ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் (OROP)
ஏன் இந்த குழப்பம்?
சுமார் 28 லட்சம் முன்னாள் இராணுவத்தினரும் 5
லட்சம் விதவைகளும் ஆவலுடன் எதிர்பார்த்த OROP நமது நிதி அமைச்சரின் அறிவிப்பை
கேட்ட பின் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது.
OROP என்றால் என்ன ?
பாதுகாப்பு படை வீரர்கள் ஒய்வு பெறும்போது
வழங்கப்படும் பென்சன் அவர்களுடைய பதவிக்கும், (RANK) பணிபுரிந்த காலத்திற்கும், QUALIFYING
SERVICE) தகுந்தார்போலும், எந்த கால கட்டத்திற்கும் (IRRESPECTIVE OF THE DATE OF
RETIREMENT) ஒரே சீராக இருக்க வேண்டும். காலத்திற்கு ஏற்றால்போல் அதிகரிக்கப்படும்
இந்த பென்சன் அனைவருக்கும் ஒரே சீராக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதுதான் முன்னாள்
இராணுவத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
கடந்த காலங்களில் வெவ்வேறு கால கட்டத்தில் இந்த
OROP கோரிக்கையை கொள்கை அளவில் ஒப்புகொண்டது காங்கிரஸ் அரசும் பாரதீய ஜனதா
அரசும். ஆனால் பல காரணங்களால் காங்கிரஸ்
அரசு இந்த கோரிக்கையை முழுமையாய் நிறைவேற்றாமல் ஒருசில மாற்றங்களை மட்டும்
செய்தது. இதை கண்டு ஏமாற்றமடைந்த IESM
(INDIAN EXSERVICEMEN MOVEMENT) என்ற ராணுவத்தினர் சங்கம் பல போராட்டங்களை
நடத்தியது. பல ஆயிரக்கணக்கான வீர
பதக்கங்களை குடியரசு தலைவரிடம் திருப்பி அளித்தது. பல உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியது. கோரிக்கை மனுக்களை ரத்தத்தில் கையொப்பம் இட்டு
குடியரசு தலைவரிடம் கொடுத்தனர்.
பொது தேர்தல் நேரத்தில் இரு கட்சிகளும் ஏகோபித்த
குரலில் OROP யை முழுமையாய் அமுல் படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தன. காங்கிரஸ் ஒரு அறிவிப்பை ரூ.500 கோடியில்
விட்டு. தோல்வி கண்டது. வெற்றி பெற்ற BJP
அரசு அமுல்படுத்தாமல் வெறும் ரூ.1000 கோடி அறிவிப்பை மட்டும்
வெளியிட்டுள்ளது. முழுமையான OROP யை அமுல்
படுத்த சுமார் ரூ.5000 முதல் ரூ.9000 கோடி
வரை ஆகும் என்று கொஷியார் கமிட்டி அறிவித்துள்ள நிலையில் வெறும் ரூ.1000 கோடி
மட்டும் பட்ஜெட்டில் ஒதுக்குவது எப்படி சரியாகும் என்பது பெரும் கேள்விகுறி.
கொள்கை அளவில் ஒப்புக்கொண்ட அரசு அதை அமுல்
படுத்த ஏன் தயங்குகிறது.? தேர்தல்
கூட்டங்களில் வாக்களித்த பாரதிய ஜனதா கட்சி தற்போது ஏன் பின் வாங்குகிறது.?
நம்மை ஏமாற்ற முயற்சிக்கிறது இந்த அதிகார
வர்க்கமும் அரசியல் கட்சிகளும். நாம்
போராட தயாராக வேண்டும் என்கிறது நமது சங்கம். IESM.
எனவே நாம் முழுமையாக OROP பெற போராட்டத்திற்கு
தயார் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
இந்த OROP யை அமுல் படுத்த எவ்வளவு செலவு ஆகும்
என்பதை தெளிவாக எடுத்து சொல்ல பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை கணக்கதிகாரிகள்
(CGDA, CDA) பல மாறுபட்ட கருத்துகளை கூறி
பிரதமரையும் நிதி அமைச்சரையும் குழப்பி வருகின்றனர். பாதுகாப்பு சம்பந்தமான செலவினங்களை கணக்கிடும்
அலுவலகங்களின் செயல்பாடுகளை முழுமையாக தணிக்கை செய்யவேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது. இந்த அலுவலகங்கள்
துல்லியமாக கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தாத காரணத்தால் கடந்த ஆண்டு நமது
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் திரு A.K. அந்தோணி அவர்கள் ரூ.22000/- கோடி ரூபாயை
நிதி அமைச்சரிடம் திருப்பி கொடுத்துள்ளார் என்பது செய்தி.
தேசிய பாதுகாப்பு ஆகும் செலவினங்களில் சிக்கனம்
கடைபிடிக்க நினைக்கும் அரசு பல லட்சம் கோடிகளில்இழந்த ஊழல் பணத்தை வசூல்
செய்யவும், கருப்பு பணத்தை வசூல் செய்யவும் மறுக்கிறது.
நாட்டின் பாதுகாப்புக்கு பணிபுரியும்,
பணிபுரிந்த வீரர்களின் நலன் காக்க தவறினால் வருங்காலத்தில் இந்த நாடு எதிர்பாராத
இன்னல்களை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை இந்த அதிகார வர்க்கமும் அரசியல்
வாதிகளும் உணர வேண்டும்.
No comments:
Post a Comment