எக்ஸ் வேல் அறக்கட்டளையின் உதவி |
CDA சர்குலர் 547ன் படி 01.01.2006க்கு முன்னதாக இறந்துபோன தரைப்படை
(Army) பென்சனர்களின் விதவைகளுக்கு கிடைக்கவேண்டிய அரியர் தொகை.
ஹவில்தார் குரூப் X Rs.70,068
நாயப் சுபேதார் குரூப் X Rs.44772
நாயாப் சுபேதார் குரூப் Y Rs.36,066
நாயாப் சுபேதார் குரூப் Z Rs.11,815
சுபேதார் குரூப் X Rs.1,01,359
சுபேதார் குரூப் Y Rs.92,653
சுபேதார் குரூப் Z Rs.67780
சுபேதார் மேஜர் குரூப் X Rs.1,30,274
சுபேதார் மேஜர் குரூப் Y Rs.1,01,359
சுபேதார் மேஜர் குரூப் Z Rs.92,653
ஆனரரி லெப்டினென்ட் Rs.1,22,190
ஆனரரி கேப்டன் Rs.1,42,710
இந்த அரியர் தொகையானது
சாதாரண சிப்பாய், நாயக், எக்ஸ் குரூப் ஹவில்தார் அல்லாதவர் விதவைகளுக்கு கிடையாது.
இந்த குடும்ப
பென்சனர்களின் சரியான தகவல், (அதாவது ரேங்க், சர்விஸ், குரூப்) வங்கிகளிடம் இல்லாத
காரணத்தால் வங்கிகளால் இன்னும் அரியர் கொடுக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. (இது ஏற்றுகொள்ள கூடியது அல்ல) . இதை சரி செய்ய அரசோ அல்லது வங்கிகளோ, பெரிய
பெரிய சங்கங்களோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை.
ஆபிசர்கள் அனைவரும்
தாமதமின்றி அவரவர் அரியர் தொகையை வாங்கிவிட்டார்கள்.
ஆனால் இந்த ஏழை, வயது
முதிர்ந்த விதவைகளுக்கு உதவுவார் யாருமில்லை.
அனைவரும் ஒன்று சேர்ந்தால்
நாம் வங்கிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து உடனே பெறலாம். பாதிக்கப்பட்டவர்கள்
இந்த பதிவை படிக்க அவ்வளவாக வாய்ப்பில்லை.
அவர்களுடைய பிள்ளைகள், மற்றவர்கள், சங்கங்கள் முன்வந்தால்தான் ஏதாவது செய்ய
முடியும்.
ஒன் ரேங்க் ஒன் பென்சன்
வந்தாலும், இது கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டும்.
ஆனால் OROP வந்தால் இதை மறந்து விடுவார்கள் என்று வங்கியும், அரசும்
நினைக்கிறது. இது பற்றி மேலும் உதவிக்கு
எக்ஸ் வேல் அறக்கட்டளையை அணுகவும்.
No comments:
Post a Comment