தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதுதான் நல்ல அரசுக்கு அழகு.
பாரதீய ஜனதா கட்சி தனது
தேர்தல் அறிக்கையின் (ELECTION MANIFESTO) வெவ்வேறு பக்கங்களில் அளித்த
வாக்குறுதிகள் இதோ :-
பக்கம் 2:- “நாம் வெறும் வாக்குறுதி அளிக்கும் அரசாக
இருக்கக்கூடாது. செயல் படுத்தும் அரசாக
இருக்க வேண்டும்”.
பக்கம் 3:- “நமக்கு தேவை ஒரு உறுதியான அரசியல் கட்சியும்,
செயல்படுத்தும் துணிவுகொண்ட நல்ல
தலைமையும் “ வேண்டும்.
பக்கம் 5 & 26 :- அதிகாரிகள் சரியான முடிவெடுக்க
தேவையான அரசியல் ஆதரவு அளிக்கப்படும்.
பக்கம் 10:- “திறந்த புத்தகம் போன்று அரசு இருந்து நிர்வாக
குறைபாடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
பக்கம் 12:- நிர்வாகமும் அதன் உருபினர்களும் அவர்களின்
செயல்பாடுகளுக்கும் மக்களுக்கும் பொறுப்பாக வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சகம்
எடுக்கும் முடிவுகளில் பாதுகாப்பு படையினருக்கும்பங்களிக்க
வேண்டும்.
ராணுவ தீர்பாயங்களில் வழங்கப்படும்
தீர்ப்புகளின் மீது அரசு எடுக்கும் மேல்
முறையீடுகளை குறைக்க வேண்டும். (சுமார்
3000 தீர்ப்புகளை மேல்முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்துக்கு
அனுப்பியுள்ளது ராணுவ அமைச்சகம்.)
ஒன் ரேங்க் ஒன்
பென்சனைபற்றி தேவையான விளக்கம் வந்துவிட்டது. அமைச்சர்களின் வாக்குறுதிகளை
செயல்படுத்த அதிகாரிகள் தயாராக இல்லை. ஒன்
ரேங்க் ஒன் பென்சனை விரைவில் செயல்படுத்த நியமிக்க பட்டுள்ள தலைவி (CHAIRPERSON)
பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேசி முடிவெடுக்க மறுக்கிறார். அமைச்சர்களிடமும் நம் பிரதிநிதிகள் நேரில்
சந்திக்க முடியவில்லை. மீண்டும் நமது
போராட்டங்களை தொடங்கவேண்டுமா ? ஏன் இந்த நிலை ?
.
பாராளுமன்றத்தில்
அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த மறுக்கும் அதிகாரிகளை நிர்பந்திக்க
அமைச்சர்களுக்கு ஏன் தயக்கம் ?
ஆட்சி செய்வது அமைச்சர்களா
அல்லது அதிகாரிகளா ?
நாடு காத்த வீரர்களில்
நலன் காப்பது அரசின் கடமை என்பதை
மறக்கலாகாது.
முன்னாள் இராணுவத்தினரின்
நலன் காக்க உருவாக்க பட்ட DESW
(DEPARTMENT OF EX-SERVICEMEN WELFARE)
அதற்க்கு எதிராக செயல்படுவது வருந்த தக்கது.
எங்கள் அன்புக்குரிய
அதிகார வர்க்கமே “நாடு காத்தவர்களின் நலன் காக்க மறுப்பது உங்கள் பெற்றோர்களை
வஞ்சிப்பதற்கு சமம்”
COURTESY: AERIAL VIEW
No comments:
Post a Comment