Sunday, 28 February 2016

ஒ.ஆர்.ஒ.பி. அரியர் தொகையையும், புதிய பென்சனையும் தெரிந்துகொள்ள ஒரு எளிய மென்பொருள் இதோ.





ஒ.ஆர்.ஒ.பி. அரியர் தொகையையும், புதிய பென்சனையும் தெரிந்துகொள்ள ஒரு எளிய மென்பொருள் இதோ.
(know your OROP pension and arrears -online)


ஒ.ஆர்.ஒ.பி. அரியர் தொகையையும் 
புதிய பென்சனையும் தெரிந்துகொள்ள

ஒரு எளிய மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது 
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.   
யாருமே எண்ணிப்பார்த்திராத இந்த எளிய முறையை நாட்டிலேயே முதல் முறையாக இந்த தமிழ் வலைப்பூவில் அறிமுகப்படுத்துகிறோம்.


உங்கள் அரியர் தொகையை தெரிந்துகொள்ளவும், 
புதிய பென்சனை தெரிந்து கொள்ளவும், 
கீழ் கண்ட  உங்களைப்பற்றிய தவல்களை 
உரிய கட்டங்களில் உள்ளீடு செய்தால் போதும்.  
 முடிவில் உங்கள் அரியர் தொகையும், 
புதிய பென்சனும் ஒரு அழகான அச்சிடும் படிவத்தில் கிடைக்கும்.

நீங்கள் உள்ளீடு செய்யவேண்டிய தகவல்கள்:-

உங்கள் ரேங்க்

உங்கள் சர்விஸ் எத்தனை ஆண்டுகள்

உங்கள் குரூப்.

உங்கள் பிறந்த தேதி.
வேறு எந்த பட்டியல்களையும் பார்க்கவேண்டியதில்லை. 
 மேற்கண்ட தகவல்களை உள்ளீடு செய்தவுடன், 
உங்கள் தற்போதைய பென்சன், 
புதிய பென்சன் ஆகியவை திரையில் தோன்றும்.

இப்போது கீழே கொடுத்துள்ள இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும் அல்லது காப்பி செய்து கூகிள் முகவரியில் பேஸ்ட் செய்யவும் அல்லது கர்சரை இந்த லிங்க் லைன் மேல் வைத்து  கிளிக் செய்யதால் “Exwel Trust” என்ற இணைய தளம் திறக்கும்.


இப்போது வலது புறம் உள்ள “Pension Arrears”  என்ற பட்டையை இடைவெளி விட்டு இரண்டு முறை கிளிக் செய்யவும்.  தொடர்ந்து கீழ்நோக்கி சென்றால் இடது புறம்
Defence Pension
Family Pension Arrears
OROP Arrears for Pensioners
OROP for Family Pensioners
OROP with Disabiliy
ஆகிய பட்டைகள் தோன்றும்.  இதில் OROP Arrears for Pensioners என்ற பட்டையை மட்டும் கிளிக் செய்து மேற்குறித்த உங்கள் ரேங்க், சர்விஸ் மற்றும் குரூப் ஆகியவற்றை கொடுத்தால் 
உங்கள் OROP அரியர் தயார்.
தேவைப்பட்டால் அச்சிட்டுக்கொள்ளலாம்.

 click this link 


இந்த இணைய முகவரி பரிசோதனை அளவில் மட்டுமே 
(under test) கொடுக்கப்பட்டுள்ளது.  
 குறைகள் இருப்பின் எங்களுக்கு தெரிவிக்கவும்.

இந்த முறையில் வேறு யாருமே செய்யவில்லை.   
உங்கள் எக்ஸ்வெல் டிரஸ்ட் மட்டுமே 
இதை செய்கிறது என்பதை மனதில் கொள்ளவும்.

Cir.547 அரியர், குடும்ப பென்சனர் அரியர், மற்றும் டிசபிளிட்டி அரியர் ஆகியவற்றையும் பரிசோதித்து பார்த்து எங்களுக்கு 
நிறை குறைகளை தெரிவிக்கவும்.

முழுமையான மென்பொருளை எங்கள் இணைய தளத்தில் விரைவில் வெளியிட உள்ளோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை எங்கள் esmwelfare@yahoo.in என்ற ஈ மெயில் முகவரிக்கு அனுப்பவும். நன்றி.

 
நீங்கள் எந்த பட்டியலையும் பார்க்காமல் உங்கள் 


பென்சன் அரியர் தொகையை தெரிந்து கொள்ளலாம்.

           

Saturday, 27 February 2016

ஒ.ஆர்.ஒ.பி. அரியர் வழங்க வங்கிகளுக்கு ஏன் இந்த தாமதம் ?


ஒ.ஆர்.ஒ.பி. அரியர்  வழங்க வங்கிகளுக்கு ஏன் இந்த தாமதம் ?

