பென்ஷன் சேமிப்பு கணக்கை ஜாயின்ட் அக்கௌன்ட் ஆக
வைத்துக்கொள்வதில் உருவாகும் புதிய பிரச்சனைகள்.
ஒரு பென்சனர் தற்போதைய மத்திய அரசின் ஆணைகளின் படி
தன் பென்சன் கணக்கை ஜாயின்ட் அக்கௌன்ட் ஆக
வெகு எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால் பின்னொரு காலத்தில் கணவன்,
மனைவி
இருவருக்குள் ஏதேனும்
பிரச்சனை வந்து இந்த கணக்கை மறுபடி
தனி கணக்காக மாற்ற வேண்டும்
என்று
கணவன் நினைத்தால், அதற்க்கு
மனைவியின் கையெழுத்தையும் வங்கி கேட்கும்
என்பதை
தெரிந்து கொள்ள வேண்டும்.
மனைவி கையொப்பமிட மறுத்தால்
தனி கணக்காக மாற்ற
முடியாது.
இந்த நிலையில் சில விவரமான
மனைவி,
கணவனுக்கு முன்னதாகவே பென்ஷனை எடுத்துக்கொண்டு
கணவனை அம்போ என்று விட்டு
விடுவதும்
நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
சில வங்கிகள் ஓரளவுதான் இவர்களை
சமாதானப்படுத்த முடியும்.
நிரந்தர
தீர்வுக்கு என்ன செய்வது
என்பதுதான் தற்போதைய கேள்வி.
1. நன்கு யோசித்து, மிகவும் அவசியம்
என்றால் மட்டுமே
ஜாயின்ட்
அக்கௌன்ட் ஆக மாற்ற வேண்டும்.
2. இது போன்ற பிரச்சினைகள் வந்துவிட்டால்,
உடனே வேறு
ஒரு வங்கியில்
சேமிப்பு கணக்கு தொடங்கி, உங்கள் பென்ஷனை
அந்த வங்கிக்கு மாற்ற
சொல்லி
விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.
தேவைபட்டால்
உங்கள் ரெகார்ட்
ஆபிசுக்கும் தெரிவிக்க வேண்டும்.
3. பென்ஷனை எடுத்து செலவு செய்யும் விஷயத்தில்,
அன்பும், பாசமும், கண்டிப்பும்,
சிக்கனமும் மிகவும் அவசியம்.
4. வயதான பென்சனர்கள் அவசர செலவுக்கு
கொஞ்சம் ரொக்க
பணத்தை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.
எந்த சூழ்நிலையிலும் ஒரு பென்சனர், நாம் தான்
குடும்ப தலைவன் என்ற அந்தஸ்தை விட்டுக்கொடுக்கலாகது. ஒருவேளை அப்படி ஒரு சூழ்நிலை உருவாவது போல் தோன்றினால்
அதை முளையிலேயே கிள்ளி விடவேண்டும்.
No comments:
Post a Comment