Monday, 29 July 2013

குடும்ப பென்சனர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது.



இராணுவ குடும்ப பென்சனர்கள் அவசியம்
தெரிந்து கொள்ள வேண்டியது

பெரும்பாலான இராணுவ பென்சனர்கள், சிப்பாய், நாயக், ஹவில்தார் ஆகிய பதவியிலிருந்து பணி விலகி வந்தவர்களாக இருக்கிறார்கள்.  இவர்களது குடும்ப பென்சன் சில தவறான கணக்கீடுகளால் வெறும் Rs.3,500/-  என நிர்ணயிக்க பட்டது.

இந்த தவறான கணக்கீடு 01.01.2006  முதல் 23.09.2012  வரை அமுலில் இருந்தது.   அதாவது 24  ஆண்டு பணிபுரிந்த ஒரு சிப்பாய் மனைவிக்கும் ஒரு ஹவில்தார் மனைவிக்கும் வெறும் Rs.3,500/-  தான் வழங்கப்பட்டது.  இதை சரி செய்ய பல கோரிக்கைகளை அரசிடம் சமர்பித்து, கடைசியில் 24.09.2012  முதல் மட்டுமே கூடுதல் பென்சன் வழங்க ஆணைகள் பிறப்பித்தது.

இந்த அரசாணையின் படி அனைத்து குடும்ப பென்சனர்களுக்கும் 24.09.2012 முதல் பென்சன் மாற்றி அமைக்க படவேண்டும். ஒரு குடும்ப பென்சனருக்கு இப்போதைய சரியான பென்சன் வழங்க கீழ் கண்ட முக்கிய காரணிகள் வங்கிகளுக்கு அவசியம் தேவை.

குடும்ப பென்சனரின் கணவரின் பதவி (Rank)
பணி புரிந்த காலம். (Qualifying Service)
பணி பிரிவு (குரூப்) (Group)

மேற்கண்ட இந்த காரணிகள் அடிப்பைடையில் CDA (P)  தெளிவான பென்சன் பட்டியல்கள் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளன.

இதன்படி 24 ஆண்டு சர்வீஸ் முடித்த ஒரு   Y  குரூப் ஹவில்தார் மனைவிக்கு வெறும் Rs.3500  ஆக இருந்த பென்சன் 24.09.2012  முதல் Rs.4425/_  ஆக உயரும்.  ஜூலை மாதம் வரை பென்சன் அரியர்  Rs.16,799/-  வரை கிடைக்கும்.  இது வரை பென்சன் மாற்றி அமைக்க படாதவர்கள், தங்கள் கணவரின் பதவி, சர்வீஸ் மற்றும் குரூப் இவற்றை உடனே தனது வங்கிக்கு தெரியபடுத்தவும்.

எக்ஸ் வெல் அறக்கட்டளை தனது பென்சன் வழிகாட்டி புத்தகத்துடன் இந்த பென்சன் பட்டியல்களை அச்சிட்டு இலவசமாக வழங்குகிறது.  ஒவ்வொரு பென்சனரும் அவசியம் வைத்துகொள்ளவேண்டிய புத்தகம் இது.  மேலும் உதவிக்கு எக்ஸ் வெல் அறக்கட்டளையை அணுகவும்.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...