ஒரு இராணுவ பென்சனருக்கு ஒ.ஆர்.ஒ.பி. அரியர் வழங்க வங்கிகள் தாமதப்படுத்துவர்க்கு தகுந்த காரணம் இல்லை. பல லட்சக்கணக்கான இராணுவ பென்சனர்களின் கனவை நினைவாக்கும் இந்த ஆணையின் பயன், வங்கிகள் பணமாக பட்டுவாடா செய்வதில்தான் இருக்கிறது.
வங்கிகள் இப்படி தாமதப்படுத்துவதில் நியாயம் இல்லை.
இந்த ஒ.ஆர்.ஒ.பி. அரியர் வழங்க தேவையானவை
ஒரு பென்சனருடைய ரேங்க்
எத்தனை ஆண்டு சர்வீஸ்
அவருடைய குரூப்.
பிறந்த தேதி
தற்போது வழங்கப்படும் அடிப்படை பென்சன்.
இவை மட்டும்தான் தேவை.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ராணுவ பென்சன் பட்டுவாடா செய்யும் வங்கிகளுக்கு அந்த பென்சனரை பற்றி மேற்கூறிய தகவல்கள் இல்லாமலா இத்தனை ஆண்டுகள் பென்சன் கொடுக்கிறார்கள்?
இத்தனை ஆண்டு தணிக்கையாளர்கள் என்ன செய்தார்கள் ?
CDA சர்குலர் வெளிவந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. வங்கிகள் மௌனமாக இருக்கிறது. என்ன காரணம் ?
இது விஷயத்தில் வங்கிகளுக்கு உதவ பல தன்னார்வ
முன்னாள்இராணுவத்தினர்கள் உள்ளனர். இவர்கள் உதவியை நாட வங்கிகளுக்கு ஏன் தயக்கம் ?
தற்போது பொதுவாக, எல்லா வங்கிகளும் அதிக பணி சுமையை வெளி ஆட்களிடம் ஒப்பந்த அடிப்படையில் செய்வதே வழக்கமாகிவிட்டது.  இந்த பணியையும்  ஏன் செய்யக்கூடாது ?
தாமதமாக வழங்கப்படும் அரியர் தொகைக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வட்டியை வழங்குமா ?
இப்படி பல கேள்விகளுக்கு வங்கிகளிடம் பதில் இல்லை.
நாட்டைகாத்த வீரர்களின் நலன் காப்பது அரசின் கடமை.  ஆணை வெளியிட்டால் மட்டும் போதாது.  வங்கிகளுக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்து அனைவருக்கும் உடனே அரியர் வழங்க ஆவன செய்யவேண்டும்.
இதுவே எமது தற்போதைய கோரிக்கை.
பல ஆயிரக்கணக்கான வயதான பென்சனர்கள் இந்த அரியர் தொகையை ஒவ்வொரு நாளும் எதிபார்த்து இருக்கின்றனர்.

வங்கிகள் அவர்களை ஏமாற்றிவிடக்கூடாது.
வங்கிகள் விரும்பினால் இரண்டே நாளில் ஒரு மென்பொருள் உருவாக்கி வங்கிகளுக்கு கொடுத்து உதவ  பலர் தயாராக உள்ளனர்.
வங்கிகள் சிந்திக்க வேண்டும்.

நம்மை பாதுகாக்க எல்லையில் கண் கொட்டாமல் காவல் புரியும் ராணுவ வீரனை எண்ணிப்பாருங்கள்.
அவன் மனம் உடைந்து திரும்பி வந்தால் என்ன ஆகும் ?

எங்களை மறந்தால் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை 

Friday, 12 February 2016

ஒன் ரேங்க் ஒன் பென்சன் பட்டியல்கள்



“தெரிந்து கொள்ளுங்கள்” என்ற  புத்தகத்துடன்
ஒன் ரேங்க் ஒன் பென்சன் பட்டியல்கள் இணைத்து அனுப்பப்படும்.
புத்தகம் வேண்டுவோர் தங்களுடைய
1.ரேங்க்,
2. சர்விஸ்
3. குரூப்
4.டிசபிளிட்டி சதவீதம்
5.பிறந்த தேதி
6.கணவர் இறந்த தேதி.
ஆகியவற்றை வரிசைப்படி எஸ்.எம்.எஸ். அனுப்பினால்
புத்தகத்துடன் உங்களுக்கு கிடைக்க வேண்டிய
ஒ.ஆர்.ஓபி அரியர் தொகையையும்
ஏப்ரல் 2016 ல் உங்களுக்கு கிடைக்க வேண்டிய
புதிய பென்சனையும் கணக்கிட்டு, அச்சிட்டு
புத்தகத்துடன் அனுப்பி வைக்கப்படும்.
உடனே ரூ.150 மணி ஆர்டர் அனுப்புங்கள்.
“எனக்கு ஒ.ஆர்.ஒபி அரியர் எவ்வளவு கிடைக்கும்” என்று
தெரிந்து கொள்ள நீங்கள் யாரிடமும் போய் கெஞ்ச வேண்டாம்.
உங்கள் கை பேசி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு குடும்ப பென்சனருக்கும்
குறைந்தது ரூ.21,317 அரியர் தொகை கிடைக்க வேண்டும்.
நீங்கள் விழிப்புடன் இருந்தால்தான் கிடைக்கும்.
இதை படிப்பவர்கள் இன்டர்நெட் வசதி இல்லாதவர்களுக்கு சொல்லுங்கள்.
நம் இன மக்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.
இராணுவ பென்சன் பற்றி தெரிந்து கொள்ள ஆசைபடுபவர்களுக்கு
“தெரிந்து கொள்ளுங்கள்” என்ற எங்கள் புத்தகம் பெரிதும் துணை புரியும்.
தெரிந்து கொள்வது சிறந்த ஆயுதம்.
தெரியாது என்று சொல்வது அவமானம்.
எனவே விரைந்து செயல்படுங்கள்.
எங்கள் முகவரி
எக்ஸ்வெல் அறக்கட்டளை,
15 மிலிடரி லைன்ஸ், சமாதானபுரம்,
பாளையம்கோட்டை, திருநெல்வேலி 627002.

