Thursday, 1 August 2013

ECHS கேள்வி பதில்


முன்னாள் இராணுவத்தினர் பங்களிப்பு மருத்துவ திட்டம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளும் பதில்களும்.

1. கேள்வி: ஒரு ECHS  உறுப்பினரை சார்ந்தவர் (Dependant) மன நிலை பாதிக்கப்பட்டு, தற்கொலைக்கு முயற்சித்து, அவசர நிமித்தம் (As an emergency case)  ECHS இல் அங்கீகரிக்க படாத மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்றால், எமர்ஜென்சி அட்மிசன் என்ற முறையில் அவர் சிகிச்சைக்கான செலவு வழங்கப்படுமா ?

பதில்: தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு சிகிட்சை அளிப்பது அவசர சிகிட்சை பட்டியலில் இல்லை என்ற காரணத்தால் முதலில் மறுக்கப்பட்டது. பின்னர் பாதிக்கபட்டவர் மன நோயாளி என்பதாலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாலும், சிகிட்சைக்குரிய ஒப்பந்தத்தில் உள்ளதாலும் அவசர சிகிச்சையாக ஏற்கப்பட்டு, முழுமையான விளக்கத்துடன் அவசர சிகிட்சைக்கு பரிந்துரை கடிதம் வழங்கலாம் எனவும், அங்கீகரிக்க படாத மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றாலும், அவசர சிகிட்சைக்குரிய செலவு தொகையை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு வழங்கலாம் எனவும் விளக்கம் வந்துள்ளது.(தற்கொலைக்கு முயற்சித்து தோற்றவர்களை மருத்துவ மனைகள் பரிவோடு அணுகுவதில்லை என்பது பொதுவான அபிப்பிராயம்.  இது போன்ற மருத்துவ உதவி திட்டங்களும் கைவிடலாகாது என்பது இதை எழுதுபவரின் நோக்கம்.)

(Authy:B/49778/AG/ECHS/Policy  13 Nov 2007.)

2. கேள்வி: தீராத நோய்களினால் (Chronic desease)  அவதிப்படுவர்களுக்கு ஒரே சமயத்தில் 90 நாட்களுக்கு மொத்தமாக மருந்து வழங்க அனுமதி உண்டா ?

பதில்: ஆம். அவருக்கு சிகிட்சை அளிக்கும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒரு நோயாளிக்கு 90 நாட்களுக்கு மொத்தமாக மருந்து மாத்திரைகள் வழங்கலாம்.

3. கேள்வி: வெளி நாடுகளுக்கு பயணம் செய்யும் ECHS  உறுப்பினர்களுக்கு 90 நாட்களுக்கும் மேலாக மருந்து மாத்திரைகள் வழங்க அனுமதி உண்டா?

பதில்: ஆம்.  சில வெளி நாடுகளில், அந்த நாட்டிலுள்ள மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், நாமாக எந்த மருந்து மாத்திரைகளும் வாங்கமுடியாது என்ற காரணத்தினால், நீண்ட நாட்கள் வெளி நாடு பயணம் செய்பவர்களுக்கு நமது விசேட மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் கூடுதல் நாட்களுக்கு மருந்துகள் வழங்கலாம்.

(Authy: B/49762/AG/ECHS 02/06/2011)

4. கேள்வி: ஒரு ECHS  உறுப்பினர் சாதாரணமாக எத்தனை நாட்கள் மருத்துவ மனையில் இருந்து சிகிட்சை பெறலாம்?

பதில்: அதிகபட்சமாக  12 நாட்கள் மட்டுமே ஒரு மருத்துவ மனையில் தங்கி சிகிட்சை பெற அனுமதி அளிக்கபடுகிறது.  அதற்க்கு மேல் தேவை பட்டாள் சிகிட்சை அளிக்கும் மருத்துவ மனைகள் நோயாளியின் நிலை பற்றி தெளிவு படுத்தி உரிய அனுமதி பெறவேண்டும்.

சாதாரணமாக  60 நாட்களுக்கு மேல் மருத்துவ மனையில் தங்கி சிகிட்சை பெற அனுமதி அளிக்க படுவதில்லை. ஒரு நோயாளியை கூடுதல் நாட்களுக்கு தங்க வைத்து சிகிட்சை அளிக்கவேண்டிய பொறுப்பு அந்தந்த மருத்துவ மனையை சார்ந்தது.  உரிய அனுமதி பெற வேண்டியது மருத்துவ மனையின் பொறுப்பு.

5.கேள்வி: ஒரு ECHS  உறுப்பினர் தான் விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைக்கு செல்லலாமா?

பதில்: ஆம்.  தான் விரும்பும் மருத்துவ மனைக்கு செல்லலாம்.  80  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்வீஸ் மருத்துவ மனையில் சிகிட்சை பெற முன்னுரிமை அளிக்கப்படும்.

                                                                                           கேள்வி பதில் இன்னும் வரும் .........

ECHS TOLL FREE NO.1800-114-115  FROM 0900 HRS. TO 1700 HRS.

MANAGING DIRECTOR, ECHS MAJ.GEN.J.GEORGE, MOBILE: 08527794678

  


No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...