எக்ஸ் வெல் அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டுவிழா
எக்ஸ் வெல் அறக்கட்டளையின் பத்தாவது ஆண்டுவிழா
விழாவில் செந்தூர் கவிஞர் இல நாதன் அவர்கள்
அரங்கேற்றிய கவிதை உங்கள் பார்வைக்கு..
அறக்கட்டளையின் சேவைக்கு ஒரு பாராட்டு
இந்த கவிதை வடிவில்
காலத்தின் வழி
ஒவ்வொரு நாளும்
உயிர் இருப்பிற்கும்,
உறுப்பிழப்பிர்க்கும்
உத்திரவாதம் இல்லா நிலை ...
ஆரேனும் விரும்புவார்களா ?
அத்தகைய வேலை
ஆகவேதான் இந்த
இராணுவ வீரர்களுக்கு
இந்திய மனங்களில்
இமாலய உயர்நிலை !
வழிகாட்டி இல்லாத பாதை
திசை மாறி
திணற வைக்கும்
வழிகாட்டுதல் இல்லாத
உரிமை வினாக்கள்
ஊமையான உண்மையை
உணரவைக்கும் !
அது காட்சியின் பிழை !
இது காலத்தின் குறை !
முன்னாள்
படை வீரர்களுக்கு
பார்வையிருந்தும்
குருடனின் நிலை
ஆகவே
ஆண்டவன் இட்டான் கட்டளை
அமைந்தது
“எக்ஸ் வெல்”
அறக்கட்டளை !
தேய்வூதியமாகிப்போன
ஓய்வூதிய விகிதங்களை
சரிவிகித சதவீதங்களாய்
சாமான்யர்க்கும்
பெற்றுத்தருவது
இந்த அறக்கட்டளையின் சேவை
!
சரியான சமமான
தீர்வுகளே
இவர்களின் பாதை !
ஆதரவற்ற விதவைகள்
ஆதரவிருந்தும், அனைவரும்
அடையமுடியா
ஓய்வூதிய பலன்கள்
அத்துணைக்கும்
அறக்கட்டளை அளிக்கும்
புத்தகங்களே
புதிய கீதை
அன்று
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்
பேரறிஞரரின் பொன்மொழி !
அது போல்
இன்று
“ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்
இவர்களின் உறுதிமொழி !
கட்டாயம் அது நிறைவேற
காலம் செய்யும் வழி !
நன்றி ! ஜெய் ஹிந்த்
! ..............செந்தூர் இல. நாதன்
ஒரு மாற்று திறனாளி
செல்வி
அபர்ணாவுக்கு நவீன காலணி வழங்கிய
(நடுவில் இருப்பவர் டாக்டர் திருமதி முத்து மீனாள் அவர்கள்)
வள்ளல் திரு C.ராமமூர்த்தி அவர்கள்
சௌர்ய சக்கரா விருதுபெற்றவர்.
No comments:
Post a Comment