தொலைபேசி: 0462-2575380, 9894152959.

OROP பென்சன் பட்டியல்கள்  இணைப்பு 

உங்கள் முகவரியை எஸ்.எம்.எஸ்.செய்யவும் 



Monday, 8 February 2016

JCO மற்றும் OR களின் பென்சனுக்கு பட்டியல் 7 & 8 ன் முக்கியத்துவம்.

முழுமையான OROP  இன்னும் கிடைக்கததால்
நமது போராட்டம் தொடர்கிறது.
JCO மற்றும் OR களின் பென்சனுக்கு பட்டியல்
7 & 8 ன் முக்கியத்துவம்.

O.R.O.P. பட்டியல்களில் JCO மற்றும் OR களுக்கு பென்சனை நிர்ணயிக்கும் பட்டியல் 7 & 8  (Tables 7 & 8 ) எந்த அடிப்படையில் கணக்கிடப்பட்டது என்பதை நம்மால் கண்டறிய முடியவில்லை.  ஆனால் இதற்க்கு ஒரு கணக்கு இருக்கிறது.  இதை அரசு நமக்கு தெளிவு படுத்த வில்லை என்பதுதான்  வருத்தம்.

2013 ல் பணி விலகி வந்த அத்தனை பேருடைய பென்சனில் குறைந்தது, அதிகமானது ஆகிய இரண்டின் சராசரியை 1.7.2014 முதல் OROP பென்சனாக அனைத்து பென்சனருக்கும் நிர்ணயித்திருப்பதாக சொல்லப்படுகிறது.  இந்த முக்கியமான அரசின் கொள்கை முடிவை 2014 அல்லது 2015 இக்கு மாற்றும்படி எவ்வளவோ போராடியும் அரசு செவி சாய்க்கவில்லை.

தற்போது ஒரு இராணுவ பென்சனருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வகையான பென்சனுக்கும் இதுவே அடிப்படையாக அமைந்துள்ளது.

இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தொகையிலும் கீழ் கண்ட சதவீதப்படி மற்ற பென்சன்கள் நிர்ணயிக்கபடுகிறது என்பதுதான் முக்கியம்.

பட்டியல் எண் 7 ன் படி 18 வருட சர்விஸ் முடித்த  X குரூப் ஹவில்தாருக்கு சர்விஸ் பென்சன் ரூ.8925 என நிர்ணயிக்கப்பட்டு இந்த
ரூ.8925 ல்  60 % குடும்ப பென்சன் ரூ.5335 ஆகவும்,
ரூ.8925 ல் 100கூடுதல் பென்சனாக (Enhanced pension) ரூ.8925 ஆகவும்,
ரூ.8925 ல் 120% ஸ்பெஷல் பாமிலி பென்சன் ரூ.10,710 ஆகவும்,
ரூ.8925 ல் 200லிபரலைஸ்டு  பென்சன் ரூ.17850 ஆகவும்,
ரூ.8925 ல் 60% இயலாமை பென்சன் (100%) ரூ.5355 ஆகவும்,
ரூ.8925 ல் 200% போர் காய பென்சன் (Invalided out) ஆகவும்,
ரூ.8925 ல் 120% போர் காய (Discharge ) பென்சன் ரூ.10710 ஆகவும்,
வழங்கப்படுகிறது. ஆக இந்த ஒரு பட்டியலில் நிர்ணயித்த தொகைதான் மற்ற பென்சன்கள் அனைத்தையும் முடிவு செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

2016 பிப்ரவரியில் ஆணைகளை வெளியிடும் அரசு குறைந்தது 2015 ல் வெளிவருபவர்களுக்கு வழங்கப்படும் பென்சனையாவது முந்தய பென்சனர்களுக்கு நிர்ணயிதிருக்கலாம்.  அதுதான் நியாமானது.  அரசு இதை பரிசீலனை செய்யவேண்டும்.

OROP  வழங்கியதற்கு அரசுக்கு எமது மனமார்ந்த நன்றி.



எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...