள் அனைத்தையும் காலம் தாழ்த்தாமல் செயல் படுத்த வேண்டும்.  வங்கிகள், காலம் தாழ்த்தாமல், ராணுவ பென்சன் பற்றி நன்கு  தெரிந்தவர்களை ஒப்பந்த அடிப்படையிலாவது பணியில் அமர்த்தி அனைவருக்கும் இந்த அரசாணையின் படி பயன்கள் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதுதான் எமது தாழ்மையான வேண்டுகோள்.

காலம் கடந்து வந்தாலும் அனைவரது கஷ்டங்களையும் ஓரளவு குறைக்கும் ஆணையிது என்பது உண்மை.

நாடு காத்த வீரர்களின் நலன் காத்த அரசுக்கு எமது நன்றி.


No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...