பென்சன் அரியர்
தொகை வழங்குவதில் வரலாறு காணாத குழப்பம்
ஆறாவது ஊதிய கமிசனின் பரிந்துரைகளை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றி அமுல்
படுத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்து நல்ல தீர்ப்பு
வழங்கியுள்ளது.
அரசு இந்த தீர்ப்பை கட்டாயம் அமுல் படுத்த வேண்டிய நிலையில், தெளிவான
ஆணைகள் பிறப்பிக்காமல் மறுபடியும் ராணுவ பென்சனர்களை பெரும் குழப்பத்துகுள்ளாக்கி,
வங்கிகளையும் செயலிளக்க செய்து விட்டது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண சிப்பாய் பென்சனர்களும் அவர்களுடைய
குடும்ப பென்சனர்கள் மட்டும்தான்.
அதிகாரிகள் எல்லாம் அவரர் அரியர் தொகையை உடனே பெற்று கொண்டார்கள். ஆனால்
இந்த ஏழை சிப்பாய் பென்சனர்கள் செய்வதறியாது சிதைந்து விட்டனர்.
இதற்க்கு என்னதான் தீர்வு ? அரசும், CDA அலகாபாத்தும், வங்கிகளும் கவலை
பட்டதாக தெரியவில்லை.
ராணுவ அமைச்சகம் செப்டம்பர் 3 இம் தேதி 2015 ல் வெளியிட்ட ஒரு
கடிதத்துக்கு CDA முதலில் 547, 548 என
இரண்டு சர்குலர்களை வெளியிட்டது. பின்னர்
அதற்க்கு விளக்கம் கூறி 549, 551, 554 என
மூன்று சர்குலர்களை வெளியிட்டது.
இருந்தும் அனைவருக்கும் அரியர் தொகை கிடைத்த பாடில்லை. இது போன்ற நிர்வாக அவல நிலை எங்கும்
கிடையாது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கிகள் இந்த பென்சன் வழங்கும் பணியை
செய்து வருகிறது. இருந்தும் அவர்களுக்கு இன்று
வரை ஒரு தெளிவு இல்லை. ராணுவ பென்சனை
நிர்ணயிக்கும் அடிப்படை காரணிகளான ரேங்க், சர்விஸ், மற்றும் குரூப் ஆகிய இந்த
மூன்றும் வங்கிகளிடம் சரியான தரவு
தளத்தில் (Data Base) இல்லாததால், இந்த தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டு
இருக்கிறது. எந்த ஒரு வங்கியும் நல்ல ஒரு
தரவு தளத்தை (Data Base) உருவாக்க முயற்சி
எடுப்பதாக தெரியவில்லை. தகவல் தொழில்
நுட்ப துறையில் கொடிகட்டி பறக்கும் இந்தியா இதை ஏனோ கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. CDA அலுவலகத்தின் பணிகளில் அவசர சீர்திருத்தம்
தேவை.
ஒரு கேப்டனின் மனைவி ஒரு சிப்பாய் மனைவியின் பென்சன் வாங்கும் அவல நிலை
இன்றும் தொடர்கிறது. இதற்க்கு ஒரே தீர்வு,
ஒவ்வொரு ராணுவ பென்சனரும், ராணுவ குடும்ப பென்சனரும் தன் பென்சனை பற்றி அவசியம்
தெரிந்து கொள்ளவேண்டும்.
சமீபத்தில் நாங்கள் வெளியிட்டிருக்கும் “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற ராணுவ
பென்சன் வழிகாட்டி புத்தகத்தில் ஒவ்வொரு பென்சனருக்கும் எவ்வளவு அரியர் தொகை
கிடைக்க வேண்டும் என்பதை கொடுத்திருக்கிறோம்.
அந்த புத்தகத்தை வாங்கி படித்து, உங்களுக்கு அந்த அரியர் கிடைக்க
வில்லையென்றால் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு உடனே அரியர் கிடைக்கை அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
ஒரு X குரூப் ஹவில்தார் மனைவிக்கு Rs.70,068, இம் ஒரு ஆனரரி கேப்டன்
மனைவிக்கு Rs.1,42,715 இம் செப்டம்பர் 2015 இல் கிடைத்திருக்கவேண்டும். ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. உடனே செயல்
படுங்கள். புத்தகம் தேவைபடுவோர் தொடர்பு
கொள்ளவேண்டிய தொலைபேசி: 0462-2575380, 9894152959.
ஒவ்வொரு ஆண்டும் பென்சனுக்காக ஒதுக்கப்படும் தொகை முழுவதும் சரியான
முறையில் பட்டுவாடா செய்யப்படாமல் பெரும் தொகை அப்படியே அரசு கஜானாவுக்கு திருப்பி
கொடுக்கபடுவதால் அரசு இதை கண்டுகொள்வதில்லை.
ராணுவ பென்சன் செலவை சரியான படி கணக்கிடவும், தணிக்கை முறையை மேம்படுத்தவும்
சீர்திருத்தம் அவசியம் தேவை.
ஒன் ரேங்க் ஒன் பென்சன் வழங்குவதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதையே இன்னும்
அரசால் துல்லியமாக கணக்கிட முடியவில்ல என்பதுதான் உண்மை.
No comments:
Post a Comment