Tuesday, 30 July 2013

பென்சன் அரியர் இன்னும் வழங்கவில்லை


 
பென்சனர் குறை தீர்க்கும் கூட்டம்.
மேம்படுத்த பட்ட பென்சன் விகிதங்களை
இன்னும் வங்கிகள் வழங்க வில்லை.

இராணுவ பென்சனர் அனைவருக்கும் 24.09.2012 முதல் பென்சன் மாற்றி அமைக்க பட வேண்டும் என்று கடந்த 17.01.2013 அன்றே அரசாணைகள் வெளியிடப்பட்டன.  தற்போது ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் பெரும்பாலான இராணுவ பென்சனர்களுக்கும், குடும்ப பென்சனர்களுக்கும் இந்த பென்சன் மாற்றி அமைக்க பட வில்லை.

அனைத்து வங்கிகளும் பென்சன் கணக்கிடும் பணிகளை தனது தலைமை அலுவலகத்துக்கு கொண்டுசென்று விட்டதால், பென்சனர் குறைகளை அருகிலுள்ள கிளைகள் கண்டுகொள்வதில்லை.  பெரும்பாலான பென்சனர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சிவனே என்று இருந்து விடுகின்றனர்.  வங்கிகளும் கண்டு கொள்ளாமல் அப்படியே பென்ஷனை மாற்றி அமைக்கமால் விட்டு விடுகின்றன.

தமிழ் நாட்டில் குறிப்பாக இந்தியன் வங்கியும், இந்தியன் ஓவர் சீஸ் வங்கியும் இந்த பென்சன் மாற்றி அமைக்கும் பணியை ஆர்வமுடன் செய்வதாக தெரிய வில்லை.  புகார்களை கண்டு கொள்வதே இல்லை.  தாமதமாக வழங்கப்படும் பென்சனுக்கும், நிலுவை தொகைக்கும் வங்கிகள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாரத ரிசர்வ் வங்கி கடிதங்கள் அனுப்பியும், பாங்கிங் ஆம்புட்ஸ்மன் என்ற ஒரு குறை தீர்க்கும் அமைப்பு இருந்தும், இந்த பென்சன் வழங்கும் வங்கிகள் கண்டு கொள்வதே இல்லை. இது போன்ற நிர்வாக குறைபாடுகள் வங்கிகளின் பெருமையை சீர் குலைக்கும் என்பதை மறக்கலாகாது.

பெரும்பாலான குடும்ப பென்சனர்கள் வயதானவர்கள்.  அவர்கள் உயிருடன் இருக்குபோது கொடுக்கப்படாத இந்த கூடுதல் பென்சன் அவர்கள் இறந்த பின் அப்படியே மறைந்து போகிறது. 
   
இராணுவ குடும்ப பென்சனர்களுக்கு தன் கணவரின் பதவி, பணிக்காலம், பணி பிரிவு போன்ற முக்கிய தகவல்கள் எதுவும் தெரிவதில்லை. ஆனால் காண்டீனில் தன் கணவருக்கு கொடுக்கப்படும் கோட்டாவை மட்டும் நன்கு தெரிந்து கொள்கின்றனர் என்பதுதான் கொடுமை. இந்த கட்டுரையாளர் கடந்த இருபத்தைந்து ஆண்டு அனுபவத்தில் இதை எழுதுகிறார் என்பதை இதை படிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்த அரசாணைகளின்படி ஒரு ஆனரரி கேப்டன் மனைவிக்கு இன்றைய தேதியில் Rs.25,008  கூடுதல் பென்சன் நிலுவை தொகையாக (Pension arrears) வழங்க பட்டிருக்க வேண்டும்.  அதே போல் ஒரு ஆனரரி லெப்டினென்ட் மனைவிக்கு Rs.21,412 நிலுவை தொகையாக வளங்கபட்டிருக்க வேண்டும்.  ஆனால் இன்னும் வழங்கப்பட வில்லை.   இந்த சூழ்நிலையில் இந்த வங்கிகள் நியாயமான முறையில் நஷ்ட ஈடாவது வழங்க வேண்டும்.  நஷ்ட ஈடு முறையே Rs.1,047 மற்றும் Rs.885 வழங்க வேண்டும்.  ஆனால் இந்த வங்கிகள் கண்டு கொள்வதே இல்லை.

இதற்க்கு என்னதான் தீர்வு ?  உண்மையில் வங்கிகள் பென்சனர்களின் ஒற்றுமையை பரிசோதித்து பார்க்கின்றன.  பல்லாயிர கணக்கான இராணுவ பென்சனர்கள் அமைதியாக இருப்பதாலும், பென்சன் பற்றி விஷயங்களை தெரியாமல் இருப்பதினாலும்,  பென்சனர் சங்கங்களும் ஆர்வமுடன் செயல் படாத காரணத்தினால் இதுபோன்ற அநீதிகள் நடக்கிறது.  ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து அந்தந்த வங்கிகள் முன் போராடினால்தான் நீதி கிடைக்கும்.  செய்தால் பலன் கிடைக்கும்.  இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.   இது போன்ற நிலை தொடரும்.  ஒரு சமுதாயம் வளர விழிப்புணர்வு வேண்டும்.

1 comment:

  1. Sir,
    1. You are published a good news for the veteran.
    We arrange for a meeting for this problems for the veterans for their welfare.

    Thanks & Regards

    ReplyDelete

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...