Tuesday, 2 February 2016

சர்குலர் 547 இன் படி யார் யாருக்கு அரியர் கிடைக்கும் ?

ஒரு விதவைக்கு உதவும் எக்ஸ் வெல் அறக்கட்டளை
நிர்வாகி திரு S.கந்தையா அவர்கள்.
சர்குலர் 547 இன் படி யார் யாருக்கு அரியர் கிடைக்கும் ?

பெரும்பாலான ராணுவ பென்சனர்களுக்கு இந்த அரியர் ஏன் கொடுக்கப்படுகிறது என்பதே தெரியாது.  அதிலும் குடும்ப பென்சனர்கள் தனக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாதது போல் இருக்கிறார்கள்.

இந்த அரியர் தொகையானது உயிரோடிருக்கும் OR மற்றும் JCO களுக்கு 01.01.2006 முதல் 30.06.2009 வரைதான் கிடைக்கும்.  30.06.2009 க்கு முன்னதாக இறந்திருந்தால், அதாவது ஒருவர் 01.01.2009 ல் இறந்திருந்தால் அவருக்குரிய அரியர் தொகை 01.01.2006 முதல் 01.01.2009 வரை LTA  ஆக கணக்கிட்டு பென்சன் பெரும் அவர் மனைவிக்கு வழங்கப்படவேண்டும்.  பின்னர் அவர் மனைவிக்கு 02.01.2009 முதல் 23.09.2012 வரை குடும்ப பென்சனுக்குரிய அரியர் தொகையை கணக்கிட்டு வழங்கப்படவேண்டும்.  ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கவேண்டும் என்ற விபரத்தை எங்கள் வலைப்பூவில் கொடுத்துள்ளோம். நன்கு படிக்கவும்.

ஒவ்வொருவரும் தனக்கு கிடைக்க வேண்டிய அரியர் தொகையை தானே கணக்கிட்டு தெளிவாக வங்கிகளுக்கு விண்ணப்பம் கொடுத்தால் மட்டுமே இது கிடைக்கும்.  வங்கிகளே தானாக கணக்கிட்டு வழங்க சாத்தியம் இல்லை என்பது இந்த கட்டுரையாளரின் கருத்து.

சாதாரணமாக குடும்ப பென்சன் பெரும் ஒரு விதவைக்கு அவர் கணவர் பென்சனுக்குரிய அரியர் தொகையை (LTA)  நாமினேசன் அல்லது வாரிசு சான்று இல்லாமல் வழங்கலாம்.  எனவே CDA சர்குலர் 547 ஐயும், அதனுடன் இணைந்த மற்ற சர்குலர்களையும் நன்கு படித்து, தெரிந்தவர்கள் மூலம் சரியாக கணக்கிட்டு பெற வேண்டியது உங்கள் பொறுப்பு. தேவைபட்டால் எக்ஸ் வெல் அறக்கட்டளையை அணுகலாம்.  “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற எங்கள் புத்தகத்தை வாங்கி படித்து பயன்பெறலாம்.

“உங்கள் வழிகாட்டி” என்ற எங்கள் தமிழ் வலைப்பூவை தினமும் படியுங்கள். (Please visit our blog http://www.ungalvalikatti.blogspot.com regularly)  உங்களுக்காகவே எளிய, தமிழில் வெளியிடப்படுகிறது.  உங்கள் பிள்ளைகள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனில் பிளாக்கர் (Blogger) என்ற app ஐ டவுன்லோட் செய்து எங்கள் வலைப்பூவை பார்க்கலாம்.
ஒரு SMS மூலம் உங்களுக்கு சரியான பென்சன் கொடுக்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள, “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற எங்கள் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.

நாங்கள் வெளியிட்டிருக்கும் “நமது மருத்துவ திட்டம், மற்றும் பென்சன் பற்றிய” ஒரு படக்காட்சியை (A slide show on ECHS and Defence Pension) தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பாலி கிளிநிக்குகளுக்கும் அனுப்பியுள்ளோம்.  அதைக்கேட்டு, அங்குள்ள TV யில் ஒளிபரப்ப சொல்லி பாருங்கள்.  அனைத்து வகையிலும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.  எங்கள் பணி எப்போதும் உங்களுக்காக என்பதை மறந்துவிடாதீர்கள்.


No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...