Tuesday, 26 January 2016

டிஜிட்டல் லாக்கர் மூலமாக ஆவணங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.


டிஜிட்டல் லாக்கர் மூலமாக ஆவணங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
(Sharing of documents through Digital Locker)

இந்திய அரசு கடைந்த ஜூலை 2015 ல் அறிமுகப்படுத்திய டிஜிட்டல் லாக்கர் வசதியை பலர் பயன் படுத்த தொடங்கி விட்டனர்.  முதல் கட்டமாக அவர்களுடைய ஆவணங்களை ஸ்கேன் செய்து பத்திரமாக வைத்துள்ளனர் அவ்வளவு தான்.  இந்த லாக்கருடைய மிக முக்கியமான உபயோகமான “ஆவணங்களை பகிர்ந்து கொள்ளுதல்” (sharing of documents)  வசதியை யாரும் எந்த அரசு அலுவலககங்களுக்கும் செய்வதாக தெரியவில்லை.  ஆகவே இந்த டிஜிட்டல் லாக்கரின் முக்கிய உபயோகமான ஆவண பகிர்தல் வசதியை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.  அதற்க்கு அரசு உடனே தேவையான சுற்றறிக்கைகளையும் அனைத்து அனுவலகங்களுக்கும் அனுப்ப வேண்டும்.

ஒரு அரசு அலுவலகமோ, ஒரு தனியார் நிறுவனமோ, அல்லது வங்கிகளோ உங்களுடைய அடையாள அட்டையையோ அல்லது வேறு முக்கிய ஆவணங்களை கேட்டால் அவற்றை நாம் டிஜிட்டல் லாக்கர் மூலம் அனுப்பி அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.  இந்த வசதி இதில் உள்ளது. இருந்தும் யாரும் பயன் படுத்துவதாக தெரிய வில்லை.

வங்கிகள் இன்னும் பான் கார்டு ஜெராக்ஸ் கேட்கிறது.  ஏன் அவருடைய டிஜிட்டல் லாக்கரில் இருந்து வங்கி இ-மெயில் ID க்கு அனுப்ப சொல்லி ஏன் கேட்கக்கூடாது ?  இதற்க்கு தனிப்பட்ட அனுமதி தேவை இருப்பதாக தெரியவில்லை.  இதே போல்  KYC ஆவணங்களையும் கத்தை கத்தையாக கேட்கிறது.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், மற்றும் அனைத்து அனுவலகங்களும் ஒவ்வொருவரிடம் இருந்தும் நேரில் ஜெராக்ஸ் காப்பி கேட்பதற்கு பதிலாக அவரவர் டிஜிட்டல் லாக்கரில் இருந்து ஈமெயில் முறையில் பெற்றுக்கொள்ளும் முறையை செயல்படுத்த வேண்டும்.  ஆவணங்களை பத்திரமாக ஸ்கேன் செய்து வைத்துகொள்ள மட்டும் அல்ல இந்த லாக்கர், பல இடங்களுக்கும் ஆவணங்களை தேவையின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளவும் நடைமுறை படுத்த வேண்டும் என்பதே இந்த கட்டுரையாளரின் நோக்கம்.  மேலும் சுய சான்றிதழ் வசதியும் (Self Attestation) தரப்பட்டுள்ளது.  மத்திய அரசு மிகவும் பெருந்தன்மையுடன் அட்டஸ்டேசன் முறையையும், ஆணையர் முன் உறுதி மொழி (Abolition of Attestation and Affidavits from Notary public) முறையையும் ஒழிக்க அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.  ஆனால் தமிழக அரசு இன்னும் இதை முழுமையாக நடைமுறைபடுத்த வில்லை.


மக்களாகிய நாம்தான்  விழிப்புடன் இருந்து அரசை செயல்படுத்த செய்யவேண்டும்.   நமது ECHS கிளினிக்கில் இந்த முறையை பின்பற்ற, கடிதம் எழுதப்பட்டுள்ளது.  வங்கிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...